தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6394

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை (நஜ்தை நோக்கி மார்க்கப் பிரசாரத்திற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு ‘குர்ரா’ (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் கவலைப் பட்டதைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை. எனவே, ஒரு மாதம் ஃபஜ்ர் தொழுகையில் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதிப் பிரார்த்தித்தார்கள். மேலும், ‘உஸய்யா குலத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்’ என்றும் சொன்னார்கள்.

Book :80

(புகாரி: 6394)

حَدَّثَنَا الحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَاصِمٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً يُقَالُ لَهُمْ القُرَّاءُ فَأُصِيبُوا، فَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ عَلَى شَيْءٍ مَا وَجَدَ عَلَيْهِمْ، فَقَنَتَ شَهْرًا فِي صَلاَةِ الفَجْرِ، وَيَقُولُ: «إِنَّ عُصَيَّةَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ»





மேலும் பார்க்க: புகாரி-1001 .

2 comments on Bukhari-6394

  1. அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய இந்தப் பணிகளுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.என்னுடைய கேள்வி சூணியம் சம்பந்தப்பட்ட (ஹதீஸ் என் 6391)இந்த செய்தி பலமான செய்தியா பலவவீனமான செய்தியா என்பதை குறிப்பிட வில்லை காரணம் என்ன?

    1. கேள்விகளை அதே ஹதீஸில் உள்ள Comment பகுதயில் கேட்கவும். நீங்கள் குறிப்பிடும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் (ஸனத்) எந்த குறையும் இல்லை. கருத்து குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சில அறிஞர்கள் கூறுகின்றர். எனவே, அதை பதிவு செய்துள்ளோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.