பாடம் : 7
(தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதுதல்.
முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றனர்.
‘ருகூவுக்கு முன்பு குனூத் ஓதி இருக்கிறார்களா?’ என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘ருகூவுக்குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம்) நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதினார்கள் என விடையளித்தார்கள்.
அத்தியாயம்: 14
(புகாரி: 1001)بَابُ القُنُوتِ قَبْلَ الرُّكُوعِ وَبَعْدَهُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ:
سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ: أَقَنَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصُّبْحِ؟ قَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ؟ قَالَ: «بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا»
Bukhari-Tamil-1001.
Bukhari-TamilMisc-1001.
Bukhari-Shamila-1001.
Bukhari-Alamiah-946.
Bukhari-JawamiulKalim-951.
- மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு குனூத் ஓதியதாக வந்துள்ளது. இது இன்றைக்கு ‘ஷாஃபி பிறப்பு ஹிஜ்ரி 150
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 54
மத்ஹபினர் ஓதிவரக் கூடிய குனூத் அல்ல. மாறாக இது சோதனையான காலகட்டங்களில் எதிரிகளுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் போது சிறிது காலம் மட்டுமே ஓதியுள்ளார்கள்.
(சோதனைக்கான குனூத் தடை செய்யப்பட்டதா? இதன் விவரம் பார்க்க: புகாரி-7346)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மது பின் ஸீரீன் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12117 , 12698 , 13185 , தாரிமீ-1640 , புகாரி-1001 , முஸ்லிம்-1200 , இப்னு மாஜா-1184 , அபூதாவூத்-1444 , நஸாயீ-1071 , …
- கதாதா —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12064 , 12150 , 12849 , 12990 , 13265 , 13274 , 13601 , 13641 , 13683 , 13725 , 13752 , 13951 , 13952 , 14004 , புகாரி-3064 , 4089 , 4090 , முஸ்லிம்-1205 , 1206 , இப்னு மாஜா-1243 , நஸாயீ-1077 , 1079 ,
- ஆஸிம் பின் ஸுலைமான் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12087 , 12088 , 12655 , 12705 , 13280 , தாரிமீ-1637 , புகாரி-1002 , 1300 , 3170 , 4096 , 6394 , 7340 , 7341 , முஸ்லிம்-1203 , 1204 , இப்னு மாஜா-1183 ,
- இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-13195 , 13255 , 14074 , புகாரி-2801 , 2814 , 4091 , 4095 , முஸ்லிம்-1199 ,
- அத்தைமீ —> அபூமிஜ்லஸ் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12152 , 13120 ,புகாரி-1003 , 4094 , முஸ்லிம்-1201 , நஸாயீ-1070 ,
- ஹம்மாத் பின் ஸலமா —> அனஸ் பின் ஸீரீன் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12911 , 13602 , முஸ்லிம்-1202 , அபூதாவூத்-1445 ,
- ஸாபித் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12402 , 13854 , முஸ்லிம்-3860 ,
- ஹுமைத் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-13158 , 13462 , 13463 , 13464 ,
- ஷுஃபா —> மூஸா பின் அனஸ் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-13724 , முஸ்லிம்-1205 ,
- ஹன்ளலா —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-13431 , 14005 ,
- ஸுமாமா பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)
பார்க்க: புகாரி-4092 ,
- அப்துல் வாரிஸ் —> அப்துல் அஸீஸ் —> அனஸ் (ரலி)
பார்க்க: புகாரி-4088 ,
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-3513 .
3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-797 .
4 . பராஉ பின் ஆசிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-18661 .
5 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-2746 .
6 . குஃபாஃப் பின் ஈமா அல் ஃகிஃபாரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1209 .
more hadees…
சமீப விமர்சனங்கள்