தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6416

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

உலகத்தில் நீ அந்நியனைப் போன்று இரு; அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு என்ற நபிமொழி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.

அத்தியாயம்: 81

(புகாரி: 6416)

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ»

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو المُنْذِرِ الطُّفَاوِيُّ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، قَالَ: حَدَّثَنِي مُجَاهِدٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:

أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ»
وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ»


Bukhari-Tamil-6416.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-6416.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-5964.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-39732-முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அத்துஃபாவீ என்பவர் பற்றி இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியுள்ளார். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    ஆகியோர் இந்தக் கருத்தையே கூறியுள்ளனர். இவரிடமிருந்து இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் ஆகியோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவரை சுமாரானவர் என்ற தரத்தில் கூறியுள்ளார். அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்களும் இந்தக் கருத்தையே கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவர் அறிவிக்கும் செய்திகள் பெரும்பாலும் ஃகரீப் அரிதானவை என்றும்; இவர் தனித்து அறிவிப்பவர் என்றும் கூறிவிட்டு இவரைப் பற்றி முற்கால அறிஞர்கள் யாரும் விமர்சிக்கவில்லை; இவர் சுமாரானவர்; இவரின் ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் இவர் சுமாரானவர், சிறிது தவறிழைப்பவர் என்று கூறியதாகவும், பலவீனமானவர் என்று கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அபூஸுர்ஆ அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 200
    இறப்பு ஹிஜ்ரி 264
    வயது: 64
    அவர்கள் இவர் சில செய்திகளை பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்ற கருத்தில் முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் என்றும் சிறிது தவறிழைப்பவர் என்றும் கூறியுள்ளார். இவர் வழியாக வரும் சில முன்கரான செய்திகளுக்கு இவர் காரணம் அல்ல என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/324, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/404, தஹ்தீபுத் தஹ்தீப்-3/631, தக்ரீபுத் தஹ்தீப்-1/871)

மேலும் பார்க்க: அஹ்மத்-6156 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.