தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

காலகட்டத்தைக் கவனித்து 12 வகை அறிவிப்பாளர்கள்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் அறிவிப்பாளர்களின் காலகட்டத்தைக் கவனித்து அவர்களை 12 வகையினராக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அறிவிப்பாளர்களை எளிதாக அடையாளம் காணுதல் போன்ற இன்னபிற பல பயன்களும் உள்ளன.

1 . நபித்தோழர்கள்.

(அனைத்து வகையினர்)

2 . மூத்த தாபிஈன்கள்.

(நபித்தோழர்களை கண்டு அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்தவர்கள். உ.ம்: இப்னுல் முஸய்யிப், நபி (ஸல்) அவர்களின் காலத்தை அடைந்து அவர்களை நேரடியாக காணாதவர்கள்)

3 . இடைப்பட்ட தாபிஈன்கள். 

( உ.ம்: ஹஸன்-பஸரீ, இப்னு ஸீரீன்)

4 . மூத்த தாபிஈன்களிடமிருந்து அதிகமாக ஹதீஸை அறிவிக்கும் தாபிஈன்கள். 

(நபித்தோழர்களிடமிருந்து குறைவாக அறிவிப்பவர்கள். உ.ம்: ஸுஹ்ரீ, கதாதா)

5 . சிறிய வயது தாபிஈன்கள்.

(ஒன்றிரண்டு நபித்தோழர்களை கண்டவர்கள். ஆனால் அவர்களிடம் ஹதீஸை செவியேற்றது உறுதியில்லாமல் இருக்கும். உ.ம்: அஃமஷ்)

6 . மேற்கண்ட 5 வது வகையினரின் காலத்தை சேர்ந்தவர்கள்;

என்றாலும் இவர்கள் சில நபித்தோழர்களை சந்தித்துள்ளார்கள் என்பது  உறுதியில்லாமல் இருக்கும். உ.ம்: இப்னு ஜுரைஜ்.


7 . மூத்த தபஉத் தாபிஈன்கள்.

(உ.ம்: மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், ஸுஃப்யான் ஸவ்ரீ)

8 . இடைப்பட்ட தபஉத் தாபிஈன்கள்.

(உ.ம்: ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
இப்னு உலைய்யா)

9 . சிறிய வயது தபஉத் தாபிஈன்கள்.

(உ.ம்: யஸீத் பின் ஹாரூன், ஷாஃபிஈ இமாம், அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தயாலிஸீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
அப்துர்ரஸ்ஸாக்)


10 . தபஉத் தாபிஈன்களிடமிருந்து ஹதீஸை கேட்ட மூத்தவர்கள்.

(தாபிஈன்களை சந்திக்காதவர்கள். உ.ம்: அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்)

11 . இடைப்பட்டவர்கள்.

(தபஉத் தாபிஈன்களிடமிருந்து ஹதீஸை கேட்டவர்கள். உ.ம்: துஹ்லீ, புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்)

12 . சிறிய வயதுடையோர்.

(தபஉத் தாபிஈன்களிடமிருந்து ஹதீஸை கேட்டவர்கள். உ.ம்: திர்மிதீ இமாம்; 6 ஹதீஸ்நூல்களை தொகுத்தோர்களின் ஆசிரியர்களில் இறப்பில் பிந்திய சிலர். உ.ம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்களின் ஆசிரியர்கள்)


1 முதல் 2 வரை உள்ளவர்கள் ஹிஜ்ரீ 100 க்குள் மரணித்தவர்கள்.

3 முதல் 8 வரை உள்ளவர்கள் ஹிஜ்ரீ 100 லிருந்து 200 க்குள் மரணித்தவர்கள்.

9 முதல் 12 வரை உள்ளவர்கள் ஹிஜ்ரீ 200 க்குப் பிறகு மரணித்தவர்கள்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார் தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-1/53, தஃரீபு அஹ்லித் தக்தீஸ்-இப்னுஹஜர்-8-10)


இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:

1 . பார்க்க: அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள் .

2 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .


الطبقات عند ابن حجر العسقلاني:

1- الأولى: الصحابة: على اختلاف مراتبهم، و تمييز من ليس له منهم إلا مجرد الرؤية من غيره.
2- الثانية: طبقة كبار التابعين: كابن المسيب، فإن كان مخضرما صرحت بذلك.
3- الثالثة: الطبقة الوسطى من التابعين: كالحسن و ابن سيرين.
4- الرابعة: طبقة تليها: جل روايتهم عن كبار التابعين، كالزهري و قتادة.
5- الخامسة: الطبقة الصغرى منهم: الذين رأوا الواحد و الاثنين، و لم يثبت لبعضهم السماع من الصحابة، كالأعمش.
6- السادسة: طبقة عاصروا الخامسة: لكن لم يثبت لهم لقاء أحد من الصحابة، كابن جريج.
7- السابعة: كبار أتباع التابعين: كمالك و الثوري.
8- الثامنة: الطبقة الوسطى منهم: كابن عيينة و ابن علية.
9- التاسعة: الطبقة الصغرى من أتباع التابعين: كيزيد بن هارون، و الشافعي، و أبي داود الطيالسي، و عبد الرزاق.
10- العاشرة: كبار الآخذين عن تبع الأتباع: ممن لم يلق التابعين، كأحمد بن حنبل.
11- الحادية عشرة: الطبقة الوسطى من ذلك: كالذهلي و البخاري.
12- الطبقة الثانية عشرة: صغار الآخذين عن تبع الأتباع: كالترمذي، و ألحقت بها باقي شيوخ الأئمة الستة، الذين تأخرت وفاتهم قليلاً، كبعض شيوخ النسائي.
و ذكر ابن حجر وفاة كل راو من عرف سنة وفاته منهم:
فإن كان من الطبقة الأولى و الثانية: فهم قبل المائة.
و إن كان من الثالثة إلى آخر الثامنة: فهم بعد المائة.
و إن كان من التاسعة إلى آخر الطبقات: فهم بعد المائتين.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.