தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-14

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 10

இயற்கைக் கடனை நிறைவேற் றும்போது மறைக்க வேண்டி யது தொடர்பாக வந்துள்ளவை.

14 . அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற நாடும்போது, தரையை நெருங்கும்வரை தமது ஆடையை உயர்த்தமாட்டார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இவ்வாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அஃமஷ் வழியாக முஹம்மத் பின் ரபீஆ (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற நாடும்போது தரையை நெருங்கும்வரை தமது ஆடையை உயர்த்தமாட்டார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்ததாக அஃமஷ் வழியாக வகீஉ (ரஹ்) அவர்களும் அபூயஹ்யா அல்ஹிம்மானீ (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளனர். எனினும், (அனஸ் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ள) இவ்விரு ஹதீஸ்களும் (இடையில் அறிவிப்பாளர் விடுபட்ட) முர்சல் வகை ஹதீஸ்களாகும். (ஏனெனில்,) அஃமஷ் அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தோ வேறெந்த நபித்தோழரிடமிருந்தோ எந்த நபிமொழியையும் (நேரடியாக) செவியுற்றதில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், அஃமஷ் (ரஹ்) அவர்கள், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களைப் பார்த்துள்ளார்கள். “நான் அனஸ் (ரலி) அவர்கள் தொழும்போது பார்த்தேன்” என்று கூறி, (அனஸ் (ரலி) அவர்களின்) தொழுகையைப் பற்றி அஃமஷ் அவர்கள் வர்ணித்துள்ளார்கள்.

அஃமஷின் இயற்பெயர் சுலைமான் பின் மிஹ்ரான். (குறிப்புப் பெயர்:) அபூமுஹம்மத் அல்காஹிலீ என்பதாகும். அஃமஷ் அவர்கள், ‘காஹில்’ குலத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையாவார். “என் தந்தை (மிஹ்ரான்) அவர்கள் சிறிய வயதில் (எதிரி நாட்டிலிருந்து) இஸ்லாமிய நாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் ஆவார். அவரை (கூஃபாவாசியான) மஸ்ரூக் (பின் அல்அஜ்தஉ) அவர்கள் தம்முடைய வாரிசாக ஆக்கிக் கொண்டார்கள் என அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(திர்மிதி: 14)

بَابٌ فِي الِاسْتِتَارِ عِنْدَ الْحَاجَةِ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَنَسٍ، قَالَ:

«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ الْحَاجَةَ لَمْ يَرْفَعْ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ».

هَكَذَا رَوَى مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَنَسٍ، هَذَا الْحَدِيثَ

وَرَوَى وَكِيعٌ، وَالْحِمَّانِيُّ، عَنِ الْأَعْمَشِ، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ الْحَاجَةَ لَمْ يَرْفَعْ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ»،

وَكِلَا الْحَدِيثَيْنِ مُرْسَلٌ، وَيُقَالُ: لَمْ يَسْمَعِ الْأَعْمَشُ مِنْ أَنَسِ بْنِ مَالِكٍ، وَلَا مِنْ أَحَدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ نَظَرَ إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: رَأَيْتُهُ يُصَلِّي فَذَكَرَ عَنْهُ حِكَايَةً فِي الصَّلَاةِ وَالْأَعْمَشُ اسْمُهُ سُلَيْمَانُ بْنُ مِهْرَانَ أَبُو مُحَمَّدٍ الْكَاهِلِيُّ، وَهُوَ مَوْلًى لَهُمْ. قَالَ الْأَعْمَشُ: كَانَ أَبِي حَمِيلًا فَوَرَّثَهُ مَسْرُوقٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-14.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.