தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-16

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 12

கற்களால் துப்புரவு செய்தல்.

அப்துர்ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி) அவர்களிடம், “மலஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்துள்ளாராமே?” என்று (இணைவைப்பாளர்களால் பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது. அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள், “ஆம் (உண்மைதான்); மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும், (மலஜலம் கழித்தபின்) வலக்கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், காய்ந்த கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள்” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான ஹதீஸ், ஆயிஷா (ரலி), குஸைமா பின் ஸாபித் (ரலி), ஜாபிர் (ரலி), கல்லாத் அவர்களின் தந்தை சாயிப் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களில் ஸல்மான் (ரலி) அவர்களின் அறிவிப்பே, ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில்
அமைந்ததாகும். இந்த (நபிமொழியில் இடம்பெற்றுள்ள) செய்தியே
பெரும்பாலான நபித்தோழர்கள், அவர்களுக்குப் பின்வந்தவர்கள் ஆகியோரின் கருத்தாகும். “கற்களால் துப்புரவு செய்யும்போது மலஜலத்தின் அடையாளம் நீங்கி விட்டால், அதுவே போதுமானதாகும்; தண்ணீரால் துப்புரவு செய்யாவிட்டாலும் சரியே” என்று அவர்கள் அனைவரும் கருதுகின்றனர்.

அறிஞர்களான ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்), அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கருதுகின்றனர்.

(திர்மிதி: 16)

بَابُ الِاسْتِنْجَاءِ بِالْحِجَارَةِ

حَدَّثَنَا هَنَّادٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ:

قِيلَ لِسَلْمَانَ: قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ شَيْءٍ، حَتَّى الْخِرَاءَةَ، فَقَالَ سَلْمَانُ: أَجَلْ «نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ ببَوْلٍ، أوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ، أَوِ أنْ يَسْتَنْجِيَ أَحَدُنَا بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ، أَوْ أنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ»

وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ، وَخُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، وَجَابِرٍ، وَخَلَّادِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ حَدِيثُ سَلْمَانَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ بَعْدَهُمْ: رَأَوْا أَنَّ الِاسْتِنْجَاءَ بِالْحِجَارَةِ يُجْزِئُ، وَإِنْ لَمْ يَسْتَنْجِ بِالْمَاءِ، إِذَا أَنْقَى أَثَرَ الْغَائِطِ وَالْبَوْلِ، وَبِهِ يَقُولُ الثَّوْرِيُّ، وَابْنُ الْمُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-16.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.