தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-17

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 13

இரண்டு கற்களால் துப்புரவு செய் வது தொடர்பாக வந்துள்ளவை.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். அப்போது “எனக்காக மூன்று கற்களை எடுத்துவாருங்கள்” என்று சொன்னார்கள். நான் இரண்டு கற்களையும் ஒரு கெட்டிச் சாணத்தையும் எடுத்து வந்தேன். அவர்கள் இரண்டு கற்களை (மட்டும்) எடுத்துக்கொண்டார்கள். கெட்டிச் சாணத்தை எறிந்துவிட்டார்கள். மேலும், “இது (சாணம்) அசுத்தமாகும்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1. கைஸ் பின் ரபீஉ, அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்தும்-அபூஇஸ்ஹாக், அபூஉபைதா அவர்களிடமிருந்தும் – அபூஉபைதா, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.

2, 3. மஃமர், அம்மார் பின் ருஸைக் ஆகிய இருவரும் அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்தும்- அபூஇஸ்ஹாக், அல்கமாவிடமிருந்தும்-அல்கமா, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.

4. ஸுஹைர், அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்தும்-அபூஇஸ்ஹாக்,
அப்துர்ரஹ்மான் பின் அல்அஸ்வதிடமிருந்தும்- அப்துர்ரஹ்மான் தம் தந்தை அஸ்வத்  பின் யஸீதிடமிருந்தும்- அஸ்வத், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.

5. ஸகரிய்யா பின் அபீஸாயிதா, அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்தும்- அபூஇஸ்ஹாக், அப்துர் ரஹ்மான் பின் யஸீதிடமிருந்தும்- அப்துர்ரஹ்மான், அஸ்வத் பின் யஸீதிடமிருந்தும்- அஸ்வத், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்களில் குழப்பம் (இள்திராப்) உள்ளது.  நான், அப்துல்லாஹ் பின் அப்திர்ரஹ்மான் அத்தாரிமீ (ரஹ்) அவர்களிடம், “அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் அறிவிப்பாளர் தொடர்களில் எது சரியான அறிவிப்பாளர்தொடர்?” என்று கேட்டேன். அது குறித்து அவர்கள் எந்தத் தீர்ப்பும் கூறவில்லை. நான் இதைக் குறித்து இமாம் புகாரீ (ரஹ்) அவர்களிடம் வினவினேன். அவர்களும் இது குறித்து எந்தத் தீர்வும் கூறவில்லை. ஆனால், அபூஇஸ்ஹாக்கிடமிருந்து ஸுஹைர் அறிவிக்கும் (நான்காவது) அறிவிப்பாளர்தொடரைத்தான் இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் சரியானதெனக் கருதியாகத் தெரிகிறது. ஏனெனில், அந்த அறிவிப்பாளர் தொடரைத்தான் அவர்கள் தமது ஸஹீஹுல் புகாரீயில் இடம்பெறச்செய்துள்ளார்கள்.

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ்களி(ன் அறிவிப்பாளர்தொடர்களில் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் வழியாக இஸ்ராயீல் அறிவிக்கும் ஹதீஸ்தான் என்னிடத்தில் மிகவும் சரியானதாகும். ஏனெனில், அபூஇஸ்ஹாக்கின் அறிவிப்பில் வரும் (மேற்கண்ட) மற்ற அறிவிப்பாளர்களைவிட இஸ்ராயீல் அவர்களே நினைவாற்றல் மிக்கவர் ஆவார். மேலும், அவரது அறிவிப்புக்கு கைஸ் பின் ரபீஉ (ரஹ்) அவர்களின் ஹதீஸ் வலு சேர்க்கிறது.

“அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடமிருந்து ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை நான் கைவிட்டதற்குக் காரணம், இஸ்ராயீல் மீது நான் வைத்திருந்த முழு நம்பிக்கை தான். ஏனெனில் இஸ்ராயீல், அபூஇஸ்ஹாக்கின் அறிவிப்புகளை எனக்கு நிறைவாக அறிவிப்பவராக இருந்தார்” என அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அபூஇஸ்ஹாக்கிடமிருந்து ஸுஹைர் அறிவிக்கும் அறிவிப்பு வலுவானதன்று. ஏனெனில், அபூஇஸ்ஹாக்கின் இறுதிக் காலத்தில்தான் அவரிடமிருந்து ஸுஹைர் ஹதீஸைச் செவியுற்றுள்ளார்.

“ஸாயிதா மற்றும் ஸுஹைர் ஆகிய இருவரும் அறிவித்துள்ள ஒரு ஹதீஸை நீங்கள் செவியுற்றால், அதைப் பிறரிடம் நீங்கள் செவியுறாமல் இருப்பது குறித்துப் பொருட்படுத்த வேண்டாம்; அபூஇஸ்ஹாக்கிடமிருந்து ஸுஹைர் அறிவிக்கும் அறிவிப்பைத் தவிர” என்று அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியதாக அஹ்மத் பின் அல்ஹஸன் அத்திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

அபூஇஸ்ஹாக் அவர்களின் இயற்பெயர், அம்ர் பின் அப்தில்லாஹ் அஸ்ஸபீஈ அல்ஹம்தானீ என்பதாகும்.

(மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் வரும்) அபூஉபைதா தம் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ் எதையும் செவியுறவில்லை. அவருடைய இயற்பெயரும் அறியப்படவில்லை. (இந்தக் கருத்தைப் பின்வரும் தகவல் உறுதி செய்கிறது:)

அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அபூஉபைதாவிடம். “நீங்கள் (உங்கள் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து கேட்ட எதையேனும் நினைவில் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இல்லை” என்றார்கள்.

 

(திர்மிதி: 17)

بَابٌ فِي الِاسْتِنْجَاءِ بِالْحَجَرَيْنِ

حَدَّثَنَا هَنَّادٌ، وَقُتَيْبَةُ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:

خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ، فَقَالَ: «الْتَمِسْ لِي ثَلَاثَةَ أَحْجَارٍ»، قَالَ: فَأَتَيْتُهُ بِحَجَرَيْنِ وَرَوْثَةٍ، فَأَخَذَ الْحَجَرَيْنِ، وَأَلْقَى الرَّوْثَةَ، وَقَالَ: «إِنَّهَا رِكْسٌ»

وَهَكَذَا رَوَى قَيْسُ بْنُ الرَّبِيعِ هَذَا الْحَدِيثَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ نَحْوَ حَدِيثِ إِسْرَائِيلَ، وَرَوَى مَعْمَرٌ، وَعَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَرَوَى زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَرَوَى زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ،

وَهَذَا حَدِيثٌ فِيهِ اضْطِرَابٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَأَلْتُ أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ، هَلْ تَذْكُرُ مِنْ عَبْدِ اللَّهِ شَيْئًا؟ قَالَ: لَا. سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ: أَيُّ الرِّوَايَاتِ فِي هَذَا عَنْ أَبِي إِسْحَاقَ أَصَحُّ؟ فَلَمْ يَقْضِ فِيهِ بِشَيْءٍ، وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا، فَلَمْ يَقْضِ فِيهِ بِشَيْءٍ وَكَأَنَّهُ رَأَى حَدِيثَ زُهَيْرٍ، [ص:27] عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ، أَشْبَهَ، وَوَضَعَهُ فِي كِتَابِ الْجَامِعِ، وَأَصَحُّ شَيْءٍ فِي هَذَا عِنْدِي حَدِيثُ إِسْرَائِيلَ، وَقَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، لِأَنَّ إِسْرَائِيلَ أَثْبَتُ وَأَحْفَظُ لِحَدِيثِ أَبِي إِسْحَاقَ مِنْ هَؤُلَاءِ، وَتَابَعَهُ عَلَى ذَلِكَ قَيْسُ بْنُ الرَّبِيعِ، وسَمِعْت أَبَا مُوسَى مُحَمَّدَ بْنَ الْمُثَنَّى، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مَهْدِيٍّ، يَقُولُ: مَا فَاتَنِي الَّذِي فَاتَنِي مِنْ حَدِيثِ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، إِلَّا لِمَا اتَّكَلْتُ بِهِ عَلَى إِسْرَائِيلَ، لِأَنَّهُ كَانَ يَأْتِي بِهِ أَتَمَّ. [ص:28] وَزُهَيْرٌ فِي أَبِي إِسْحَاقَ لَيْسَ بِذَاكَ لِأَنَّ سَمَاعَهُ مِنْهُ بِأخِرَةٍ، وَسَمِعْت أَحْمَدَ بْنَ الْحَسَنِ، يَقُولُ: سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ، يَقُولُ: إِذَا سَمِعْتَ الْحَدِيثَ عَنْ زَائِدَةَ، وَزُهَيْرٍ، فَلَا تُبَالِي أَنْ لَا تَسْمَعَهُ مِنْ غَيْرِهِمَا إِلَّا حَدِيثَ أَبِي إِسْحَاقَ، وَأَبُو إِسْحَاقَ اسْمُهُ عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ السَّبِيعِيُّ الْهَمْدَانِيُّ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ وَلَا يُعْرَفُ اسْمُهُ

م17- حَدثنا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ, قَالَ: حَدثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ, عن (4) شُعْبَةُ, عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ, قَالَ: سَأَلْتُ أَبَا عُبَيدَةَ بْنَ عَبدِ اللهِ: هَلْ تَذْكُرُ مِنْ عَبدِ اللهِ شَيْئًا؟ قَالَ: لاَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-17.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.