தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1900

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஒரு மனிதர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் வந்து, “எனக்குத் துணைவி ஒருத்தி இருக்கிறாள்; அவளை மண விலக்குச் செய்யுமாறு என் தாய் என்னைப் பணிக்கிறார் (நான் என்ன செய்யட்டும்?)” என்று வினவினார். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

“தந்தை, (தம் பிள்ளைகளுக்குச்) சொர்க்கத்தின் முதன்மையான வாயில் ஆவார். எனவே, விரும்பினால் அந்த வாயிலை நீ பாழாக்கலாம்; அல்லது அதைப் பாதுகாத்துக்கொள்ளலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஅப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் ஐந்தாமவராக இடம்பெறும்) இப்னு அபூஉமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸை அறிவிக்கும்போது சில நேரங்களில், ‘என் தாய் (இன்ன உம்மீ) என்னைப் பணிக்கிறார்’ என்றும், சில நேரங்களில், ‘என் தந்தை (இன்ன அபீ) என்னைப் பணிக்கிறார்’ என்றும் அறிவித்தார்கள்.

அபுத்தர்தா (ரலி) அவர்(களிடமிருந்து அபூஅப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ‘ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

அபூஅப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் பின் ஹபீப் என்பதாகும்.

(திர்மிதி: 1900)

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ،

أَنَّ رَجُلًا أَتَاهُ فَقَالَ: إِنَّ لِيَ امْرَأَةً وَإِنَّ أُمِّي تَأْمُرُنِي بِطَلَاقِهَا، قَالَ أَبُو الدَّرْدَاءِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الجَنَّةِ، فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذَلِكَ البَابَ أَوْ احْفَظْهُ»

قَالَ: وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ: رُبَّمَا قَالَ سُفْيَانُ: إِنَّ أُمِّي وَرُبَّمَا قَالَ: أَبِي،

وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ وَأَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ حَبِيبٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1900.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1818.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28479-அதாஉ பின் ஸாயிப் பிற்காலத்தில் மூளைக்குழம்பியவர் என்றாலும், இவர் மூளைக்குழம்புவதற்கு முன் இவரிடமிருந்து செவியேற்றவர்களான ஸுஃப்யான் ஸவ்ரீ, ஷுஅபா ஆகியோரும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளனர் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸ்னத் ஹுமைதீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-3663 , திர்மிதீ-1900 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.