தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

முர்ஸல், முர்ஸலுல் கஃபீ, தத்லீஸ் இவற்றின் வித்தியாசம்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

முர்ஸல், முர்ஸலுல் கஃபீ, தத்லீஸ் இவற்றின் வித்தியாசம்.

1 . முர்ஸல்.

அறிவிப்பாளர் வரிசையில் எல்லா அறிவிப்பாளர்களும் இடம் பெற்று நபித்தோழர்கள் மட்டும் விடுபட்டிருக்கும் ஹதீஸ்களுக்கு முர்ஸல் எனப்படும். நபித்தோழரை விட்டு விட்டு ஒரு தாபிஈ, நபிகள் நாயகம் (ஸல்) சொன்னதாக இதில் அறிவிப்பார்.

உதாரணம்:

“நபி (ஸல்) அவர்கள் தனது வலது கண்ணில் மூன்று தடவையும், இடது கண்ணில் மூன்று தடவையும் சுர்மா இடுவார்கள்”.

அறிவிப்பவர்: இம்ரான் பின் அபீ அனஸ். நூல்: தபகாத் 1455.

இந்தச் செய்தியில் அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழரைக் குறிப்பிடாமல், “இம்ரான் பின் அபீ அனஸ்” என்ற தாபியியே, நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டது போன்று அறிவிக்கின்றார்.

இது போன்ற செய்திகள் “முர்ஸல்” என்று குறிப்பிடப்படும்.


2 . அறிவிப்பாளர்தொடரில் இன்கிதாஃ – انقطاع – இடைமுறிவு ஏற்படும் சில வகைச் செய்திகளுக்கும் முர்ஸல் என்ற வழக்குச்சொல்லை ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் பயன்படுத்தியுள்ளனர்.

1 . அல்முர்ஸலுல் ஜலீ – المرسل الجلي

ஒரு அறிவிப்பாளர், தான் சந்திக்காதவரிடமிருந்து ஹதீஸை அறிவிப்பது.

  • (இருவரும் சமகாலத்தில் உள்ளவர்களாக இருந்து சந்திக்காமலும் இருக்கலாம்.
  • இருவரும் சமகாலத்தில் இல்லாதவர்கள் என்பதால் சந்திப்பு ஏற்படாமல் இருக்கலாம்.
  • இந்த வகையைப் பற்றி கூறும்போது ஒருவர், தன் காலத்தில் இல்லாதவரிடமிருந்து அறிவிப்பது என்று கூறக்கூடாது.

உதாரணம்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் உள்ளவராக இருந்து நபி (ஸல்) அவர்களை சந்திக்காதவர்கள் அறிவிக்கும் செய்திகள்.

அபூஉஸ்மான் அன்னஹ்தீ, கைஸ் பின் அபூஹாஸிம் போன்றோர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இதில் இவர்கள் தத்லீஸ் செய்துள்ளார்கள் என்று நாம் கூறமாட்டோம்.

இதைப் போன்றே முகள்ரம்-المُخَضْرَم என்ற வகையினர் உள்ளனர். இவர்களுக்கு ஹதீஸ்கலை வழக்கில் முகள்ரம்-المُخَضْرَم என்று கூறப்படும். இவர்கள் அறியாமைக்காலத்தையும், இஸ்லாமியக் காலத்தையும் அடைந்து நபி (ஸல்) அவர்களை சந்திக்காதவர்கள் ஆவர்.

(அரபுஅகராதி வழக்கில் பொதுவாக முகள்ரம்-المُخَضْرَم என்றால் அறியாமைக்காலத்தையும், இஸ்லாமியக் காலத்தையும் அடைந்தவர்கள் என்ற கருத்துக்கு கூறப்படும். இவர்களில் சிலர் நபித்தோழராகவும் இருப்பார்கள். உதாரணம்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி). சிலர் நபித்தோழராக இருக்கமாட்டார்கள்.)

இதில் ஹதீஸை அறிவிப்பவருக்கும், அவரின் ஆசிரியருக்கும் இடையில் சந்திப்பு ஏற்படவில்லை என்பது தெளிவாக எல்லோருக்கும் தெரிவதால் இதற்கு அல்முர்ஸலுல் ஜலீ (முர்ஸல் என்பது வெளிப்படையில் தெரியும் செய்தி) என்று கூறப்படுகிறது.

இதையே பொதுவாக முர்ஸல் என்று கூறப்படுகிறது. நபி (ஸல்) அவர்களின் காலத்தை அடைந்த (அல்லது) அடையாத; நபி (ஸல்) அவர்களை சந்திக்காத தாபிஈன்கள் அறிவிக்கும் செய்திகள் இந்த வகையாகும்.


  • நபி (ஸல்) அவர்களை பார்த்தக் காலத்தில் கஃபிராக இருந்து நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு இஸ்லாத்தை ஏற்றவர்களையும் சிலர் தாபிஈன்கள் வகையில் சேர்க்கின்றனர். இவர்கள் காஃபிராக இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் பற்றிய செய்திகளை நேரடியாகக் கண்டு, முஸ்லிமான பிறகு அறிவித்தால் அவைகளை ஏற்கலாம் என்றே ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுவர். இதை அறிஞர்கள் முர்ஸல்-முத்தஸில் என்று கூறுவர்.
  • இவ்வாறே ஒருவர் நபி (ஸல்) அவர்களை பார்த்தக் காலத்தில் முஸ்லிமாக இருந்து பிறகு மதம் மாறிவிட்டார். நபி (ஸல்) அவர்கள் இறந்தபிறகு இவர் மீண்டும் முஸ்லிமாகிவிட்டார். இவர் நபித்தோழர் என்ற சிறப்பை பெறாதவர் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இவர் முஸ்லிமான பிறகு நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்தியை அறிவித்தால் இதையும் அறிஞர்கள் முர்ஸல்-முத்தஸில் என்று கூறுவர்.

(நூல்: ஷரஹு கிதாபுல் பாஇஸுல் ஹஸீஸ்-அபுல்அஷ்பால்-6/9)

இந்த இரண்டுவகையான முர்ஸல்-முத்தஸிலான செய்திகளை ஆதாரமாக ஏற்கலாம்.

  • இவ்வாறே சிறிய வயது நபித்தோழர்களில் சிலர் அறிவிக்கும் செய்திகளுக்கு முர்ஸலுஸ் ஸஹாபீ என்று கூறப்படும். நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இவர்கள் மூத்த நபித்தோழர்களிடம் இந்த ஹதீஸைக் கேட்டிருப்பார்கள் என்பதின்படி இவர்கள் அறிவிக்கும் செய்திகளையும் சரியானது என்றே ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுவர். இதுவும் முர்ஸல்-முத்தஸிலாகும்.

2 . அல்முர்ஸலுல் கஃபீ – المرسل الخفي

ஒரு அறிவிப்பாளர், தான் சந்தித்த ஆசிரியரிடமிருந்து எந்த ஒரு ஹதீஸ்களையும் செவியேற்காமல் அவரிடமிருந்து அறிவிப்பது.

  • (அதாவது இவர், ஹதீஸை அறிவிக்கும் ஒரு ஆசிரியரை சந்திக்கிறார். ஆனால் அந்த ஆசிரியர் வேறு வேலைகளில் ஈடுப்பட்டுள்ளார். ஹதீஸ்களை அறிவிக்காமல் தன் மாணவர்கள் தன்னிடமிருந்து கேட்டு எழுதிய ஹதீஸ்களை சரிபார்ப்பவராக இன்னபிற வேலைகளில் ஈடுபட்டிருப்பார்.
  • அல்லது இவர், ஹதீஸை அறிவிக்கும் ஒரு ஆசிரியரை சந்திக்கும்போது இவர் ஹதீஸைக் கேட்கும் பருவத்தை அடையாதவராக இருப்பார்.
  • இது போன்ற வேறு சில காரணங்களால் தனது ஆசிரியரை சந்தித்தும் அவரிடமிருந்து ஹதீஸ்களை கேட்டிருக்கமாட்டார்)

இதில் ஹதீஸை அறிவிப்பவருக்கும், அவரின் ஆசிரியருக்கும் இடையில் சந்திப்பு இருந்தும் ஹதீஸைக் கேட்கவில்லை. இது எல்லோருக்கும் தெளிவாக தெரியாது. நுணுக்கமாக ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு மட்டுமே இது தெரிவதால் இதற்கு அல்முர்ஸலுல் கஃபீ (முர்ஸல் என்பது வெளிப்படையில் எல்லோருக்கும் தெரியாத செய்தி) என்று கூறப்படுகிறது.

உதாரணம்: அஃமஷ் அவர்கள், அனஸ் (ரலி), இப்னு அபூஅவ்ஃபா (ரலி?)  ஆகியோரிடமிருந்து அறிவிக்கும் செய்திகள்.

அஃமஷ் அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அனைத்து செய்திகளும் முர்ஸல் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
கூறியுள்ளார்.

இதைப் பற்றி இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், அனஸ் (ரலி) அவர்கள் மக்காவில் மகாமு இப்ராஹீமில் தொழும்போது அஃமஷ் அவர்கள் பார்த்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து ஹதீஸை நேரடியாகக் கேட்கவில்லை. இவர், யஸீத் அர்ரகாஷீ என்பவரிடமிருந்து தான் அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ்களை பெற்றுக்கொண்டார். எனவே இவர், அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததாக ஒரு அறிவிப்பாளர்தொடர் வந்தால் அது முர்ஸல் என்று கூறியுள்ளார்.

(நூல்: ஜாமிஉத் தஹ்ஸீல்-258)

மற்றொரு உதாரணம்: ஸுஹ்ரீ அவர்கள், இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி), அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிக்கும் செய்திகள்; மக்ஹூல் அவர்கள், வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள்.

இதைப் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி), அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) ஆகியோரை ஸுஹ்ரீ அவர்கள் பார்த்துள்ளார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த ஹதீஸ்களையும் செவியுறவில்லை என்று கூறி سماع – ஸிமாஃவை மறுத்து அவை முர்ஸல் என்று கூறியுள்ளார்.

இவ்வாறே மக்ஹூல் அவர்கள், வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) அவர்களை பார்த்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து எந்த ஹதீஸ்களையும் செவியுறவில்லை என்று கூறி سماع – ஸிமாஃவை மறுத்து அவை முர்ஸல் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்மராஸீல்-இப்னு அபூஹாதிம்-800, அல்இலல்-இப்னு ரஜப், பக்: 215)

இந்த வகையை சிலர் தத்லீஸ் என்று கூறினாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்ற அறிஞர்கள் இதை தத்லீஸ் என்று கூறுவதில்லை. தத்லீஸுக்கு வேறு பொருள் உள்ளது என்று கூறி இதை தனி வகையாக குறிப்பிடுகின்றனர்.

  • ஒரு அறிவிப்பாளர், பலமானவர் என்பதுடன், தத்லீஸ் செய்யாதவர் என்றிருந்து; இவர் தனது ஆசிரியரை சந்தித்திருக்க வாய்ப்புள்ளது என்பதுடன், இவர் இன்னாரை சந்திக்கவில்லை என்ற விமர்சனம் இல்லாவிட்டால் இவரின் செய்தி இந்த வகையில் வராது.

3 . தத்லீஸ்

ஒரு அறிவிப்பாளர், தான் சந்தித்த ஆசிரியரிடமிருந்து சில ஹதீஸ்களை நேரடியாக கேட்டிருப்பார். சில ஹதீஸ்களை வேறு அறிவிப்பாளர்வழியாக இந்த ஆசிரியரின் ஹதீஸாக கேட்டிருப்பார்.

இப்போது இவர் ஏதோ சில காரணங்களால் தனக்கு அறிவித்த அறிவிப்பாளரை நீக்கிவிட்டு அவரின் ஆசிரியரிடமிருந்து கேட்டதுபோன்று அறிவிப்பார். இது தத்லீஸ் ஆகும்.


முர்ஸலாக அறிவிப்பவரின் செய்தியில் உள்ள குறையை எளிதாக கண்டுவிடலாம். அதனால் தான் முர்ஸலாக அறிவிக்கும் அறிவிப்பாளர்கள், தத்லீஸ் செய்யும் அறிவிப்பாளர்களை விமர்சிக்கும் அளவுக்கு விமர்சிக்கப்படவில்லை.

தத்லீஸ் செய்பவர், தான் இன்ன ஆசிரியரிடமிருந்து கேட்டுள்ளேன் என்று மற்றவர்களை நம்பவைக்க பார்க்கிறார். எனவே தான் தத்லீஸாக அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்படுகின்றனர். தன் ஆசிரியரிடமிருந்து “நேரடியாக கேட்டேன்” என்ற பொருள்தரும் வார்த்தையை கூறினால் தான் அவரின் செய்தியை ஏற்கவேண்டும் என்று கூறுகின்றனர்.


இதனுடன் தொடர்புடைய தகவல்: முர்ஸல் .



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.