தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-15619

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தமது கோபத்தைச் செயல்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதை மென்று விழுங்கிவிடுகிறாரோ அவரை, வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் மறுமைநாளில் படைப்பினங்களுக்கு முன்னால் அழைப்பான்; (ஹூருல் ஈன் எனும்) சொர்க்கக் கன்னிகளில் அவர் விரும்பும் யாரையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவருக்கு உரிமை அளிப்பான்.

(இவ்வாறே) ஒருவர் அல்லாஹ்விற்குப் பணிந்து (ஆடம்பரமான) ஆடையணிவதற்கு வசதி பெற்றிருந்தும் அதை அணிவதைக் கைவிட்டால், மறுமை நாளில் அவரை அல்லாஹ் மக்கள் முன்னிலையில் அழைப்பான்;
இறைநம்பிக்கைக்கு வழங்கப்படும் (சொர்க்க) ஆடைகளில் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள வாய்ப்பளிப்பான்.

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் அல்ஜுஹனீ (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 15619)

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا زَبَّانُ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«مَنْ كَظَمَ غَيْظَهُ، وَهُوَ يَقْدِرُ عَلَى أَنْ يَنْتَصِرَ دَعَاهُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى عَلَى رُءُوسِ الْخَلَائِقِ، حَتَّى يُخَيِّرَهُ فِي حُورِ الْعِينِ أَيَّتَهُنَّ شَاءَ، وَمَنْ تَرَكَ أَنْ يَلْبَسَ صَالِحَ الثِّيَابِ، وَهُوَ يَقْدِرُ عَلَيْهِ تَوَاضُعًا لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى، دَعَاهُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى عَلَى رُءُوسِ الْخَلَائِقِ حَتَّى يُخَيِّرَهُ اللَّهُ تَعَالَى فِي حُلَلِ الْإِيمَانِ، أَيَّتَهُنَّ شَاءَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-15619.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் முஆத் பின் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸப்பான் பின் ஃபாஇத் —> ஸஹ்ல் பின் முஆத் —> முஆத் பின் அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-15619 , அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-,

  • அபூமர்ஹும் —> ஸஹ்ல் பின் முஆத் —> முஆத் பின் அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-15637 , 15631 , இப்னு மாஜா-4186 , அபூதாவூத்-4777 , திர்மிதீ-2021 , 24812493 , முஸ்னத் அபீ யஃலா-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,

  • ஃபர்வா பின் முஜாஹித் —> ஸஹ்ல் பின் முஆத் —> முஆத் பின் அனஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-,

இப்னு அஜ்லான்…

கைர் பின் நுஐம்…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.