தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-75

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் இருக்கும்போது தமது ஆசனவாய் வழியே வாயு பிரிந்ததைப் போன்று தோன்றினால், அவர் (வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை (உளூ செய்வதற்காக அங்கிருந்து) வெளியேற வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழியாகும்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), அலீ பின் தல்க் (ரலி), ஆயிஷா (ரலி), அபூஸயீத் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாயு பிரிவதன் சப்தத்தைக் கேட்பது, அல்லது நாற்றத்தை உணர்வது ஆகியவை நிகழாமல் உளூ முறியாது என்பதே அறிஞர்களின் கூற்றாகும்.

அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், “உளூ முறிந்து விட்டதா? என எவருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், முறிந்துவிட்டது எனச் சத்தியமிட்டுச் சொல்லும் அளவுக்கு உறுதி ஏற்பட்டால் தவிர, அவர் (மீண்டும்) உளூச் செய்வது கடமையாகாது. பெண்ணின் முன் துவாரத்திலிருந்து காற்று வெளிப்பட்டால் (மீண்டும்) அவள் உளூச் செய்வது கடமையாகும்” என்று கூறியுள்ளார்கள்.

இதுவே ஷாஃபிஈ (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரின் கருத்தும் ஆகும்.

(திர்மிதி: 75)

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا كَانَ أَحَدُكُمْ فِي المَسْجِدِ فَوَجَدَ رِيحًا بَيْنَ أَلْيَتَيْهِ فَلَا يَخْرُجْ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا»

وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، وَعَلِيِّ بْنِ طَلْقٍ، وَعَائِشَةَ، وَابْنِ عَبَّاسٍ، وَأَبِي سَعِيدٍ،: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ” وَهُوَ قَوْلُ العُلَمَاءِ: أَنْ لَا يَجِبَ عَلَيْهِ الوُضُوءُ إِلَّا مِنْ حَدَثٍ يَسْمَعُ صَوْتًا أَوْ يَجِدُ رِيحًا ” وقَالَ ابْنُ المُبَارَكِ: «إِذَا شَكَّ فِي الحَدَثِ، فَإِنَّهُ لَا يَجِبُ عَلَيْهِ الوُضُوءُ، حَتَّى يَسْتَيْقِنَ اسْتِيقَانًا يَقْدِرُ أَنْ يَحْلِفَ عَلَيْهِ»، وَقَالَ: «إِذَا خَرَجَ مِنْ قُبُلِ المَرْأَةِ الرِّيحُ وَجَبَ عَلَيْهَا الوُضُوءُ» وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ، وَإِسْحَاقَ


Tirmidhi-Tamil-70.
Tirmidhi-TamilMisc-70.
Tirmidhi-Shamila-75.
Tirmidhi-Alamiah-70.
Tirmidhi-JawamiulKalim-70.




மேலும் பார்க்க: முஸ்லிம்-590 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.