தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3561

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 28

குதிரைகள்.

பாடம்: 1

ஸலமா பின் நுஃபைல் அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் குதிரைகள்மீது ஆர்வம் இழந்து விட்டார்கள். ஆயுதங்களை (கீழே) வைத்துவிட்டார்கள் (இனி) எந்தப் போரும் நிகழாது. போர் தன் ஆயுதங்களை கீழே போட்டு விட்டது என்று கூறுகின்றார்கள்” எனச் சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை முன்னோக்கி, “அவர்கள் பொய் சொல்லிவிட்டார்கள். இப்போதே போர் வந்துவிட்டது.

என் சமுதாயத்தில் ஒரு குழுவினர் உண்மைக்காகப் போராடிக் கொண்டே இருப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்காகச் சில குழுக்களின் உள்ளங்களைத் (தவறிலிருந்து) திருப்புவான். மறுமைநாள் வரை அவர்களுக்குப் போரில் ஈடுபடுவோர் மூலம் அல்லாஹ் வாழ்வாதாரம் அளிப்பான். இறுதியில் அல்லாஹ்வின் வாக்குறுதி வருகின்ற வரை (இது தொடரும்).

குதிரைகளின் முன்நெற்றி உரோமங்களில், மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டுள்ளது.

மேலும் நான் இறந்துவிடப் போகிறேன். நீண்டநாள் நான் தங்க மாட்டேன்! என்று இறைச்செய்தி (வஹீ) எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குள் யாரேனும் மற்றொருவரின் கழுத்தை வெட்டிக் கொண்டே (இருக்கும் நிலையில்) குழுக் குழுவாக (மரணத்தைத் தழுவி) என்னை நீங்கள் பின்பற்றி வருவீர்கள். அப்போது இறைநம்பிக்கையாளர்களின் பாதுகாப்பான இடம் ஷாம்(சிரியாவாகத்)தான்” என்று கூறினார்கள்.

(நஸாயி: 3561)

28 – كِتَابُ الْخَيْلِ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ صَالِحِ بْنِ صَبِيحٍ الْمُرِّيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي عَبْلَةَ، عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ سَلَمَةَ بْنِ نُفَيْلٍ الْكِنْدِيِّ، قَالَ:

كُنْتُ جَالِسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَذَالَ النَّاسُ الْخَيْلَ، وَوَضَعُوا السِّلَاحَ، وَقَالُوا: لَا جِهَادَ قَدْ وَضَعَتِ الْحَرْبُ أَوْزَارَهَا، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَجْهِهِ، وَقَالَ: «كَذَبُوا الْآنَ، الْآنَ جَاءَ الْقِتَالُ، وَلَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ، وَيُزِيغُ اللَّهُ لَهُمْ قُلُوبَ أَقْوَامٍ، وَيَرْزُقُهُمْ مِنْهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ، وَحَتَّى يَأْتِيَ وَعْدُ اللَّهِ، وَالْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَهُوَ يُوحَى إِلَيَّ أَنِّي مَقْبُوضٌ غَيْرَ مُلَبَّثٍ، وَأَنْتُمْ تَتَّبِعُونِي أَفْنَادًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَعُقْرُ دَارِ الْمُؤْمِنِينَ الشَّامُ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-3505.
Nasaayi-Shamila-3561.
Nasaayi-Alamiah-3505.
Nasaayi-JawamiulKalim-3523.




  • இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.

21 . இந்தக் கருத்தில் ஸலமா பின் நுஃபைல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஜுபைர் பின் நுஃபைர் —> ஸலமா பின் நுஃபைல் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-3561 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-,


மேலும் பார்க்க: புகாரி-71.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.