தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-4598

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் ஐந்துவேளை தொழுகைகளைத் தொழுது; ரமலான் மாதம் நோன்பு நோற்று; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவள் சொர்க்கத்தில், தான் விரும்பிய வாசல் வழியாக நுழைவாள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(almujam-alawsat-4598: 4598)

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ قَالَ: نَا دَاهِرُ بْنُ نُوحٍ قَالَ: نَا أَبُو هَمَّامٍ مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ قَالَ: نَا هُدْبَةُ بْنُ الْمِنْهَالِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَصَّنَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ بَعْلَهَا، دَخَلَتْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ إِلَّا هُدْبَةُ بْنُ الْمِنْهَالِ، وَلَا عَنْ هُدْبَةَ إِلَّا أَبُو هَمَّامٍ، تَفَرَّدَ بِهِ: دَاهِرُ بْنُ نُوحٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4598.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4738.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ தாஹிர் பின் நூஹ் என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் சில செய்திகளை இவர் தவறாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-3/389)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-4163.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.