ரமலானில் ஒரு சத்தம் கேட்கும்,அதைத்தொடர்ந்துஷவ்வாலில் கொந்தளிப்பு ஏற்படும். அது துல்-கஃதா மாதத்தில் இரண்டு பிரதான குழுக்களை உருவாக்கும், அதைத்தொடர்ந்து துல்-ஹஜ் மாதத்தில் இரத்தம் சிந்தப்படும்! முஹரம்மில் என்ன தடை செய்யப்பட்டுள்ளதோ அது நடக்கும்.”என்று மூன்று முறை கூறி விட்டு,”கைசேதமே! கைசேதமே! பெரிய அளவில் மக்கள் கொல்லப்படுவார்கள்.என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் பதட்டதுடன் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே, சத்தம் (அலறல்) என்றால் என்ன..? என்று கேட்டோம்.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: “அது ரமலானின் நடுவில் (பதினைந்தாம் இரவில்) ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வானத்திலிருந்து கேட்கும். அது வெள்ளிக்கிழமை இரவு ரமலான் மாதம் தொடங்கும் வருடமாகும்..தூங்கும் ஒருவரை எழுப்பும் ஒரு ஒலியாக (சக்திவாய்ந்த சத்தமாக) அது இருக்கும்..அது தூங்குபவர்களை எழுப்பிவிடும் பெண்களை தங்கள் அறைகளுக்கு வெளியே கொண்டு வந்துவிடும். அதிகமான பூகம்பங்கள் நிகழும் மற்றும் மிகவும் குளிரான ஒரு வருடத்தில் வெள்ளிக்கிழமை இரவு இது நடக்கும்.ஆகவே,அந்த ஆண்டின் ஒரு வெள்ளிக்கிழமை இரவு ரமலான் தொடங்கும் போது நீங்கள் அந்த ரமலானின் நடுவில் வரும் வெள்ளிக்கிழமை பஜ்ரை முடித்த பின் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் கதவுகளை மூடி, ஜன்னல்களைத் மூடி, உங்களை போர்த்திகொண்டு பாதுகாத்து கொள்ளுங்கள்.. உங்கள் காதுகளை அடைத்து கொள்ளுங்கள். நீங்கள் அந்த சப்தத்தைகேட்கும் போது அல்லாஹ்விடம் ஸஜ்தா செய்து சொல்லுங்கள். ஸுப்ஹானல் குத்தூஸ், ஸுப்ஹானல்-குத்தூஸ், ரப்புனல் -குத்தூஸ் (மிகவும் பரிசுத்தவானுக்கே புகழனைத்தும்.எங்கள் இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்)என” யார் இதை(ஸுஜூதில்) ஈமானோடு செய்கிறாரோ அவர் வெற்றியடைவார். செய்யாதவர் அழிந்து போவார்..
மற்றொரு அறிவிப்பில்,
அந்த சப்தத்தை கேட்கக்கூடிய எழுபதாயிரம் பேர் செவிடாவார்கள், எழுபாதாயிரம் பேர் மயங்கி விழுவார்கள்.எழுபதாயிரம் பேர் ஊமையாவார்கள், எழுபதாயிரம் பேர் குருடாவார்கள்.அப்போது உங்கள் சமுதாயத்தில் யார் பாதுகாப்பாக இருப்பார்கள்? கேட்டனர்“தங்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்கள், ஸஜ்தாச் செய்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுபவர்கள்.மேலும் அல்லாஹ்வை புகழ்ந்து தக்பீர் கூறுபவர்கள் “பிறகு அதைத் தொடர்ந்து இன்னொரு சப்தம் வரும். முதல் சப்தம் ஜிப்ரீலின் குரலாகவும், இரண்டாவது ஷைத்தானின் குரலாகவும் இருக்கும். அந்த கொந்தளிப்பிளிருந்து தப்பிக்க மற்ற செல்வங்களை விட ஒரு முஃமினுக்கு ஒட்டகமே ஆயிரம் மடங்கு சிறந்தாக இருக்கும்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 853)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ الْحَوْطِيُّ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ فَيْرُوزَ الدَّيْلَمِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَكُونُ فِي رَمَضَانَ صَوْتٌ» قَالُوا: يَا رَسُولَ اللهِ فِي أَوَّلِهِ أَو فِي وَسَطِهِ أَو فِي آخِرِهِ؟ قَالَ: «لَا، بَلْ فِي النِّصْفِ مِنْ رَمَضَانَ، إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ لَيْلَةَ الْجُمُعَةِ يَكُونُ صَوْتٌ مِنَ السَّمَاءِ يُصْعَقُ لَهُ سَبْعُونَ أَلْفًا، وَيُخْرَسُ سَبْعُونَ أَلْفًا، وَيُعْمَى سَبْعُونَ أَلْفًا، وَيُصِمُّ سَبْعُونَ أَلْفًا» قَالُوا: يَا رَسُولَ اللهِ فَمَنِ السَّالِمُ مِنْ أُمَّتِكَ؟ قَالَ: «مَنْ لَزِمَ بَيْتَهُ، وَتَعَوَّذَ بِالسُّجُودِ، وَجَهَرَ بِالتَّكْبِيرِ لِلَّهِ، ثُمَّ يَتْبَعُهُ صَوْتٌ آخَرُ، وَالصَّوْتُ الْأَوَّلُ صَوْتُ جِبْرِيلَ، وَالثَّانِي صَوْتُ الشَّيْطَانِ، فَالصَّوْتُ فِي رَمَضَانَ، وَالمَعْمَعَةُ فِي شَوَّالٍ، وَتُمَيَّزُ الْقَبَائِلُ فِي ذِي الْقَعْدَةِ، وَيَغَارُ عَلَى الْحُجَّاجِ فِي ذِي الْحِجَّةِ وَفِي الْمُحْرِمِ، وَمَا الْمُحْرَّمُ؟ أَوَّلُهُ بَلَاءٌ عَلَى أُمَّتِي، وَآخِرُهُ فَرَحٌ لِأُمَّتِي، الرَّاحِلَةُ فِي ذَلِكَ الزَّمَانِ بِقَتَبِهَا يَنْجُو عَلَيْهَا الْمُؤْمِنُ لَهُ مِنْ دَسْكَرَةٍ تَغُلُّ مِائَةَ أَلْفٍ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்