பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 102:8) எனும் இறைவசனம் இறங்கியபோது, ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாம் அப்படி எந்த அருட்கொடையைப் பற்றி விசாரிக்கப்படப்போகிறோம்? (நம்மிடம் இருப்பது) இந்த இரு கறுப்புகளான பேரீத்தம்பழமும், தண்ணீரும் மட்டும்தானே என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இவ்விரண்டும் பெரும் அருட்கொடைகள் தான் என்பதால் ஆம்) “இவற்றைப் பற்றியும் நம்மிடம் விசாரணை உள்ளது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
(திர்மிதி: 3356)حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بْنِ العَوَّامِ، عَنْ أَبِيهِ، قَالَ:
لَمَّا نَزَلَتْ: {ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ} [التكاثر: 8] قَالَ الزُّبَيْرُ: يَا رَسُولَ اللَّهِ، وَأَيُّ النَّعِيمِ نُسْأَلُ عَنْهُ، وَإِنَّمَا هُمَا الأَسْوَدَانِ التَّمْرُ وَالمَاءُ؟ قَالَ: «أَمَا إِنَّهُ سَيَكُونُ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3279.
Tirmidhi-Shamila-3356.
Tirmidhi-Alamiah-3279.
Tirmidhi-JawamiulKalim-3302.
இதில் இடம்பெறும் ராவீ-41980-முஹம்மத் பின் அம்ர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் இது ஹஸன் தர அறிவிப்பாளர்தொடராகும்.
இந்தச் செய்தியை முஹம்மத் பின் அம்ர் அவர்களைப் போன்று, யஹ்யா பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
அவர்களும் அறிவித்துள்ளார் என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.
(பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-467)…
சமீப விமர்சனங்கள்