தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-25382-இப்னு லஹீஆ

A- A+

இப்னு லஹீஆ (அப்துல்லாஹ் பின் லஹீஆ) – عبد الله بن لهيعة الحضرمي
ஹி 70; 95; 96; 97 – 170; 173; 174; 175, வயது 77.
தரம்: சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவித்தால் அந்தச் செய்தி வேறு குறைகள் இல்லாவிட்டால் சரியானது. மற்ற சிலர் அறிவித்தால் பலவீனமானது.


இயற்பெயர்: அப்துல்லாஹ்

தந்தை பெயர்: லஹீஆ

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

தொழில் மற்றும் ஊர் பெயர்: எகிப்தின் நீதிபதி, மார்க்க சட்ட அறிஞர்.

பிறப்பு: ஹிஜ்ரீ-70; 95; 96; 97 கருத்துவேறுபாடு…

இறப்பு: ஹிஜ்ரீ-170; 173; 174; 175 கருத்துவேறுபாடு…

இப்னு யூனுஸ் அவர்களின் ஹி 97-174 என்ற தகவல்படி இவரின் வயது 77.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இவர் சுமார் 80 வயது வரை வாழ்ந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

கால கட்டம்: 7.


இப்னு லஹீஆ எகிப்தைச் சேர்ந்தவர். இவர் எகிப்தின் நீதிபதியாக இருந்துள்ளார். மேலும் ஹதீஸ்களை அறிவிப்பவராகவும் இருந்துள்ளார்.

1 . இவரைப்பற்றி சிலர் எல்லா நிலையிலும் இவர் பலமானவர் என்றும்,

2 . சிலர் எல்லா நிலையிலும் இவர் பலவீனமானவர் என்றும்,

3 . சிலர், சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் கூறியுள்ளனர்.

  • 1 . இவரைப் பற்றி இப்னு வஹ்ப் அவர்கள், இவர் உண்மையாளர்; நல்லமனிதர் என்று கூறியுள்ளார். யஹ்யா பின் ஹஸ்ஸான் அவர்கள் ஹுஷைம் அவர்களுக்கு பிறகு இவரைவிட மனனசக்தி உடையவரை நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். அவரிடம், மக்கள் இப்னு லஹீஆவின் நூல்கள் எரிந்துவிட்டன என்று கூறுகிறார்களே என்று கூறப்பட்டபோது அவரின் நூல் காணாமல் போகவில்லை (அதாவது முழுமையாக எரியவில்லை என்று கூறினார்)
  • ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்கள், நான் அவரை சந்திப்பதற்காக பலமுறை ஹஜ் செய்துள்ளேன். அவரிடம் அஸல் (ஹதீஸ் நூல்) இருந்தது. எங்களிடம் அதன் பிரிவு உள்ளது என்று கூறியுள்ளார்…
  • இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், ஹதீஸ்களை அதிகமாக அறிவிப்பதிலும், உறுதியான நினைவாற்றலிலும் இப்னு லஹீஆவைப் போன்று யார் எகிப்தில் இருக்கிறார்? என்று கூறியுள்ளார்.
  • மேலும் இப்னு லஹீஆவின் ஊரைச் சேர்ந்த அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாலிஹ் அவர்கள் இப்னு லஹீஆவை பாராட்டியதாக யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள் கூறியுள்ளார். (இதுபோன்று இன்னும் சிலரும் இவரைப் பாராட்டி கூறியுள்ளனர்)…

(நூல்: தஹ்தீபுல் கமால்-15/487, தஹ்தீபுத் தஹ்தீப்-2/411, அல்காஷிஃப்-3/182, )

இப்னு லஹீஆ அதிகமாக ஹதீஸை தேடக்கூடியவராக இருந்துள்ளார். அவர் பயணம் செய்வதற்காக ஒரு வரைபடத்தையே கழுத்தில் மாட்டி இருந்துள்ளார். தான் சந்திக்கும் மனிதர்களிடம் உங்களிடம் ஹதீஸ் உள்ளதா, நீங்கள் யாரிடம் ஹதீஸை கேட்டு எழுதிவைத்துள்ளீர்கள் என்று விசாரித்து ஹதீஸை எழுதிக்கொள்வார்.

எனவேதான் அறிஞர்களில் சிலர் இவர் எழுதிவைத்திருந்தவை சரியானது. ஆனால் இவரின் நூல் எரிந்தபோன பின்பு இவர் தனது மனப்பாடத்திலிருந்து அறிவித்ததால் அதிகம் தவறுகள் ஏற்பட்டுவிட்டன என்று கூறியுள்ளனர்.

  • 2 . இவரைப் பற்றி விமர்சனம் செய்துள்ள அறிஞர்கள்:

1 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

2 . பிஷ்ர் பின் ஸரிய்

3 . யஹ்யா பின் ஸயீத்.

“இப்னு லஹீஆ  வழியாக  குறைவாகவோ,  அதிகமாகவோ  (எதையும்)  எடுத்துக்  கொள்ள மாட்டேன்’’  என்று  அப்துர்ரஹ்மான்  பின்  மஹ்தி  கூறியுள்ளார். “நீ  இப்னு லஹீஆவைப்  பார்த்தால்  அவரிடமிருந்து  ஒரு  எழுத்தைக்  கூட  எடுத்துக்  கொள்ளாதே என்று  பிஷ்ர்  என்னிடம்  கூறினார்’’  என்று  யஹ்யா  பின் ஸயீத் கூறியுள்ளார்.

நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம் : 14

4 . இப்னு மயீன்

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறினார்கள்.

(நூல்: தாரீக் இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
பாகம் 1, பக். 153)

இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக  எடுத்துக்  கொள்ளக்கூடாது  என்று  யஹ்யா (பின் மயீன்)  கூறியதை  நான்  செவியேற்றுள்ளேன்.

(நூல்: தாரீக் இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
பாகம்: 1, பக். 481)

5 . இவ்வாறே இவர்களுக்கு பின்னால் வந்த பல அறிஞர்கள் இவரை விமர்சித்துள்ளனர்.

  • 3 . என்றாலும் சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள், இப்னு லஹீஆவிடமிருந்து அறிவித்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

1 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள், நான் இப்னு லஹீஆவின் ஹதீஸ்களில் இப்னு முபாரக் போன்றோர் அறிவிக்கும் செய்திகளைத் தவிர மற்றவைகளை ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்று கூறினார் என நுஐம் பின் ஹம்மாத் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.பாகம் : 2, பக்கம் : 411)

2 . இப்னு லஹீஆ ஹதீஸ் கலையில் பலவீனமானவராவார். இவருடைய புத்தகங்கள் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து (ஹதீஸை) எழுதியவர்களின் அறிவிப்புகள் மிகச் சரியானவை. உதாரணமாக இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அல்முக்ரிஉ, அப்துல்லாஹ் பின் மஸ்லமா ஆகியோரைப் போன்று…

(நூல்: ஸியரு அஃலாமின் நுபலாஃ, பாகம் : 8, பக்கம் : 11)

3 . இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள் சரியானவை.

(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம் : 4, பக்கம் : 166)

4 . இப்னு வஹ்ப், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 5, பக்கம்: 330…

5 . அவ்வாறே குதைபா பின் ஸயீத் அவர்கள் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது. காரணம், நான் இப்னு லஹீஆ வின் ஹதீஸ்களை இப்னு வஹ்பின் நூல்களிலிருந்தும், இப்னு லஹீஆவின் சகோதரரின் மகனின் நூல்களிலிருந்தும் தான் எடுத்தெழுதி பின்பு அவரிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். அஃரஜின் ஹதீஸ்களைத் தவிர, என்று குதைபா பின் ஸயீத் கூறியுள்ளார்.

(நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ -1512, தஹ்தீபுல் கமால்-15/494)

6 . சிலர் ஆய்வு செய்து வேறு சில அறிவிப்பாளர்கள் இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிப்பதும் சரியானது என்று கூறியுள்ளனர். இப்னு லஹீஆவின் நூல் எரிந்தது ஹிஜ்ரீ 170 இல் தான். எனவே அறிவிப்பாளர்கள் விவரம் பற்றிய நூற்களில் அதற்கு முன் அவரிடமிருந்து கேட்டவர்கள் என்று மேலும் சிலர் உள்ளனர்.

அவர்களைப் பற்றிய விவரங்கள்:

1 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்-

2 . அப்துல்லாஹ் பின் முபாரக்-

3 . அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ-

4 . அப்துல்லாஹ் பின் மஸ்லமா-

5 . குதைபா பின் ஸயீத்-

6 . லஹீஆ பின் ஈஸா-

7 . அபுல்அஸ்வத்-

8 . ஸயீத் பின் அபூமர்யம்-

9. இப்னு ரும்ஹ்-

10 . பிஷ்ர் பின் பக்ர்-

11 . இஸ்ஹாக் பின் ஈஸா-

12 . அபூஸயீத் மவ்லா பனூஹாஷிம்

13 . யஹ்யா பின் இஸ்ஹாக்

14 . வலீத் பின் மஸீத்

15 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

16 . லைஸ் பின் ஸஃத்

…ஆய்வில்..

இப்னு லஹீஆவின் நூல் எரிவதற்கு முன் அவரிடம் செவியேற்றவர்கள் அறிவிக்கும் செய்தியும் பலவீனம் என்று கூறக்கூடியவர்கள்:

  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ போன்றோர், இவர் பலவீனமானவரே. என்றாலும் இவரைப் பற்றி முடிவு செய்வதில் குழப்பம் உள்ளது. எனவே இவர் அறிவிக்கும் செய்திகளை (மற்றவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளார்களா? என்று ஆய்வு செய்ய) எழுதிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
  • அபூஸுர்ஆ அவர்களிடம், இப்னுலஹீஆவிடம் ஆரம்பத்தில் ஹதீஸ்களை கேட்டவர்களின் செய்தியை பற்றி கேட்டபோது ஆரம்பத்தில் கேட்டவர்களின் செய்தியாக இருந்தாலும், கடைசியில் கேட்டவர்களின் செய்திகளாக இருந்தாலும் எல்லாம் சமமானதே. என்றாலும் இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    இப்னு வஹ்ப் போன்றோர் அவரின் உஸூலைப் பின்பற்றினர் என்று கூறினார். (இதன் பொருள் நூலிலிருந்து எழுதிக்கொண்டனர் என்பதாக இருக்கலாம்)

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/145, இக்மாலு தஹ்தீபில் கமால்-8/143…)

  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் நல்ல மனிதர் தான். என்றாலும் இவரின் அறிவிப்புகளை நான் ஆய்வு செய்து பார்த்தபோது இவர் தத்லீஸ் செய்திருப்பதை-அதாவது பலவீனமானவர்களை மறைத்து அறிவித்திருப்பதைக் கண்டேன். மக்கள் இவரின் நூலிலிருந்து ஹதீஸை எழுதிக் கொள்வதற்கு கொண்டு செல்வர். பின்பு அவர் அறிவிக்காத செய்திகளையும் அதில் சேர்த்துவிடுவர். இப்னு லஹீஆ அதைப் பொருட்படுத்தாமல் தன் ஹதீஸையும், மற்றவர்களின் ஹதீஸையும் மக்களுக்கு படித்துக்காட்டுவார். எனவே இவரின் நூல் எரிவதற்கு முன் இவரிடமிருந்து அறிவிப்பவர்களின் செய்தியாக இருந்தாலும், இவரின் நூல் எரிந்தபின் இவரிடமிருந்து செவியேற்றவர்கள் அறிவிக்கும் செய்தியாக இருந்தாலும் அனைத்தையும் விட்டுவிடுவது அவசியம் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/411, தஃரீஃபு அஹ்லித்தக்தீஸ்-1/177)

(319 / 323) – عبدالله بن لهيعة بن عقبة وربما نسب إلى جده، يعتبر بما يروي عنه العبادلة: ابن المبارك والمقرئ وابن وهب

  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் (இப்னு லஹீஆவின் நூல் எரிவதற்கு முன் அவரிடமிருந்து செவியேற்றவர்களான) இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    அல்முக்ரிஉ, இப்னு வஹ்ப் போன்றோர் இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை என்று கூறியுள்ளார்.

(நூல்: அள்ளுஅஃபாஉ வல்மத்ரூகீன்-323)

(இஃதிபார் என்பதற்கு கவனித்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்ற பொருள் இருந்தாலும் ஹதீஸ்கலை வழக்கில், “இவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்துள்ளார்களா? இந்த செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளதா? கருத்து சரியானதா? என்று ஆய்வு செய்வதற்கும் இஃதிபார் என்று கூறப்படும். இந்த இடத்தில் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களின் கருத்து ஆய்வுசெய்ய வேண்டும் என்பதாகும். மற்ற செய்திகளுக்கு மாற்றமாக இருக்கக்கூடாது என்பதாகும்.)