தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-13478

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது கணவரை அதிகம் நேசிப்போரும்; அதிகம் குழந்தையை பெற்றுக்கொள்வோரும்; அவருக்கு கட்டுப்படுவோரும்; அன்பு செலுத்தக்கூடியவர்களும்; அல்லாஹ்வை அஞ்சி நடப்போருமே உங்கள் பெண்களில் சிறந்தவர்கள் ஆவார்கள்.

தனது அலங்காரத்தை வெளிப்படுத்தி; பெருமையுடன் நடந்துக் கொள்வோரே உங்கள் பெண்களில் தீயவர்கள் ஆவார்கள். இவர்கள், நயவஞ்சகர்கள் ஆவார்கள். இவர்கள் அலகும் கால்களும் சிவந்த நிறமுடைய காகத்தைப் போன்றே தவிர சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஉதைனா (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியின் முதல் பகுதி, ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) அவர்கள் வழியாக சரியான அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்துள்ளது.

(பைஹகீ-குப்ரா: 13478)

أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْفَقِيهُ، أنبأ أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْقَطَّانُ، ثنا أَبُو الْأَزْهَرِ، ثنا أَبُو صَالِحٍ عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أُذَيْنَةَ الصَّدَفِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

خَيْرُ نِسَائِكُمُ الْوَدُودُ الْوَلُودُ الْمُوَاتِيَةُ الْمُوَاسِيَةُ، إِذَا اتَّقَيْنَ اللهَ، وَشَرُّ نِسَائِكُمُ الْمُتَبَرِّجَاتُ الْمُتَخَيِلَّاتُ وَهُنَّ الْمُنَافِقَاتُ لَا يَدْخُلُ الْجَنَّةَ مِنْهُنَّ، إِلَّا مِثْلُ الْغُرَابِ الْأَعْصَمِ ”
وَرُوِيَ بِإِسْنَادٍ صَحِيحٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا إِلَى قَوْلِهِ: ” إِذَا اتَّقَيْنَ اللهَ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-13478.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-12480.




ஹதீஸின் கருத்து: அலகும், கால்களும், இறக்கைகளும் சிவந்த அல்லது வெண்மை நிறமுடைய காகங்கள் இருப்பது மிகவும் அரிதாகும். அதுபோன்றே இந்த வகைப்பெண்கள் சொர்க்கம் செல்வது மிகவும் அரிது என்று இதற்கு அபூஉபைத், இப்னுல் அஸீர் போன்ற ஹதீஸ் மொழியியல் அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.

(நூல்கள்: ஃகரீபுல் ஹதீஸ்-3/102, அன்னிஹாயது ஃபீ ஃகரீபில் ஹதீஸி வல்அஸர்-3/249)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24744-அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

இந்த செய்தியை இவர் போன்று மூஸா பின் அலீ அவர்களிடமிருந்து லைஸ் பின் ஸஃத், முஹம்மத் பின் பக்கார் பின் பிலால் ஆகிய 2 பேரும் அறிவித்துள்ளனர் என்பதால் இதில் இவர் தவறிழைக்கவில்லை. எனவே இது சரியான அறிவிப்பாளர் தொடராகும்.

இவர் லைஸ் பின் ஸஃத் அவர்களின் எழுத்தாளர் ஆவார். எனவே இவர் மூஸா பின் அலீ அவர்களிடமிருந்தும் நேரடியாக கேட்டிருக்கலாம்.

1 . லைஸ் பின் ஸஃத் வழியாக தபரீ இமாம், அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர் அறிவித்துள்ளனர்.

2 . முஹம்மத் பின் பக்கார் வழியாக இப்னுஸ் ஸகன் அவர்கள் அறிவித்துள்ளதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் தனது இஸாபாவில் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் தபரீ இமாம் அவர்களின் அறிவிப்பாளர் தொடரில் நாம் பார்த்தவரை விமர்சனம் இல்லை. அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் அபூஜஃபர் அல்முகர்ரிமீ பற்றிய தகவலும், இவர் இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்களின் மாணவரா? என்ற தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

இப்னுஸ் ஸகன் அவர்கள் தொகுத்த ஸஹீஹ் எனும் நூலும் நமக்கு கிடைக்கவில்லை. சில அறிஞர்கள், இவர் தொகுத்த நூல் பதிப்பில் இல்லை என்றும் கூறியுள்ளனர். சில நூல்களில் இவரின் நூலிலிருந்து அறிஞர்கள் மேற்கோள் காட்டுவதையே நாம் காண்கிறோம்.

இப்னுஸ் ஸகன் அவர்களின் பிறப்பு ஹி-294 ஆகும். முஹம்மத் பின் பக்கார் அவர்கள் ஹி-216 இல் இறந்துவிட்டார். (ஸியரு அஃலாமின் நுபலா-11/114)

எனவே இப்னுஸ் ஸகன் அவர்கள் இவரிடம் நேரடியாக கேட்டிருக்க வாய்ப்பில்லை. இப்னுஸ் ஸகன் அவர்களின் முழுமையான அறிவிப்பாளர்தொடர் நமக்கு கிடைக்கவில்லை என்பதால் அதைப் பற்றி முடிவு செய்ய முடியாது.


அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் மேற்கண்ட செய்தியை, இப்னுஸ் ஸகன் அவர்களின் செய்தியின் மூலமும், ஸுலைமான் பின் யஸார் அவர்கள் வழியாக வரும் முர்ஸலான செய்தியின் மூலமும் சரியானது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தக் கருத்தில் அனஸ் (ரலி), இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி), அம்ர் பின் ஆஸ் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகளை ஷாஹித்களாக குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-1849)


3 . இந்தக் கருத்தில் அபூஉதைனா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகுத் தபரீ-11/590 , அல்அஸாமீ வல்குனா-1/329 , இப்னுஸ் ஸகன் (அல்இஸாபா-இப்னு ஹஜர்-7/7, குப்ரா பைஹகீ-13478 ,


  • தாரீகுத் தபரீ-11/590.

تاريخ الطبري = تاريخ الرسل والملوك، وصلة تاريخ الطبري (11/ 590):
وابو أذينة.
حدثنى عبيد بن آدم بن ابى اياس، قال: حدثنى ابى، قال: حدثنا الليث ابن سعد، عن موسى بن على بن رباح، عن ابيه عن ابى أذينة، قال:
[قال رسول الله ص: خير نسائكم الولود الودود ‌المواتية ‌المواسيه، إذا اتقين الله وشر نسائكم المتبرجات المختالات هن المنافقات لا تدخل الجنه منهن الا مثل الغراب الاعصم]


  • அல்அஸாமீ வல்குனா-1/329.

الأسامي والكنى – أبو أحمد الحاكم – ت الأزهري (1/ 329):

حدثنِي محمد بن صالِح بن هانِئ، حدثنا جَعفَر، يَعنِي ابن أَحمَد بن نَصر، حدثنا أبو جَعفَر المُخَرِّمِي، حدثنا ابن المُبارَك، حدثنا حُجَين بن المُثَنَّى، حدثنا لَيث بن سَعد، عن مُوسى بن عَلِيٍّ، عَن أَبِيهِ، عن أبي أُذَنيَة، قال: قالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: “خَيرُ نِسائِكُم الوَلُودُ الوَدُودُ ‌المُواتِيَةُ ‌المُواسِيَةُ”


  • இப்னுஸ் ஸகன் (அல்இஸாபா-இப்னு ஹஜர்-7/7).

الإصابة في تمييز الصحابة (7/ 7)
وقال ابن السكن: أبو أذينة الصدفي له صحبة، وحديثه في أهل مصر.
وأخرج من طريق محمد بن بكار بن بلال، عن موسى بن علي بن رباح عن أبيه، عن أبي أذينة الصدفي- أنّ رسول اللَّه صلى اللَّه عليه وسلّم قال: «خير نسائكم الودود الولود، المواتية المواسية، إذا اتّقين اللَّه، وشرّ نسائكم المترجّلات المختلعات من المنافقات، لا يدخل منهنّ الجنّة إلّا مثل الغراب الأعصم»


மேலும் பார்க்க: அஹ்மத்-12613 .