தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-8

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

பெற்றோரிடம் மென்மையாகப் பேசுதல்.

தைஸலா பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், (காரிஜிய்யாவின்-ஹரூரிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவரின் ஆதரவாளர்களுடன் சேர்ந்திருந்தபோது சில பாவங்களை செய்துவிட்டேன். அவைகளை பெரும்பாவங்கள் என்று நான் கருதினேன். எனவே இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கவர்கள், “அந்தப் பாவங்கள் எவை? என்று என்னிடம் கேட்டார்கள். நான், “அவை இன்னின்ன பாவங்கள்” என்று கூறினேன்.

அதற்கவர்கள், இவைகள் பெரும்பாவங்கள் அல்ல. பெரும்பாவங்கள் ஒன்பதாகும். அவைகள்:

1 . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . நியாயமின்றி கொலைசெய்வதும்,
3 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
4 . கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும்,
5 . வட்டியை உண்பதும்,
6 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
7 . கஅபாவின் புனிதத்தை சீர்குழைப்பதும்,
8 . (கேலி கிண்டல் செய்வதும்; அல்லது) சூனியம் செய்வதும்,
9 . பெற்றோருக்கு தொல்லைத் தந்து அழவைப்பதும் ஆகும்

என்று கூறினார்கள்.

மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீ நரகத்தை பயந்து; சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாயா? என்று என்னிடம் கேட்டார்கள். நான், “ஆம் அல்லாஹ்வின் மீது ஆணையாக!” என்று கூறினேன். அதற்கவர்கள், உனது தந்தை உயிரோடு உள்ளாரா? என்று கேட்டார்கள். நான், எனது தாயார் என்னுடன் உள்ளார்! என்று கூறினேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ அவருடன் மென்மையாக பேசி; அவருக்கு உணவளித்து; பெரும்பாவங்களை விட்டு விலகியிருந்தால் நீ கண்டிப்பாக சொர்க்கம் செல்வாய்! என்று கூறினார்கள்.

(al-adabul-mufrad-8: 8)

بَابُ لِينِ الْكَلَامِ لِوَالِدَيْهِ

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ مِخْرَاقٍ قَالَ: حَدَّثَنِي طَيْسَلَةُ بْنُ مَيَّاسٍ قَالَ:

كُنْتُ مَعَ النَّجَدَاتِ، فَأَصَبْتُ ذُنُوبًا لَا أَرَاهَا إِلَّا مِنَ الْكَبَائِرِ، فَذَكَرْتُ ذَلِكَ لِابْنِ عُمَرَ قَالَ: مَا هِيَ؟ قُلْتُ: كَذَا وَكَذَا، قَالَ: لَيْسَتْ هَذِهِ مِنَ الْكَبَائِرِ، هُنَّ تِسْعٌ: الْإِشْرَاكُ بِاللَّهِ، وَقَتْلُ نَسَمَةٍ، وَالْفِرَارُ مِنَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَةِ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَإِلْحَادٌ فِي الْمَسْجِدِ، وَالَّذِي يَسْتَسْخِرُ، وَبُكَاءُ الْوَالِدَيْنِ مِنَ الْعُقُوقِ. قَالَ لِي ابْنُ عُمَرَ: أَتَفْرَقُ النَّارَ، وَتُحِبُّ أَنْ تَدْخُلَ الْجَنَّةَ؟ قُلْتُ: إِي وَاللَّهِ، قَالَ: أَحَيٌّ وَالِدُكَ؟ قُلْتُ: عِنْدِي أُمِّي، قَالَ: فَوَاللَّهِ لَوْ أَلَنْتَ لَهَا الْكَلَامَ، وَأَطْعَمْتَهَا الطَّعَامَ، لَتَدْخُلَنَّ الْجَنَّةَ مَا اجْتَنَبْتَ الْكَبَائِرَ


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-8.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-8.




3 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸியாத் பின் மிக்ராக் —> தைஸலா பின் அலீ (மய்யாஸ்) —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-8 , தஃப்ஸீருத் தபரீ-, தஃப்ஸீருல் குர்ஆன்-இப்னுல் முன்திர்-,


தஃப்ஸீருத் தபரீ-,

தஃப்ஸீருல் குர்ஆன்-இப்னுல் முன்திர்-,


  • இக்ரிமா பின் அம்மார் —> தைஸலா பின் அலீ (மய்யாஸ்) —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-,


  • அய்யூப் பின் உத்பா —> தைஸலா பின் அலீ (மய்யாஸ்) —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் இப்னுல் ஜஃத்-, அல்கபாஇர்-, …குப்ரா பைஹகீ-6724 ,


  • ஆமிர் பின் ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
    இறப்பு ஹிஜ்ரி 103 / 106
    —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: ஹில்யதுல் அவ்லியா-, ஸுனன் ஸகீர் பைஹகீ-, …


மேலும் பார்க்க: புகாரி-2766 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.