தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-1517

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாடு தனது நாவால் பூமியில் இருப்பதை (இழுத்து) தின்பது போன்று, தங்கள் நாவுகளை (மூலதனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடிய சிலர் பிற்காலத்தில் தோன்றுவார்கள்.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 1517)

حَدَّثَنَا يَعْلَى، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ يَحْيَى قَالَ: حَدَّثَنِي رَجُلٌ – كُنْتُ أُسَمِّيهِ فَنَسِيتُ اسْمَهُ – عَنْ عُمَرَ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَتْ لِي حَاجَةٌ إِلَى أَبِي سَعْدٍ، قَالَ: وحَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنْ مُجَمِّعٍ، قَالَ:

كَانَ لِعُمَرَ بْنِ سَعْدٍ إِلَى أَبِيهِ حَاجَةٌ، فَقَدَّمَ بَيْنَ يَدَيْ حَاجَتِهِ كَلامًا مِمَّا يُحَدِّثُ النَّاسُ يُوصِلُونَ لَمْ يَكُنْ يَسْمَعُهُ، فَلَمَّا فَرَغَ قَالَ: يَا بُنَيَّ قَدْ فَرَغْتَ مِنْ كَلامِكَ؟ قَالَ: نَعَمْ. قَالَ: مَا كُنْتَ مِنْ حَاجَتِكَ أَبْعَدَ، وَلا كُنْتُ فِيكَ أَزْهَدَ مِنِّي مُنْذُ سَمِعْتُ كَلامَكَ هَذَا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سَيَكُونُ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ كَمَا تَأْكُلُ الْبَقَرَ مِنَ الأَرْضِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1517.
Musnad-Ahmad-Alamiah-1435.
Musnad-Ahmad-JawamiulKalim-1455.




இந்தச் செய்தியின் 2 அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான்

3 . யஹ்யா பின் ஸயீத்-அபூஹய்யான்-அத்தைமீ

4 . ஒரு மனிதர்

5 . உமர் பின் ஸஃத்

6 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . யஃலா பின் உபைத்

3 . யஹ்யா பின் ஸயீத்-அபூஹய்யான்-அத்தைமீ

4 . முஜம்மிஃ பின் ஸம்ஆன் அத்தைமீ

5 . உமர் பின் ஸஃத்

6 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


அபூஹய்யான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களின் அறிவிப்பில் உமர் பின் ஸஃத் அவர்களின் மாணவரின் பெயர் கூறப்படவில்லை. அபூஹய்யான் அவர்கள் அவரின் பெயரை ஆரம்பத்தில் நான் கூறிவந்தேன். இப்போது மறந்துவிட்டேன் என்று கூறியதாக யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் அறிவித்துள்ளார்.

அபூஹய்யான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஃலா பின் உபைத் கூஃபாவாசி ஆவார். அபூஹய்யான் அவர்களும் கூஃபாவாசி ஆவார். யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் பஸராவாசி ஆவார்.

எனவே உமர் பின் ஸஃத் அவர்களின் மாணவர் பெயர் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களின் அறிவிப்பில் கூறப்படாவிட்டாலும் யஃலா பின் உபைதின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இவர் முஜம்மிஃ பின் ஸம்ஆன் அத்தைமீ என்பவர் ஆவார். இவரின் சில செய்திகள் தாபிஈன்களிடமிருந்து அறிவிப்பதாக வந்துள்ளது.


المداوي لعلل الجامع الصغير وشرحي المناوي (4/ 248):
…وعلى هذا فالراوي الذي لم يسم إنما هو في سند يحيى بن سعيد لا سند يعلى ابن عبيد، وأحمد رواه عنهما معا، فكيف يقال في سنده راو لم يسم؟! وإذا قلنا: إن الصواب ما وقع في الأصل المطبوع وأن الضمير في قوله: قال راجع إلى يحيى بن سعد، فيكون حينئذ ليحيى فيه سندان سند عن رجل لم يسم، وآخر عن أبي حيان وهو بعيد، لأنه يكون ذكر يعلى بن عبيد عبثا إذ ذكر سندي قرينه ولم يذكر له سندا، فالحديث على كل حال لا يقال فيه راو لم يسم

அப்துர்ரஹீம் ஈராகீ, ஹைஸமீ ஆகியோர் இந்த அறிவிப்பாளர்தொடரில் பெயர் கூறப்படாதவர் உள்ளார் என்ற காரணத்தைக் கூறி இந்தச் செய்தியை பலவீனமானது என்று கூறியிருந்தாலும் இந்தக் கருத்து தவறு என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸித்தீக் என்ற அறிஞர் கூறியுள்ளார்.

(நூல்: அல்முதாவீ லிஇலலில் ஜாமிஇஸ் ஸஃகீர்-4/248)


இரண்டாவது அறிவிப்பாளர்தொடரில், முஜம்மிஃ பின் ஸம்ஆன் அத்தைமீ அவர்கள் உமர் பின் ஸஃதிடமிருந்து நேரடியாக அறிவிப்பதைப் போன்று இல்லை என்பதால் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இதை முர்ஸல் என்பதால் பலவீனமானது என்று கூறியுள்ளனர். ஆனால் மஷ்யகது இப்னு தஹ்மான்-70 இல் முஜம்மிஃ பின் ஸம்ஆன் அத்தைமீ அவர்கள் உமர் பின் ஸஃதிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது. தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இந்தச் செய்தியை மற்றொரு செய்தியுடன் ஒப்பிட்டு கூறும்போது இதற்கே முன்னுரிமை தந்துள்ளார்.


نزهة الألباب في قول الترمذي وفي الباب (6/ 3418):
…إلا أن مما قد يرفع عدم حصول الانقطاع ما ذكره الدارقطني في المصدر السابق حيث جعله من مسند مجمع عن عمر بن سعد عن أبيه إلا أنى لم أره عند غيره ممن سبق

நுஸ்ஹதுல் அல்பாப் எனும் நூலின் ஆசிரியர் ஹஸன் பின் முஹம்மத் என்பவர் அபூஹய்யான் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்டுவிட்டு தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இலலில் கூறியிருப்பதைப் பார்க்கும் போது இந்தச் செய்தி முன்கதிஃ அல்ல. முத்தஸில்தான் என்று கூறமுடியும். ஆனால் இவருக்கு முன் இப்படி யாரும் கூறியிருப்பதை நான் காணவில்லை என்று கூறியுள்ளார்.

(நூல்: நுஸ்ஹதுல் அல்பாப்-6/417)

மஷ்யகது இப்னு தஹ்மான்-70 இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த நூல் அவருக்கு கிடைக்கவில்லை என்பதால் இப்படி கூறியுள்ளார் எனத் தெரிகிறது.


المشيخة البغدادية لأبي طاهر السلفي (1/ 417 بترقيم الشاملة آليا):
…وجملة القول أنَّ الحديث بهذه الطرق والمتابعات والشواهد يرتقي إلى درجة الصحيح، والله أعلم

அபூதாஹிர் ஸலஃபீ அவர்கள், இந்தக் கருத்தில் வரும் பல செய்திகளை குறிப்பிட்டுவிட்டு இதை ஸஹீஹ் லிஃகைரிஹீ என்ற தரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்மஷ்யகதுல் பஃக்தாதிய்யா-1/417)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31447-உமர் பின் ஸஃத் அவர்கள் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்களின் மகனாவார். இவர் ஹுஸைன் (ரலி) அவர்களை எதிர்த்து அனுப்பப்பட்ட படைக்கு தளபதியாக இருந்தார் என்றும், இவர் தான் ஹுஸைன் (ரலி) அவர்களை கொன்றார் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இந்தக் காரணத்தினால் இவரை எப்படி பலமானவர் என்று கூறமுடியும்? எனக் கூறியுள்ளார்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் இவரை பலமானவர் என்றும், ஹுஸைன் (ரலி) அவர்களைக் கொன்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் என்ற தரத்தில் குறிப்பிட்டுவிட்டு இவர் ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு எதிரான படையில் தளபதியாக இருந்ததாலே மக்கள் இவரை வெறுக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • சில வரலாற்று தகவலை வைத்து இவரை சிலர் நபி (ஸல்) காலத்தில் பிறந்தவர் என்று கூறியிருந்தாலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் உமர் (ரலி) அவர்கள் இறந்த வருடத்தில் பிறந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/111, தஹ்தீபுல் கமால்-21/356, அல்இக்மால்-10/57, அல்காஷிஃப்-3/484, அல்இஸாபா-8/423, தஹ்தீபுத் தஹ்தீப்-3/227, தக்ரீபுத் தஹ்தீப்-1/719)


1 . இந்தக் கருத்தில் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • (யஹ்யா பின் ஸயீத்-அபூஹய்யான் —> முஜம்மிஃ பின் ஸம்ஆன் அத்தைமீ —>) உமர் பின் ஸஃத் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

பார்க்க: மஷ்யகது இப்னு தஹ்மான்-70 , அஹ்மத்-1517 , முஸ்னத் பஸ்ஸார்-1193 , முஸ்னத் ஷாஷீ-127 , ஷுஅபுல் ஈமான்-4622 ,


  • மஷ்யகது இப்னு தஹ்மான்-70.

مشيخة ابن طهمان (ص128):
70 – عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُجَمِّعٍ، عَنْ عُمَرَ بْنِ سَعْدِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ: كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى أَبِيهِ سَعْدٍ فَقَدَّمَ بَيْنَ يَدَيْهِ كَلَامًا ، ثُمَّ ذَكَرَ حَاجَتَهُ إِلَى أَبِيهِ ، فَقَالَ سَعْدٌ: مَا كُنْتُ قَطُّ أَزْهَدَ فِيكَ مِنِّي السَّاعَةَ ، وَلَا كُنْتَ قَطُّ أَبْعَدَ مِنْ حَاجَتِكَ مِنْكَ السَّاعَةَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: ‌إِنَّهُ ‌‌«‌سَيَكُونُ ‌قَوْمٌ ‌يَأْكُلُونَ ‌بِأَلْسِنَتِهِمْ ‌كَمَا ‌تَأْكُلُ ‌الْبَقَرُ ‌بِأَلْسِنَتِهَا ‌مِنَ ‌الْأَرْضِ»

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 354)
621- وَسُئِلَ عَنْ حَدِيثِ عُمَرَ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قال: سيأتي الناس زمان يكون فيه قَوْمٌ يَأْكُلُونَ الدُّنْيَا بِأَلْسِنَتِهِمْ، كَمَا يَلْحَسُ الْبَقَرُ عَلَى وَجْهِ الْأَرْضِ.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ مُجَمِّعٍ التَّيْمِيِّ، عَنْ عُمَرَ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ.
وَرَوَاهُ ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي حَيَّانَ، فَقَالَ: عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ.
وَالْأَوَّلُ أَصْوَبُ.

(நூல்: அல்இலலுல் வாரிதா-621)


  • முஸ்னத் ஷாஷீ-127.

المسند للشاشي (1/ 181)

عُمَرُ بْنُ سَعْدٍ عَنْ سَعْدٍ
127 – حَدَّثَنَا عِيسَى بْنُ أَحْمَدَ الْعَسْقَلَانِيُّ، نا يَعْلَى بْنُ عُبَيْدٍ، نا أَبُو حَيَّانَ، عَنْ مُجَمِّعٍ قَالَ: كَانَ لِعُمَرَ بْنِ سَعْدٍ إِلَى أَبِيهِ حَاجَةٌ، فَقَدَّمَ بَيْنَ يَدَيْ حَاجَتِهِ كَلَامًا مِمَّا يُحَدِّثُ النَّاسُ وَيُوَصِّلُونَ، لَمْ يَكُنْ سَمِعَهُ مِنْهُ فِيمَا مَضَى، فَلَمَّا فَرَغَ قَالَ: يَا بُنِيَّ، قَدْ فَرَغْتَ مِنْ كَلَامِكَ؟ قَالَ: نَعَمْ قَالَ: مَا كُنْتَ مِنْ حَاجَتِكَ أَبْعَدَ، وَلَا كُنْتُ فِيكَ أَزْهَدَ مِنِّي مُنْذُ سَمِعْتُ كَلَامَكَ هَذَا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ: «سَيَكُونُ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ كَمَا يَأْكُلُ الْبَقَرُ مِنَ الْأَرْضِ»

….


  • உஸாமா பின் ஸைத் —> அப்துல்லாஹ் பின் தீனார் —> ஒரு மனிதர் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

பார்க்க: அல்ஜாமி ஃபில்ஹதீஸ்-இப்னு வஹ்ப்-413.

الجامع – ابن وهب – ت مصطفى أبو الخير (ص521):
413 – وَأَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ رَجُلٍ، مِنَ الْأَنْصَارِ، قَالَ: كَانَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَاجِدًا عَلَى ابْنِهِ عَمْرٍو فَأَتَاهُ بِأُنَاسٍ يَسْتَشْفِعُ بِهِمْ إِلَيْهِ فَتَكَلَّمُوا فَأَبْلَغُوا، ثُمَّ تَكَلَّمَ عَمْرُو بْنُ سَعْدٍ وَكَأَنَّمَا لَمْ يَتَكَلَّمْ مَعَهُ أَحَدٌ، فَقَالَ سَعْدٌ: يَا بُنَيَّ هَذَا الَّذِي يُبَغِّضُكَ إِلَيَّ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ عليه السلام: «يَكُونُ قَوْمٌ آخِرَ الزَّمَانِ يَأْكُلُونَ الدُّنْيَا بِأَلْسِنَتِهِمْ كَمَا تَلْحَسُ الْبَقَرَةُ الْأَرْضَ بِأَلْسِنَتِهَا»


  • முஸ்அப் பின் ஸஃத் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

பார்க்க: தம்முல் ஃகீபா-இப்னு அபித்துன்னா-11.

ذم الغيبة والنميمة لابن أبي الدنيا (ص: 7)
11 – حَدَّثَنِا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، قَالَ: جَاءَ عُمَرُ بْنُ سَعْدٍ إِلَى أَبِيهِ يَسْأَلُهُ حَاجَةً فَتَكَلَّمَ بَيْنَ يَدَيْ حَاجَتِهِ بِكَلَامٍ، فَقَالَ لَهُ سَعْدٌ: مَا كُنْتَ مِنْ حَاجَتِكَ أَبْعَدَ مِنْكَ الْيَوْمَ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَأْتِي النَّاسَ زَمَانٌ يَتَخَلَّلُونَ فِيهِ الْكَلَامَ بِأَلْسِنَتِهِمْ كَمَا تَتَخَلَّلُ الْبَقَرُ الْكَلَأَ بِأَلْسِنَتِهَا»


  • ஸைத் பின் அஸ்லம் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-1597 , அல்அஹாதீஸுல் முக்தாரா-,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2853 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.