பாடம்:
நான் முன்பு கூறிய கருத்தை தெளிவாக விளக்கும் மற்றொரு செய்தி.
இதில் நபி (ஸல்) அவர்கள், (ஏறுவரிசைப்படி) ரமளான் மாதத்தின் கடந்துவிட்ட நாட்களிலிருந்து 23 வது நாளில் லைலத்துல் கத்ரை தேடுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இது (இறங்குவரிசைப்படி) மீதமுள்ள நாட்களிலிருந்து 7 வது இரவாகும்.
(எனவே ஒற்றைப்படை என்பதை கடந்துவிட்ட நாட்களிலிருந்து கணக்கிட வேண்டும். மீதமுள்ள நாட்களிலிருந்து கணக்கிடக்கூடாது)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் லைலதுல் கத்ர் இரவைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நினைவூட்டினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்துவிட்டன? என்று கேட்டார்கள்.
அதற்கு நாங்கள், 22 நாட்கள் முடிந்துவிட்டன; மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று கூறினோம். இல்லை, மாறாக 7 நாட்களே மீதம் உள்ளன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இல்லை, மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என நபித்தோழர்கள் கூறினார்கள். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள்.
இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என நபித்தோழர்கள் கூறினார்கள். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன; இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது என நபி (ஸல்) கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், தன் கையில் 29 நாட்கள் வரை எண்ணினார்கள். பிறகு, இன்றைய இரவில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள் எனக் கூறினார்கள்.
(ibn-khuzaymah-2179: 2179)بَابُ ذِكْرِ الْخَبَرِ الْمُفَسِّرِ لِلدَّلِيلِ الَّذِي ذَكَرْتُ، إِذِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَمَرَ بِطَلَبِهَا لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ مِمَّا قَدْ مَضَى مِنَ الشَّهْرِ، وَكَانَتْ لَيْلَةَ سَابِعَةٍ مِمَّا تَبَقَّى
حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
ذَكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمْ مَضَى مِنَ الشَّهْرِ؟» قُلْنَا: مَضَى اثْنَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ» قَالُوا: لَا، بَلْ بَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ» قَالُوا: لَا، بَلْ بَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ، الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ» . ثُمَّ قَالَ بِيَدِهِ، حَتَّى عَدَّ تِسْعَةً وَعِشْرِينَ “، ثُمَّ قَالَ: «الْتَمِسُوهَا اللَّيْلَةَ»
Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-2179.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-2039.
சமீப விமர்சனங்கள்