அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் பின் அப்பாஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையிலும் அஸரிலும் (சத்தமாக) ஓதினார்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்று கூறினார்கள். அப்போது அவர், (அப்படியானால்) அவர்கள் மனதிற்குள் ஓதியிருக்கலாம் அல்லவா?” என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உன் முகத்தில் கீறல் உண்டாகட்டும்! இது நீ முதலில் கேட்டதைவிடத் தீமையானது.
திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அடியார். அல்லாஹ் தன்னுடைய அடியாருக்குக் கட்டளையிடுவதை அவர்கள் (மக்களுக்கு) எடுத்துரைப்பார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மற்ற) மக்களுக்கு சொல்லாமல் எங்களுக்காக மட்டும் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் மூன்று விஷயங்களைத் தவிர. (அதை எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்கள்.)
அவைகள்:
1 . நாங்கள் உளூ எனும் அங்கத்தூய்மையை முழுமையாகச் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
2 . தர்மப் பொருளை உண்ணக்கூடாது என்று உத்தரவிட்டார்கள்.
3 . (இனப்பெருக்கத்திற்காக) கழுதையைக் குதிரையுடன் இணையவிடக் கூடாது என்று தடுத்தார்கள்.
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي جَهْضَمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ:
كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَسَأَلَهُ رَجُلٌ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟، قَالَ: لَا، قَالَ: فَلَعَلَّهُ كَانَ يَقْرَأُ فِي نَفْسِهِ؟ قَالَ: خَمْشًا، هَذِهِ شَرٌّ مِنَ الْأُولَى، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدٌ أَمَرَهُ اللَّهُ تَعَالَى بِأَمْرِهِ، فَبَلَّغَهُ، وَاللَّهِ مَا اخْتَصَّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ دُونَ النَّاسِ إِلَّا بِثَلَاثَةٍ: «أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ، وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَلَا نُنْزِيَ الْحُمُرَ عَلَى الْخَيْلِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3581.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்