தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2402

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் சோதனைகளுக்குள்ளானவர்களுக்கு மறுமையில் நன்மை வழங்கப்படும் போது, உலகில் ஆரோக்கியமாக (நல்ல நிலையில்) வாழ்ந்தவர்கள், “நாங்கள் உலகில் வாழும்போது எங்களுடைய தோல்கள் கத்திரிக்கோலால் வெட்டப்பட்டிருக்க வேண்டுமே!” என்று ஆசைப்படுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த (அரிதான) செய்தியாகும். இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே இது வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

வேறு சிலர் அஃமஷ் அவர்களிடமிருந்து, அஃமஷ் —> தல்ஹா பின் முஸர்ரிஃப் —> மஸ்ரூக் என்ற அறிவிப்பாளர்தொடரில் மஸ்ரூக் அவர்களின் சொல்லாக இதில் சிலதை அறிவித்துள்ளனர்.

(திர்மிதி: 2402)

بَابٌ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، وَيُوسُفُ بْنُ مُوسَى القَطَّانُ البَغْدَادِيُّ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَغْرَاءَ أَبُو زُهَيْرٍ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يَوَدُّ أَهْلُ العَافِيَةِ يَوْمَ القِيَامَةِ حِينَ يُعْطَى أَهْلُ البَلَاءِ الثَّوَابَ لَوْ أَنَّ جُلُودَهُمْ كَانَتْ قُرِضَتْ فِي الدُّنْيَا بِالمَقَارِيضِ»

وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ بِهَذَا الإِسْنَادِ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ ” وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنِ الأَعْمَشِ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ مَسْرُوقٍ، قَوْلَهُ شَيْئًا مِنْ هَذَا


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2402.
Tirmidhi-Alamiah-2326.
Tirmidhi-JawamiulKalim-2339.




ஆய்வின் சுருக்கம்:

இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனம் உள்ளது. அஃமஷ் அவர்களிடமிருந்து ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் மஸ்ரூக் அவர்களின் சொல்லாக அறிவித்துள்ள செய்தியே முன்னுரிமை பெற்றதாகும்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்.

2 . முஹம்மத் பின் ஹுமைத், 3 . யூஸுஃப் பின் மூஸா.

4 . அப்துர்ரஹ்மான் பின் மஃக்ரா-அபூஸுஹைர்.

5 . அஃமஷ்.

6 . அபுஸ்ஸுபைர்.

7 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


  • இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் ஒன்றில் இடம்பெறும், திர்மிதீ அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான ராவீ-38698-முஹம்மத் பின் ஹுமைத் என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் கைவிடப்பட்டவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர் என்பதால் அது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • மற்றொரு அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22445-அப்துர்ரஹ்மான் பின் மஃக்ரா-அபூஸுஹைர் என்பவர் பற்றி,
  • இவர் பலமானவர் என்ற கருத்தில் ஸுலைமான் பின் ஹய்யான், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அபூயஃலா கலீலீ ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் சுமாரானவர் என்ற கருத்தில் வகீஃ பின் ஜர்ராஹ், இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் ஒரு பொருட்டே அல்ல. இவர் அஃமஷ் அவர்களிடமிருந்து 600 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவை அந்தளவுக்கு பலமானவை அல்ல என்பதால் அவற்றை நாம் விட்டுவிட்டோம் என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இவர், அஃமஷ் அவர்களிடமிருந்து மற்ற பலமானவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார். அஃமஷ் அல்லாதவர்களிடமிருந்தும் இவர் அரிதான செய்திகளை அறிவித்துள்ளார். எனவே இவர் பலவீனமானவர்; இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம் என்ற தரத்தில் உள்ளவர் ஆவார் என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார்.

அஃமஷ், அபுஸ்ஸுபைர் ஆகியோர் தத்லீஸ் செய்பவர்கள் என்ற விமர்சனம் உள்ளது.


இந்தச் செய்தியையும், இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்தியையும் இணைத்து இந்தச் செய்தியை ஹஸன் (லிஃகைரிஹீ) என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-2206)

 


الكامل في ضعفاء الرجال (5/ 471):
‌‌1115- عَبد الرحمن بن مغراء أبو زهير الدوسي الرازي.
حَدَّثَنَا ابْنُ أَبِي عِصْمَةَ، وَمُحمد بْنُ خلف، قالا: حَدَّثَنا مُحَمد بن يُونُس سمعت علي عَبد الله يقول عَبد الرحمن بن مغراء أبو زهير ليس بشَيْءٍ كان يروي، عَنِ الأَعْمَش ستماية حديث تركناه لم يكن بذاك.
قال الشيخ: ‌وهذا ‌الذي ‌قاله ‌علي ‌بن ‌المديني ‌هو ‌كما ‌قال إنما أنكرت على أبي زهير هذا أحاديث يرويها، عَنِ الأَعْمَش لا يتابعه الثقات عليها وله عن غير الأَعْمَش غرائب، وَهو مِنْ جُمْلَةِ الضُّعَفَاءِ الَّذِينَ يكتب حديثهم


الموضوعات لابن الجوزي (3/ 203):
حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا عبد الرحمن بْنُ مَغْرَا الدُّوسِيُّ حَدَّثَنَا الأَعْمَشُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ بن عبد الله قَالَ قَالَ رَسُول الله صلى الله عليه وسلم: ” ‌لَيَوَدَّنَّ ‌أَهْلُ ‌الْعَافِيَةِ ‌يَوْمَ ‌الْقِيَامَةِ ‌أَنَّ ‌جُلُودَهُمْ ‌قُرِضَتْ ‌بِالْمَقَارِيضِ مِمَّا يَرَوْنَ مِنَ ثَوَابِ أَهْلِ الْبَلاءِ “.
هَذَا حَدِيث لَا يَصِحُّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
قَالَ على بن المدينى: عبد الرحمن بن مغراء لَيْسَ بشئ


الفوائد المجموعة (ص264):
172 – حديث: “يَوَدُّ أَهْلُ الْعَافِيَةِ أَنَّ لُحُومَهُمْ قُطِّعَتْ _ إلخ.
في إسناده: عبد الرحمن بن مغراء، ليس بشيء، ‌ولكنه ‌قد ‌أخرجه ‌من ‌طريقه ‌الترمذي ‌والبيهقي. ‌وقال ‌الذهبي: ‌ليس به بأس


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 348)
3229- وسئل عن حديث أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عليه وسلم، قال: يود أهل العافية أن لحومهم قرضت بالمقاريض لما يرون من ثواب الله لأهل البلاء.
فَقَالَ: يَرْوِيهِ الْأَعْمَشُ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مِغْرَاءَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي الزبير، عن جابر.
وخالفه أبو عبيدة بن معن، فرواه عن الأعمش، قال: سمعتهم يذكرون عن جابر مرسلا.
ولا يدفع قول ابن مغراء أن يكون حفظه عن الأعمش.


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2402 , அல்மரளு வல்கஃப்பாராத்-இப்னு அபுத்துன்யா-, அல்முஃஜமுஸ் ஸகீர்-, குப்ரா பைஹகீ-, ஷுஅபுல் ஈமான்-, தாரீகு பஃக்தாத்-, தாரீகு திமிஷ்க்-இப்னு அஸாகிர்-,


2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12829 .


3 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-35601 .


4 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-1348 .


5 . மஸ்ரூக் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-10829 .


6 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஸ்ஸுஹ்த்-அஸத் பின் மூஸா-70 , பஹ்ருல் ஃபவாஇத்-1/383 , அல்ஹுஜ்ஜது ஃபீ பயானில் மஹஜ்ஜதி-305 ,


  • அஸ்ஸுஹ்த்-அஸத் பின் மூஸா-70.

الزهد لأسد بن موسى (ص: 56)
70 – نا بَكْرُ بْنُ خُنَيْسٍ، عَنْ ضِرَارِ بْنِ عَمْرٍو، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تُنْصَبُ الْمَوَازِينُ يَوْمَ الْقِيَامَةِ، فَيُؤْتَى بِأَهْلِ الصَّلَاةِ وَأَهْلِ الصِّيَامِ، وَأَهْلِ الصَّدَقَةِ، وَأَهْلِ الْحَجِّ، فَيُؤْتَوْنَ بِالْمَوَازِينِ، وَيُؤْتَى بِأَهْلِ الْبَلَاءِ فَلَا يُنْصَبُ لَهُمْ مِيزَانٌ وَلَا يَنْشُرُ لَهُمْ دِيوَانٌ، وَيُصَبُّ الْأَجْرُ عَلَيْهِمْ صَبًّا بِغَيْرِ حِسَابٍ»


  • பஹ்ருல் ஃபவாஇத்-1/383.

بحر الفوائد المسمى بمعاني الأخبار للكلاباذي (ص: 383)
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُنْصَبُ الْمَوَازِينُ يَوْمَ الْقِيَامَةِ فَيُؤْتَى بِأَهْلِ الصَّلَاةِ فَيُوَفَّوْنَ أُجُورَهُمْ بِالْمَوَازِينِ، وَيُؤْتَى بِأَهْلِ الْبَلَاءِ، وَلَا يُنْصَبُ لَهُمْ مِيزَانٌ، وَيُنْشَرُ لَهُمْ دِيوَانٌ فَيُصَبُّ عَلَيْهِمُ الْأَجْرُ صَبًّا بِغَيْرِ حِسَابٍ حَتَّى يَتَمَنَّى أَهْلُ الْعَافِيَةِ أَنَّهُ كَانَتْ تُقْرَضُ بِالْمَقَارِيضِ أَجْسَادُهُمْ مِمَّا فِيهِ أَهْلُ الْبَلَاءِ مِنَ الْفَضْلِ» حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْفَقِيهُ قَالَ: ح عَبْدُ الرَّحِيمِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: ح إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ قَالَ: ح عَفِيفُ بْنُ سَالِمٍ، عَنْ بَكْرِ بْنِ خُنَيْسٍ، عَنْ ضِرَارِ بْنِ عَمْرٍو، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.


  • அல்ஹுஜ்ஜது ஃபீ பயானில் மஹஜ்ஜதி-305.

الحجة في بيان المحجة (1/ 503)
305 – قَالَ: وَحَدَّثَنَا أَبُو يَزِيدَ الْقَرَاطِيسِيُّ، نَا أَسَدُ بن مُوسَى، نَا بكر ابْن خُنَيْسٍ عَنْ ضِرَارِ بْنِ عَمْرٍو، عَنْ يَزِيدَ الرَّقَاشِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ – رَضِيَ اللَّهُ عَنهُ – عَن النَّبِي – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ – قَالَ: ” تُنْصَبُ الْمَوَازِينُ يَوْمَ الْقِيَامَةِ، فَيُؤْتَى بِأَهْلِ الصَّلاةِ، وَأَهْلِ الصِّيَامِ، وَأَهْلِ الصَّدَقَةِ، وَأَهْلِ الْحَجِّ، فَيُوَفَّوْنَ بِالْمِيزَانِ، وَيُؤْتَى بِأَهْلِ الْبَلاءِ فَلا يُنْصَبُ لَهُمْ مِيزَانٌ، وَلا يُنْشَرُ لَهُمْ دِيوَانٌ، وَيُصَبُّ الأَجْرُ عَلَيْهِمْ صَبًّا بِغَيْرِ حِسَابٍ “.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.