அதாஉ பின் அபூரபாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி) ஆகிய இருவரும் அம்பெறிந்து பயிற்சி செய்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். (சிறிது நேரத்தில்) இருவரில் ஒருவர் சலிப்படைந்து உட்கார்ந்து விட்டார். உடனே மற்றவர், நீங்கள் கலைப்படைந்து விட்டீர்களா? என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்:
அல்லாஹ்வின் நினைவு இல்லாத எந்த ஒன்றும் வீணானதே. நான்கு செயல்களைத் தவிர. அவைகள்:
1 . (அம்பெறிவதற்காக) இரு இலக்குகளை குறிபார்க்க நடப்பது.
2 . தனது குதிரைக்கு பயிற்சியளிப்பது.
3 . தனது மனைவியோடு விளையாடுவது.
4 . (பிறருக்கு) நீச்சல் அடிக்க கற்றுத் தருவது.
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحِيمِ، عَنْ عَبْدِ الْوَهَّابِ بْنِ بُخْتٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ قَالَ:
رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ وَجَابِرَ بْنَ عُمَيْرٍ الْأَنْصَارِيَّيْنِ يَرْمِيَانِ، فَمَلَّ أَحَدُهُمَا فَجَلَسَ فَقَالَ الْآخَرُ: «كَسِلْتَ؟» سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” كُلُّ شَيْءٍ لَيْسَ مِنْ ذِكْرِ اللهِ فَهُوَ لَغْوٌ وَلَهْوٌ إِلَّا أَرْبَعَةَ خِصَالٍ: مَشْيٌ بَيْنَ الْغَرَضَيْنِ، وَتَأْدِيبُهُ فَرَسَهُ، وَمُلَاعَبَتُهُ أَهْلَهُ، وَتَعْلِيمُ السَّبَّاحَةِ “
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-8891.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-8617.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்.
2 . இஸ்ஹாக் பின் ராஹவைஹ்.
3 . முஹம்மத் பின் ஸலமா அல்பாஹிலீ, அல்ஹர்ரானீ.
4 . அபூஅப்துர்ரஹீம்-காலித் பின் யஸீத்-காலித் பின் அபூயஸீத்.
5 . அப்துல்வஹ்ஹாப் பின் புக்த்.
6 . அதாஉ பின் அபூரபாஹ்
7 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), 8 . ஜாபிர் பின் உமைர் (ரலி)
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சில ஆதாரங்களின் அடிப்படையில் முஹம்மத் பின் ஸலமா அவர்கள் அறிவிக்கும் செய்திக்கு அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் முன்னுரிமை தந்து இதை சரியானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-315)
ஸாலிஹ் பின் ஃபரீஹ் என்ற தற்கால அறிஞர் மூஸா பின் அஃயன் அவர்களின் அறிவிப்புக்கு முன்னுரிமை தந்து இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளார்…
2 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:
- அதாஉ பின் அபூரபாஹ் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி)
முஹம்மத் பின் ஸலமா அல்ஹர்ரானீ அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: குப்ரா நஸாயீ-8890 , 8891 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8147 , அல்முஃஜமுல் கபீர்-1785 , ஃபளாஇலுர் ரம்யீ-, குப்ரா பைஹகீ-19741 ,
மூஸா பின் அஃயன் அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: குப்ரா நஸாயீ-8889 , மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-,
…
மேலும் பார்க்க: அபூதாவூத்-2513 .
சமீப விமர்சனங்கள்