தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2513

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

அம்பெறிதல் (எனும் கலை)

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் :

திண்ணமாக அல்லாஹ் ஓர் அம்பின் மூலம் மூன்று பேரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்:

1 . செய்கின்றபோது நன்மையை நாடி அதைச் செய்பவர்.
2 . அதை எறிபவர்.
3 . அம்பெறிவதற்காக (மீண்டும் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தோ பொருளாதார ரீதியாகவோ) உதவி செய்பவர்.

(எனவே) அம்பெறி(ந்து பயிற்சி செய்)யுங்கள். (குதிரை) சவாரி செய்யுங்கள். நீங்கள் (குதிரை) சவாரி செய்வதைவிட அம்பெறி(ந்து பயிற்சி செய்)வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.)


மூன்று விஷயங்களில் வீண் என்பது கிடையாது.

1 . ஒருவர் தனது குதிரைக்குப் பயிற்சியளிப்பது.
2 . ஒருவர் தனது மனைவியுடன் விளையாடுவது.
3 . ஒருவர் தனது வில்லால் அம்பெறிந்து பயிற்சி செய்வது.


அம்பெறியும் கலையை ஒருவர் அறிந்தபின் அதைப் புறக்கணித்து விட்டுவிட்டால் அவர் (அல்லாஹ்வின் அந்த) அருட்கொடையை விட்டுவிட்டவர் அல்லது மறுத்து விட்டவர் ஆவார்.


 

(அபூதாவூத்: 2513)

بَابٌ فِي الرَّمْيِ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنِي أَبُو سَلَّامٍ، عَنْ خَالِدِ بْنِ زَيْدٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

” إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُدْخِلُ بِالسَّهْمِ الْوَاحِدِ ثَلَاثَةَ نَفَرٍ الْجَنَّةَ، صَانِعَهُ يَحْتَسِبُ فِي صَنْعَتِهِ الْخَيْرَ، وَالرَّامِيَ بِهِ، وَمُنْبِلَهُ. وَارْمُوا، وَارْكَبُوا، وَأَنْ تَرْمُوا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ تَرْكَبُوا. لَيْسَ مِنَ اللَّهْوِ إِلَّا ثَلَاثٌ: تَأْدِيبُ الرَّجُلِ فَرَسَهُ، وَمُلَاعَبَتُهُ أَهْلَهُ، وَرَمْيُهُ بِقَوْسِهِ وَنَبْلِهِ، وَمَنْ تَرَكَ الرَّمْيَ بَعْدَ مَا عَلِمَهُ رَغْبَةً عَنْهُ، فَإِنَّهَا نِعْمَةٌ تَرَكَهَا «، أَوْ قَالَ» كَفَرَهَا “


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2513.
Abu-Dawood-Alamiah-3522.
Abu-Dawood-JawamiulKalim-2155.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . ஸயீத் பின் மன்ஸூர்

3 . அப்துல்லாஹ் பின் முபாரக்

4 . அப்துர்ரஹ்மான் பின் யஸீத்

5 . அபூஸல்லாம்-மம்தூர் அல்அஸ்வத்

6 . காலித் பின் ஸைத்

7 . உக்பா பின் ஆமிர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14544-காலித் பின் ஸைத் அல்ஜுஹனீ-காலித் பின் யஸீத்..அவர்களை யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அல்ஃபஸவீ அவர்கள் (மிஸ்ரில் வாழ்ந்த) பலமான தாபிஈன்களில் ஒருவராக குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களும் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவர் விசயத்தில் குளறுபடி உள்ளது என்று கூறியுள்ளார். (அதாவது இவரின் பெயர் அல்லது இவர் அறிவிக்கும் ஒரு செய்தியின் விசயத்தில்)
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார். (இதுவும் சரியான கருத்தல்ல. யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார். இதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கவனிக்காமல் இருக்கலாம்)

(நூல்கள்: அல்மஃரிஃபது வத்தாரீக்-2/501, தஹ்தீபுல் கமால்-, அல்காஷிஃப்-2/344, தஹ்தீபுத் தஹ்தீப்-1/520, தக்ரீபுத் தஹ்தீப்-1/286)


المقترب في بيان المضطرب (ص251):
(44) ‌خالد ‌بن ‌زيد أو يزيد أو ابن أبي يزيد الجهني عن عقبة في الرمي مقبول من الثالثة.
قال الذهبي: ‌فيه ‌اضطراب.
وقال العراقي: قال في حديثه اضطراب.
ذكر من وثقه : ذكره الفسوي في ثقات التابعين من أهل مصر.
تعقيب:
قول الذهبي فيه اضطراب مراده والله أعلم الحديث الذي رواه لا خالد نفسه ويدل عليه أنه لم يذكره في الميزان وكذا عبارة العراقي لو كان المراد منها أنّه أي خالد مضطرب فغير مسلم وإن كان المراد منها الحديث أنه مضطرب فنعم. ويدل عليه ما في المغني عن حمل الأسفار: أصحاب السنن وفيه اضطراب.
وقول ابن حجر”مقبول” غير مقبول لتوثيق الفسوي وهو ممّا فاته وأصوله

(நூல்: அல்முக்தரிபு ஃபீ பயானில் முள்தரிப்-1/251)


கதீப் பஃக்தாதீ அவர்கள், இதில் இடம்பெறும் காலித் பின் ஸைத் அல்ஜுஹனீ என்பவர் நபித்தோழரான ஸைத் பின் காலித் (ரலி) அவர்களின் மகன் என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் இவர் வேறு காலித் பின் ஸைத் என்று கூறியுள்ளனர். மிஸ்ஸீ இமாம் இதையே சரியானது என்று தனது தஹ்தீபுல் கமாலில் கூறியுள்ளார்.

இப்னு அஸாகிர் அவர்கள், காலித் பின் ஸைத் என்பவரும், அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அஸ்ரக் என்பவரும் ஒருவரே என்று கூறியுள்ளார். இதற்கு மிஸ்ஸீ இமாம் மறுப்பு தந்துள்ளார்.

இந்த தகவல் அடிப்படையில் இவர் பெயர் விசயத்தில் குழப்பம் இருப்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும், இவரிடமிருந்து மம்தூர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்களும் இவரை அறியப்படாதவர் என்று கூறி இந்த அறிவிப்பாளர்தொடரை பலவீனமானது என்று கூறியுள்ளனர்…



இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.

உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக சுருக்கமாக வந்துள்ள செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-3882 .


1 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக விரிவாக வந்துள்ள செய்திகள்:

  • அப்துர்ரஹ்மான் பின் யஸீத் —> அபூஸல்லாம்-மம்தூர் —> காலித் பின் ஸைத் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, ஸுனன் ஸயீத்-, அஹ்மத்-, அபூதாவூத்-2513 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-3578 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


  • முஆவியா பின் ஸல்லாம் —> அபூஸல்லாம்-மம்தூர் —> காலித் பின் ஸைத் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: முஸ்னத் ரூயானீ-247, 248.

مسند الروياني (1/ 187)

خَالِدُ بْنُ زَيْدٍ، وَشُعَيْبُ بْنُ زُرْعَةَ

247 – نا عَلِيُّ بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، نا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ جَابِرٍ، حَدَّثَنِي أَبُو سَلَّامٍ، عَنْ خَالِدِ بْنِ زَيْدٍ قَالَ: كُنْتُ رَامِيًا أُرَامِي عُقْبَةَ بْنَ عَامِرٍ، فَمَرَّ بِي ذَاتَ يَوْمٍ فَقَالَ لِي: يَا خَالِدُ، اخْرُجْ بِنَا نَرْمِي، فَأَبْطَأْتُ عَلَيْهِ فَقَالَ: تَعَالَ أُحَدِّثْكَ مَا حَدَّثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إنَّ اللَّهَ يُدْخِلُ بِالسَّهْمِ الْوَاحِدِ ثَلَاثَةً الْجَنَّةَ: صَانِعَهُ الَّذِي يَحْتَسِبُ فِي صَنْعَتِهِ الْخَيْرَ، وَمُنْبِلَهُ، وَالرَّامِيَ بِهِ، ارْمُوا وَارْكَبُوا، وَأَنْ تَرَامَوْا أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ تَرْكَبُوا، وَلَيْسَ مِنَ اللَّهْوِ إِلَّا ثَلَاثٌ: تَأْدِيبُ الرَّجُلِ فَرَسَهُ، وَمُلَاعَبَتُهُ امْرَأَتَهُ، وَرَمْيُهُ بِقَوْسِهِ وَنَبْلِهِ، وَمَنْ عَلِمَ الرَّمْيَ ثُمَّ تَرَكَهَا فَهِيَ نِعْمَةٌ كَفَرَهَا “

248 – نا عَلِيُّ بْنُ سَهْلٍ، نا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، نا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ أَبِي سَلَّامٍ، عَنْ خَالِدِ بْنِ زَيْدٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، بِنَحْوِ هَذَا الْحَدِيثِ، وَزَادَ: فَتُوُفِّيَ عُقْبَةُ وَتَرَكَ ثَمَانِينَ قَوْسًا مَعَ كُلِّ قَوْسٍ جُعْبَتُهَا وقَرْنُهَا


التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (5/ 93):
257- عَبد اللهِ بْن زَيد، الأَزرَق.
ويُقال: ‌خَالِد ‌بْن ‌زَيد.
قَالَه عَبد الرَّحمَن بْن يَزِيد بْن جَابِر، ومُعاوية، عَنْ أَبي سَلَاّم.
قَالَ يَحيى بْن أَبي كَثِير: عَنْ زَيد، عَنْ أَبي سَلَاّم، عَنْ عَبد اللهِ بْن زَيد الأَزرَق، سَمِع عُقبة

(நூல்: தாரீகுல் கபீர்-257, 5/93)


  • அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அஸ்ரக் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, இப்னு மாஜா-2811 , திர்மிதீ-, இப்னு குஸைமா-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,


யஹ்யா பின் கஸீர் அவர்களின் அறிவிப்புகள்:

இவரிடமிருந்து ஹிஷாம் அத்தஸ்துவாஈ அவர்கள் அறிவித்தவை:

  • 1 . யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸல்லாம்-மம்தூர் —> அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அஸ்ரக் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க:

  • 2 . யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா—> அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அஸ்ரக் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க:


இவரிடமிருந்து மஃமர் அவர்கள் அறிவித்தவை:

  • 3 . யஹ்யா பின் அபூகஸீர் —> ஸைத் பின் ஸல்லாம் —> அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அஸ்ரக் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க:


இவரிடமிருந்து அய்யூப் அவர்கள் அறிவித்தவை:

  • 4 . யஹ்யா பின் அபூகஸீர் —> நபி (ஸல்)

பார்க்க:


புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் அறிவிப்பு:

  • 5 . யஹ்யா பின் அபூகஸீர் —> ஸைத் பின் ஸல்லாம் —> அபூஸல்லாம் —> அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அஸ்ரக் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க:


யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள் நேரடியாக அபூஸல்லாம் அவர்களிடமிருந்து ஹதீஸைக் கேட்கவில்லை. அவரின் நூலிலிருந்து அறிவிப்பதாக கூறியுள்ளார். அன்றைய காலத்தில் நூலில் எழுதப்படும் செய்திகளில் தவறு ஏற்படும் நிலை இருந்தது என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். மனனம் செய்தவர்களில் நல்ல நினைவாற்றல் உள்ளவர்கள் ஹதீஸின் வார்த்தைகளையும், வாக்கியங்களையும், எழுத்தின் புள்ளிகளையும் கூட சரியாக மனனமிட்டிருந்தனர்.

எனவே யஹ்யா பின்அபூகஸீர் அவர்கள் வழியாக அறிவித்தவர்கள் பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர் என்பதால் அவரின் அறிவிப்பை விட்டுவிட வேண்டும்.

அபூஸல்லாம் அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர், முஆவியா பின் ஸல்லாம் ஆகியோர் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்திகளாகும்.


2 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா நஸாயீ-8891 .


3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5309 .


4 . யஹ்யா பின் அபூகஸீர் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஸுனன் ஸயீத்-,


5 . ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஸுனன் ஸயீத்-,


6 . மக்ஹூல் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஃபளாஇலுர் ரம்யி ஃபீ ஸபீலில்லாஹ்-,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.