தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3882

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துர்ரஹ்மான் பின் ஷிமாஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஃபுகைம் அல்லக்மீ என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் “(முதியவரான) தாங்கள் (அம்பெய்வதற்காக) இவ்விரு இலக்குகளுக்கிடையே உங்களைச் சிரமப்படுத்திக் கொள்கிறீர்களே!” என்று கேட்டார். அதற்கு உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை நான் செவியுற்றிராவிட்டால் இதற்காக நான் சிரமம் எடுத்துக்கொள்ளமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஹாரிஸ் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அப்துர்ரஹ்மான் பின் ஷிமாஸா (ரஹ்) அவர்களிடம், “அது என்ன (செய்தி)?” என்று கேட்டேன். அதற்கு அப்துர்ரஹ்மான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்டுவிடுகிறாரோ அவர் “நம்மைச் சேர்ந்தவர் அல்லர்” அல்லது “(நமக்கு) மாறுசெய்துவிட்டார்” என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 33

(முஸ்லிம்: 3882)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ الْحَارِثِ بْنِ يَعْقُوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ

أَنَّ فُقَيْمًا اللَّخْمِيَّ، قَالَ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ: تَخْتَلِفُ بَيْنَ هَذَيْنِ الْغَرَضَيْنِ وَأَنْتَ كَبِيرٌ يَشُقُّ عَلَيْكَ، قَالَ عُقْبَةُ: لَوْلَا كَلَامٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ أُعَانِيهِ، قَالَ الْحَارِثُ: فَقُلْتُ لِابْنِ شَمَاسَةَ: وَمَا ذَاكَ؟ قَالَ: إِنَّهُ قَالَ: «مَنْ عَلِمَ الرَّمْيَ، ثُمَّ تَرَكَهُ، فَلَيْسَ مِنَّا» أَوْ «قَدْ عَصَى»


Muslim-Tamil-3882.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1919.
Muslim-Alamiah-3543.
Muslim-JawamiulKalim-3550.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்

2 . முஹம்மத் பின் ரும்ஹ்

3 . லைஸ் பின் ஸஃத்

4 . ஹாரிஸ் பின் யஃகூப்

5 . அப்துர்ரஹ்மான் பின் ஷிமாஸா

6 . உக்பா பின் ஆமிர் (ரலி)


இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


சுருக்கமாக வந்துள்ள செய்திகள்:

1 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • லைஸ் பின் ஸஃத் —> ஹாரிஸ் பின் யஃகூப் —> அப்துர்ரஹ்மான் பின் ஷிமாஸா —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: முஸ்லிம்-3882 , அல்முஃஜமுல் கபீர்-882 , குப்ரா பைஹகீ-19729 , 19730 ,


  • உஸ்மான் பின் நுஐம் —> முஃகீரா பின் நஹீக் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-2814 ,

  • அபூஸல்லாம்-மம்தூர் —> காலித் பின் ஸைத் —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-17336 ,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-9095 .


3 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

விமர்சனம் உள்ளது.


4 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

விமர்சனம் உள்ளது.


5 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்அன்ஸாரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

விமர்சனம் உள்ளது.


விரிவாக வந்துள்ள இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2513 .

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.