தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-9095

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதை மறந்து (கைவிட்டு) விடுகிறாரோ அவர் அந்த அருட்கொடையை மறுத்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(bazzar-9095: 9095)

حَدَّثَنا رزق الله بن موسى حَدَّثَنا الحَسَن بن بشر حَدَّثَنا قيس بن الربيع عن سهيل , عن أبيه , عن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال

من تعلم الرمي ثم نسيه فهي نعمة جحدها.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9095.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பஸ்ஸார் இமாம்

2 . ரிஸ்குல்லாஹ் பின் மூஸா

3 . ஹஸன் பின் பிஷ்ர்

4 . கைஸ் பின் ரபீஃ

5 . ஸுஹைல் பின் அபூஸாலிஹ்

6 . அபூஸாலிஹ்-ஸம்மான்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34365-கைஸ் பின் ரபீஃ பற்றி ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    ஸவ்ரீ போன்ற இன்னும் சில அறிஞர்கள் இவர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் வகீஃ, இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
  • யஃகூப் பின் அபூஷைபா அவர்கள், இவர் நம்முடையை தோழர்களிடம் நம்பகமானவர்; அவர் எழுதிவைத்திருந்தவை சரியானது; என்றாலும் மிகவும் நினைவாற்றல் சரியில்லாதவர்; அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    போன்றோர் இவரின் நூலில் இவரின் மகன் அழித்தல் திருத்தல் செய்து இவரின் நூலை வீணாக்கி விட்டார். அதனால் மக்கள் (அறிஞர்கள்) இவரின் ஹதீஸ்களை விட்டுவிட்டனர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவரின் அதிகமான அறிவிப்புகள் சரியாகவே உள்ளன. இவர் விசயத்தில் ஷுஃபா அவர்களின் கூற்றே சரி. இவர் (என்னிடத்தில்) சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் வயதான காலத்தில் இவரின் நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இவரின் ஹதீஸ்களில் இவரின் மகன் இடைச்செருகல் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/447, தக்ரீபுத் தஹ்தீப்-1/804)


இந்த அறிவிப்பாளர்தொடரை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், முன்கர் என்று கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-939)

இதற்கான காரணம், ஸுஹைல் அவர்களின் பல முக்கிய மாணவர்கள் இந்தச் செய்தியை அறிவிக்கவில்லை. கைஸ் பின் ரபீஃ மட்டுமே தனித்து அறிவித்துள்ளார் என்பதால் இவரின் மகன் இந்தச் செய்தியை இடைச்செருகல் செய்திருக்கலாம் என்பதற்கு அல்லது இவர் தவறாக அறிவித்திருக்க வாய்ப்புள்ளது.


2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-9095 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4177 , அல்முஃஜமுஸ் ஸகீர்-543 , …


சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-3882 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.