தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1581

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

முஸ்லிம் பின் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாஃபிஉ பின் அல்கமா (ரஹ்) அவர்கள், என் தந்தையை அவர்களின் கூட்டத்தினருக்கு நீதி நிர்வாக அதிகாரியாக நியமித்தார்கள். மேலும்
அவர்களை அவர்களின் சமுதாய மக்களிடம் ஸகாத் வசூலிப்பதற்கும் உத்தரவிட்டார்கள். அப்போது என் தந்தை அவர்கள், என்னை அவர்களில் ஒரு பிரிவினரிடம் ஸகாத் வாங்கி வருவதற்காக அனுப்பினார்கள்.

ஆகவே நான் ஸிஃர் பின் தைஸம் (ரலி) எனும் முதியவர் ஒருவரிடம் (சென்று, அவரிடம்,) “என் தந்தை, உங்களிடம் உங்கள் ஆடுகளுக்குரிய ஸகாத்தைப் பெறுவதற்காக என்னை அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! நீங்கள் எந்த வகையான ஆடுகளை (ஸகாத்தாக) பெறுவீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஆடுகளின் பால்மடியை உள்ளங்கையால் அளந்து பார்த்து தேர்வு செய்வோம்” என்று கூறினேன்.

அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! உனக்கு ஒரு செய்தி கூறுகிறேன்” என்று (பின்வருமாறு) கூறலானார்கள்:

“நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த மலைப் பாதைகளில் ஒன்றில் எனக்குரிய ஆடுகளுடன் இருந்தேன். அப்போது ஒட்டகத்தில் இருவர் என்னிடம் வந்தனர். அவர்கள், “நாங்கள் இறைத்தூதரின் தூதர்கள் ஆவோம். உங்களிடமுள்ள ஆடுகளுக்கு உரிய ஸகாத்தைப் பெற வந்துள்ளோம்” என்று கூறினர்.

நான், “அவற்றிற்கான ஸகாத் என் மீது எவ்வளவு?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஓர் ஆடு’ என்றனர். நான், கொழுத்த பால் நிறைந்த உயர்வான ஆடு என்பதைத் தெரிந்துகொண்டே அத்தகைய ஓர் ஆட்டைக் கொடுக்கலாம் என்று கருதி அந்த ஆட்டை (மந்தையிலிருந்து எடுத்து) அவர்களுக்குக் காட்டினேன். அப்போது அவர்கள், “இது சினை ஆடு. சினை ஆடுகளை (ஸகாத்தாக) பெறுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினர்.

நான், நீங்கள் எந்த வகையான ஆடுகளை (ஸகாத்தாக) பெறுவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “செம்மறியாட்டில் நான்கு மாதம் அல்லது ஒருவருடம் பூர்த்தியான பெட்டை ஆடு” என்று கூறினர்.

பின்னர் நான், (அதைவிடத் தாழ்ந்த) இதுவரை குட்டிபோடாத, ஆனால் குட்டி ஈனுவதற்கு நெருங்கிவிட்ட ஒரு பெட்டை ஆட்டை ஸகாத்தாகத் தரலாம் என்று கருதி கருதி அதை (மந்தையிலிருந்து எடுத்து) அவர்களுக்குக் காட்டினேன். அப்போது அவர்கள் இருவரும், “அதை எங்களுக்குக் கொடுப்பீராக!” என்று கூறினர். பின்னர் அதை நான் அவர்களுக்குத் தூக்கிக் கொடுத்தேன். அவர்கள் அதை தம்முடன் இருந்த ஒட்டகத்தின் மீது வைத்துக்கொண்டு சென்று விட்டனர்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஸகரிய்யா பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ரவ்ஹ் அவர்கள் இந்தச் செய்தியை அறிவிப்பவரின் பெயரை முஸ்லிம் பின் ஷுஅபா என்று கூறினார் என ஹஸன் பின் அலீ அவர்கள் சொன்னார்கள்.

ஸகரிய்யா பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஆஸிம் அவர்களும் இந்தச் செய்தியை அறிவிப்பவரின் பெயரை முஸ்லிம் பின் ஷுஅபா என்று அறிவித்துள்ளார். (எனவே, ஸகரிய்யா பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் வகீஃ அவர்கள், முஸ்லிம் பின் ஸஃபினா என்று கூறியிருப்பது தவறாக இருக்கலாம்)

முஸ்லிம் பின் ஷுஅபா அவர்களின் வேறு ஒரு அறிவிப்பில் “அஷ்ஷாஃபிஉ என்பதன் பொருள், வயிற்றில் குட்டியுள்ள சினை ஆட்டைக் குறிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

(அபூதாவூத்: 1581)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ إِسْحَاقَ الْمَكِّيِّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي سُفْيَانَ الْجُمَحِيِّ، عَنْ مُسْلِمِ بْنِ ثَفِنَةَ الْيَشْكُرِيِّ – قَالَ الْحَسَنُ: رَوْحٌ يَقُولُ: مُسْلِمُ بْنُ شُعْبَةَ قَالَ:

اسْتَعْمَلَ نَافِعُ بْنُ عَلْقَمَةَ أَبِي عَلَى عِرَافَةِ قَوْمِهِ، فَأَمَرَهُ أَنْ يُصَدِّقَهُمْ، قَالَ: فَبَعَثَنِي أَبِي فِي طَائِفَةٍ مِنْهُمْ، فَأَتَيْتُ شَيْخًا كَبِيرًا يُقَالُ لَهُ: سِعْرُ بْنُ دَيْسَمٍ، فَقُلْتُ: إِنَّ أَبِي بَعَثَنِي إِلَيْكَ – يَعْنِي – لِأُصَدِّقَكَ، قَالَ: ابْنُ أَخِي، وَأَيَّ نَحْوٍ تَأْخُذُونَ؟ قُلْتُ: نَخْتَارُ، حَتَّى إِنَّا نَتَبَيَّنَ ضُرُوعَ الْغَنَمِ، قَالَ: ” ابْنُ أَخِي، فَإِنِّي أُحَدِّثُكَ أَنِّي كُنْتُ فِي شِعْبٍ مِنْ هَذِهِ الشِّعَابِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَنَمٍ لِي، فَجَاءَنِي رَجُلَانِ عَلَى بَعِيرٍ، فَقَالَا لِي: إِنَّا رَسُولَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْكَ لِتُؤَدِّيَ صَدَقَةَ غَنَمِكَ، فَقُلْتُ: مَا عَلَيَّ فِيهَا؟ فَقَالَا: شَاةٌ، فَأَعْمَدُ إِلَى شَاةٍ قَدْ عَرَفْتُ مَكَانَهَا مُمْتَلِئَةٍ مَحْضًا وَشَحْمًا، فَأَخْرَجْتُهَا إِلَيْهِمَا، فَقَالَا: هَذِهِ شَاةُ الشَّافِعِ، وَقَدْ نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَأْخُذَ شَافِعًا، قُلْتُ: فَأَيَّ شَيْءٍ تَأْخُذَانِ؟ قَالَا: عَنَاقًا جَذَعَةً، أَوْ ثَنِيَّةً، قَالَ: فَأَعْمَدُ إِلَى عَنَاقٍ مُعْتَاطٍ، وَالْمُعْتَاطُ الَّتِي لَمْ تَلِدْ وَلَدًا، وَقَدْ حَانَ وِلَادُهَا، فَأَخْرَجْتُهَا إِلَيْهِمَا، فَقَالَا: نَاوِلْنَاهَا، فَجَعَلَاهَا مَعَهُمَا عَلَى بَعِيرِهِمَا، ثُمَّ انْطَلَقَا “،

قَالَ أَبُو دَاوُدَ، رَوَاهُ أَبُو عَاصِمٍ، عَنْ زَكَرِيَّاءَ، قَالَ أَيْضًا: مُسْلِمُ بْنُ شُعْبَةَ، كَمَا قَالَ رَوْحٌ.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُونُسَ النَّسَائِيُّ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ بِإِسْنَادِهِ بِهَذَا الْحَدِيثِ قَالَ مُسْلِمُ بْنُ شُعْبَةَ: قَالَ فِيهِ: وَالشَّافِعُ الَّتِي فِي بَطْنِهَا الْوَلَدُ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1581.
Abu-Dawood-Alamiah-1348.
Abu-Dawood-JawamiulKalim-1351.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.