தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4720

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹய்யிஸாவின் இளைய மகன் கைபரின் எல்லையில் கொலை செய்யப்பட்டுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹய்யிஸாவிடம் “கொன்றவனுக்கு எதிராக இரண்டு சாட்சிகளை நிலை நிறுத்துங்கள். நான் உங்களுக்கு அந்தக் கொலையாளியை கயிற்றால் கட்டி இழுத்து வரச் சொல்கிறேன்” என்று கூறினார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! நான் எங்கிருந்து இரண்டு சாட்சிகளைக் கொண்டு வருவேன். அவர் கொலை செய்யப்பட்டதோ (யூதர்களாகிய) அவர்களின் எல்லைப் பகுதியில் அல்லவா?” என்று அவர் கூறினார்.

(அப்படியானால்) உங்களில் உள்ள ஐம்பது பேர் சத்தியம் செய்கின்றீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நான் அறியாதது குறித்து எவ்வாறு சத்தியம் செய்வேன்?” என்று கூறினார்.

அச்சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்களுக்காக யூதர்களாகிய) அவர்கள் ஐம்பது பேர் சத்தியம் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! (பொய் கூறும்) யூதர்களாகிய அவர்களிடம் நாங்கள் எவ்வாறு சத்தியம் செய்யுமாறு கூறுவோம்?” என்று கூறினார்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருடைய இழப்பீட்டுத் தொகையை பங்குவைத்தார்கள். அதில் பாதியை அவர்களுக்கு கொடுத்து உதவி செய்தார்கள்.

(நஸாயி: 4720)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الْأَخْنَسِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،

أَنَّ ابْنَ مُحَيِّصَةَ الْأَصْغَرَ أَصْبَحَ قَتِيلًا عَلَى أَبْوَابِ خَيْبَرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقِمْ شَاهِدَيْنِ عَلَى مَنْ قَتَلَهُ، أَدْفَعْهُ إِلَيْكُمْ بِرُمَّتِهِ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَمِنْ أَيْنَ أُصِيبُ شَاهِدَيْنِ، وَإِنَّمَا أَصْبَحَ قَتِيلًا عَلَى أَبْوَابِهِمْ؟ قَالَ: «فَتَحْلِفُ خَمْسِينَ قَسَامَةً» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ أَحْلِفُ عَلَى مَا لَا أَعْلَمُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَنَسْتَحْلِفُ مِنْهُمْ خَمْسِينَ قَسَامَةً» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ نَسْتَحْلِفُهُمْ وَهُمُ الْيَهُودُ؟ فَقَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دِيَتَهُ عَلَيْهِمْ وَأَعَانَهُمْ بِنِصْفِهَا


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4720.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




இந்தச் செய்தியை ஷாத் என்று சிலர் கூறியுள்ளனர். வேறுசிலர் இந்தச் செய்தியையும் மற்ற செய்திகளையும் இணைத்து விளக்கம் கூறியுள்ளனர். விரிவான விளக்கம் இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவிடப்படும்.


சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-7192 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.