தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-9319-பகிய்யது பின் வலீத்

A- A+

பகிய்யது பின் வலீத் – بقية بن الوليد بن صائد بن كعب بن حريز

ஹி-110 – 197 சுமார் 87 வயது.

தரம்: ஸதூக்-நடுத்தரமானவர். தத்லீஸ் செய்பவர்.


இயற்பெயர்: பகிய்யது

தந்தை பெயர்: வலீத்

குறிப்புப் பெயர்: அபூயஹ்மத்

ஊர் பெயர்: பஃக்தாத், ஹிம்ஸ்

பிறப்பு: ஹிஜ்ரீ-110

இறப்பு: ஹிஜ்ரீ-197

கால கட்டம்: 8.


சுருக்கம்…

பகிய்யது பின் வலீத் பற்றி தத்லீஸ் செய்பவர் என்றும், பலவீனமானவர்கள், கைவிடப்பட்டவர்களை மறைத்து அறிவிப்பவர் என்றும், தன் ஊர்வாசிகள் அல்லாதவர்களிடமிருந்து அறிவிப்பதில் தவறு உள்ளது என்றும், தவறிழைப்பவர் என்றும் நான்கு வகையான விமர்சனம் உள்ளது. எனவே சில நிபந்தனைகளின் படி இருந்தால் மட்டுமே இவரின் செய்திகள் ஏற்கப்படும் என அப்துல்லாஹ் ஸஃத் என்ற ஹதீஸ்கலை அறிஞர் கூறியுள்ளார்.

1 . இவரின் ஆசிரியர் பலமானவராக இருக்க வேண்டும்.

2 . இவரின் ஆசிரியர் இவர் ஊரைச் சேர்ந்த ஷாம் வாசியாக இருக்க வேண்டும். (உதாரணமாக-பஹீர் பின் ஸஃத், முஹம்மது பின் ஸியாத் போன்றவர்கள்)

3 . தன் ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்திருக்க வேண்டும்.

4 . இவரின் ஆசிரியருக்கும், அவரின் ஆசிரியருக்கும் இடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருக்க வேண்டும்.

(இவர் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் அல்ல என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை செய்தவர்கள் இவரின் சில மாணவர்கள் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். (அல்இக்மால்-3/6) எனவே இந்த நிபந்தனை தேவையில்லை)

5 . இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் ஷாம் வாசியாக இருக்க கூடாது. குறிப்பாக ஹிம்ஸ் பகுதியை சேரந்தவராக இருக்கக் கூடாது. அவர் பலமானவராக இருந்தால் போதும். (இந்த நிபந்தனை தேவையில்லை)

மேற்கண்ட ஐந்து நிபந்தனைகளில் ஒன்று குறைந்தாலும் சிலர் பலவீனம் என்றும், சிலர் இவரின் ஆசிரியர், இவரின் ஆசிரியரின் ஆசிரியர்களுக்கிடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருந்தால் போதும் என்றும் கூறியுள்ளனர்.

வேறு சிலர் முதலில் கூறப்பட்ட 3 நிபந்தனை இருந்தால் போதும் என்று கூறியுள்ளனர்.


  • பகிய்யது பின் வலீத், பஹீர் பின் ஸஃத் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    அவர்கள் ஏற்றுள்ளார்.

الكامل في ضعفاء الرجال (2/ 264)
حَدَّثَنَا الفضل بن عَبد اللَّه بْنِ سُلَيْمَانَ، حَدَّثَنا سُلَيْمَانُ بْنُ عَبد الحميد، حَدَّثَنا حيوة، قَالَ: سَمِعْتُ بَقِيَّة يَقُولُ لما قرأت عَلَى شُعْبَة كتاب بحير بْن سعد، قَال: قَال لي يا أبا يحمد لو لم أسمع هَذَا منك لطرت.

பகிய்யா அவர்கள், ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடம் பஹீர் பின் ஸஃத் அவர்களின் ஹதீஸ் நூலை வாசித்துக் காட்டியபோது, இதை நான் கேட்டிராவிட்டால் உன்னை விரட்டியிருப்பேன் அபூயஹ்மதே! என்று ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் கூறினார். (இதை பகிய்யாவே அறிவிக்கிறார்)

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/264)


இவரின் ஆசிரியர்களில் சிலர்:

யஹ்யா பின் ஸயீத்

அவ்ஸாஈ

முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ

இப்னு ஜுரைஜ்

மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்…


இவரின் மாணவர்களில் சிலர்:

ஷுஅபா

ஹம்மாத் பின் ஸைத்

இப்னுல் முபாரக்

இஸ்ஹாக் பின் ராஹவைஹி

இப்னு உயைனா

வகீஃ பின் ஜர்ராஹ்….


இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, யஃகூப் பின் ஷைப், இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்ற அதிகமான அறிஞர்கள் இவர் பலமானவர்களிடமிருந்து அறிவித்தால் ஏற்கலாம். பலவீனமானவர்களிடமிருந்து அறிவித்தால் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.

காரணம் இவர் தத்லீஸ் செய்பவர். தத்லீஸ் செய்யாத செய்திகளையும், குறிப்பிட்ட சிலரின் வழியாக வரும் செய்திகளையும் ஏற்கலாம் என்று….

 


தத்லீஸு ஷுயூகு பகிய்யது பின் வலீத்..

1 . தத்லீஸு ஷுயூகு விளக்கம்

2 . மஜ்ஹூல் விளக்கம்

3 . பகிய்யது பின் வலீத் பற்றிய குறிப்பு

…..


தத்லீஸு ஷுயூகு

கதீப் பஃக்தாதீ அவர்களின் விளக்கம்:

 

الكفاية في علم الرواية للخطيب البغدادي (ص22):
فَأَمَّا ‌التَّدْلِيسُ ‌لِلشُّيُوخِ فَمِثْلُ أَنْ يُغَيِّرَ اسْمَ شَيْخِهِ لِعِلْمِهِ بِأَنَّ النَّاسَ يَرْغَبُونَ عَنِ الرِّوَايَةِ عَنْهُ ، أَوْ يُكَنِّيَهُ بِغَيْرِ كُنْيَتِهِ ، أَوْ يَنْسُبَهُ إِلَى غَيْرِ نِسْبَتِهِ الْمَعْرُوفَةِ مِنْ أَمْرِهِ.

 

الكفاية في علم الرواية للخطيب البغدادي (ص365):
وَأَمَّا الضَّرْبُ الثَّانِي مِنَ التَّدْلِيسِ فَهُوَ أَنْ يَرْوِيَ الْمُحَدِّثُ عَنْ شَيْخٍ سَمِعَ مِنْهُ حَدِيثًا يُغَيِّرُ فِيهِ اسْمَهُ أَوْ كُنْيَتَهُ أَوْ نَسَبَهُ أَوْ حَالَهُ الْمَشْهُورَ مِنْ أَمْرِهِ لِئَلَّا يُعْرَفَ وَالْعِلَّةُ فِي فِعْلِهِ ذَلِكَ كَوْنُ شَيْخِهِ غَيْرَ ثِقَةٍ فِي اعْتِقَادِهِ أَوْ فِي أَمَانَتِهِ أَوْ يَكُونَ مُتَأَخِّرَ الْوَفَاةِ قَدْ شَارَكَ الرَّاوِيَ عَنْهُ جَمَاعَةٌ دُونَهُ فِي السَّمَاعِ مِنْهُ أَوْ يَكُونَ أَصْغَرَ مِنَ الرَّاوِي عَنْهُ سِنًّا أَوْ تَكُونَ أَحَادِيثُهُ الَّتِي عِنْدَهُ عَنْهُ كَثِيرَةً فَلَا يُحِبُّ تَكْرَارَ الرِّوَايَةِ عَنْهُ فَيُغَيِّرُ حَالَهُ لِبَعْضِ هَذِهِ الْأُمُورِ

தத்லீஸ் ஷுயூக் என்றால் தனது ஆசிரியரின் செய்திகளை மற்றவர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால் அவரின் பெயரை வெளிப்படையில் தெரியாதவாறு வேறுபெயரை கூறுவது. (அதாவது ஆசிரியரின் பிரபலமில்லாத பெயரை அல்லது பிரபலமில்லாத புனைப் பெயரைக் கூறுவது)


இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இராகீ…

معرفة علوم الحديث للحاكم (ص107):
وَالْجِنْسُ الرَّابِعُ مِنَ الْمُدَلِّسِينَ قَوْمٌ دَلَّسُوا أَحَادِيثَ رَوَوْهَا عَنِ الْمَجْرُوحِينَ فَغَيَّرُوا أَسَامِيَهُمْ وَكُنَاهُمْ، كَيْ لَا يُعْرَفُوا


இந்த வரைவிலக்கணத்தை இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்கள் சிறிது மாற்றி மற்றவர்கள் அறிய முடியாத வர்ணனைகளைக் கூறி அறிவிப்பது என்று கூறியுள்ளார்.

مقدمة ابن الصلاح = معرفة أنواع علوم الحديث – ت عتر (ص74):
الْقِسْمُ الثَّانِي: تَدْلِيسُ الشُّيُوخِ، وَهُوَ: أَنْ يَرْوِيَ ‌عَنْ ‌شَيْخٍ ‌حَدِيثًا ‌سَمِعَهُ مِنْهُ، فَيُسَمِّيَهُ أَوْ يُكَنِّيَهُ، أَوْ يَنْسُبَهُ، أَوْ يَصِفَهُ بِمَا لَا يُعْرَفُ بِهِ، كَيْ لَا يُعْرَفَ.

மற்றவர்கள் அறியாத வகையில் ஆசிரியரின் தன்மையைக் குறிப்பிடுவது என்ற நிபந்தனை தேவையில்லை என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் சில தன்மைகள் மூலம் சில ஆசிரியர்கள் அறியப்படுவார்கள் என்ற நிலை உள்ளது.


தத்லீஸ் ஷுயூக் செய்பவரால் தத்லீஸ் செய்பவரின் ஆசிரியர் அறியப்படாதவர் என்ற நிலைக்கு சென்றுவிடுவார். காரணம் தத்லீஸ் செய்யும் ஒருவர் மட்டுமே அவரிடமிருந்து அறிவிக்கிறார் என்பதால் இவர் மஜ்ஹூல் ஐன் என்ற நிலையை அடைந்து விடுகிறார்.

தத்லீஸ் செய்தவரின் ஆசிரியர் (சில அடையாளங்களைக் கொண்டு)  அடையாளம் காணப்பட்டால் அவர் அறியப்பட்டவர் ஆகிவிடுவார்.


இவ்வாறு அறியப்பட்டவர்களில் சிலரைப் பற்றிய விளக்கம்:

1 . خُلَيْدِ بْنِ أَبِي خُلَيْدٍ – குலைத் பின் அபூகுலைத்

இவரை அறியப்படாதவர் என்பதால் இவர் இடம்பெறும் செய்தியை பலவீனமானது என்று சிலர் கூறியுள்ளனர்.

ஆனால் இவர் خُلَيْدُ بنُ دَعْلَجَ أَبُو حَلْبَسٍ السَّدُوْسِيُّ – குலைத் பின் தஃலஜ் என்ற பலவீனமானவர் ஆவார் என்ற கருத்தில் மிஸ்ஸீ இமாம், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். பகிய்யது பின் வலீத் இவரின் பெயரை குலைத் பின் அபூகுலைத் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரின் செய்திகள்:


2 . سَعِيد بْن أبي سَعِيد الزُّبيدي – ஸயீத் பின் அபூஸயீத் அஸ்ஸுபைதீ.

இவரை சிலர் அறியப்படாதவர் என்றும்; வேறுசிலர் பலவீனமானவர் என்றும்; வேறு சிலர் பலமானவர் என்றும் கூறியுள்ளனர்.

இவரை அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ ஆகியோர் سعيد بن عبد الجبار الزبيدي الحمصي – ஸயீத் பின் அப்துல்ஜப்பார் என்பவர் ஆவார் என்று முடிவு செய்து இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
ஆகியோரும் இவ்வாறே முடிவு செய்துள்ளனர். (அஸ்ஸுபைதீ என்ற பெயருடைய முஹம்மத் பின் வலீத் என்ற பலமானவர் உள்ளார். ஸயீத் பின் அப்துல்ஜப்பாரை சில அறிவிப்புகளில் அஸ்ஸுபைதீ என்று கூறப்பட்டுள்ளது. சிலர் இவர் முஹம்மத் பின் வலீத் என்ற அடிப்படையில் முடிவு செய்திருப்பதை இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்கள் தவறு என்று குறிப்பிட்டுள்ளார்).

இவரின் செய்திகள்:


3 . அப்துல்லாஹ் பின் உமர் (அல்உமரீ)

இவர் பற்றி இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் பகிய்யது பின் வலீத் இவரிடமிருந்து அறிவித்துள்ளார். இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.

அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவர் யார் என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

العلل لابن أبي حاتم (4/ 45 ت الحميد):
1242 – وسألتُ أَبِي عَنْ حديثٍ رواه بَقِيَّة ، عن عبد الله بْنِ عُمَرَ العُمَري ، عَنْ أَبِي الزِّنَاد، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ؛ قَالَ: قَالَ رسولُ الله (ص) : ‌لَا ‌نِكَاحَ ‌إِلاَّ بِإذْن ِ ‌الرَّجُلِ وَالمَرْأَةِ؟
فَقَالَ أَبِي: هَذَا حديثٌ مُنكَرٌ.


4 . உமர் பின் அபூஉமர்

5 . அபுல்ஹஜ்ஜாஜ் அல்மஹ்ரீ

6 . அபுல்ஃபள்ல்-பஹ்ர் பின் கனீஸ்

7 . அபூபக்ர் அல்அன்ஸீ


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.