தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6913

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29

வாயில்லாப் பிராணிகளால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு கிடையாது.55

இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: வாகனப் பிராணி ஒன்று தமது காலால் (யாரையேனும்) எட்டி உதைத்துவிட்டால் (ஓட்டுநர்) அதற்குப் பொறுப்பாளி அல்லர்; கடிவாளத்தைச் சுண்டியதால் (பிராணி எட்டி உதைத்து) சேதம் ஏற்படின் (ஓட்டுநர்) பொறுப்பாளி ஆவார் என்பது முன்னோர் களின் தீர்ப்பாகும்.

ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: வாகனப் பிராணி எட்டி உதைத்து விட்டால் (ஓட்டுநர்) பொறுப்பாளியாக்கப் பட மாட்டார். யாரேனும் அதைக் குத்தி (அதனால் அது மிரண்டு உதைத்து)விட்டால் தவிர! (அப்போது குத்தியவன் பொறுப்பாளியாக்கப்படுவான்.)

ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: வாகனப் பிராணி பதிலுக்கு பதில் தாக்கினால் அதற்கு யாரும் பொறுப்பல்ல. அதாவது அதை ஒருவர் அடிக்க, அது (பதிலுக்குத்) தனது காலால் தாக்கியது. (அப்போது யாரும் பொறுப்பாளியாக்கப்பட மாட்டார்.)

ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்களும் ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்களும் கூறுகின்றார்கள்: வாடகைக்கு அமர்த்தப்பட்ட கூலியாள் கழுதையை ஓட்டிச்செல்லும் போது அதன் மேல் இருந்த பெண் கீழே விழுந்துவிட்டால் அதற்கு அவன் பொறுப்பல்ல.

ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒருவன் ஒரு வாகனப் பிராணியை (அதிக நேரம்) ஓட்டிச் சென்று, அதனால் அது களைப்படைந்து (யாரையேனும்) காயப் படுத்திவிட்டால் (ஓட்டியவன்) பொறுப்பாளி ஆவான். அவன் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு (அதைத் துன்புறுத்தாமல்) தானாகச் செல்லவிட்டிருந்தால், அப்போது அவன் பொறுப்பாளி அல்லன்.

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வாயில்லாப் பிராணிகளால் சேதம் நேர்ந்தால் இழப்பீடு இல்லை. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு இல்லை. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு இல்லை. புதையலில் ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.56

இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத குடிமகனைக் குற்றமேயின்றி கொலை செய்வதிலுள்ள பாவம்.

Book : 87

(புகாரி: 6913)

بَابٌ: العَجْمَاءُ جُبَارٌ
وَقَالَ ابْنُ سِيرِينَ: «كَانُوا لاَ يُضَمِّنُونَ مِنَ النَّفْحَةِ، وَيُضَمِّنُونَ مِنْ رَدِّ العِنَانِ» وَقَالَ حَمَّادٌ: «لاَ تُضْمَنُ النَّفْحَةُ إِلَّا أَنْ يَنْخُسَ إِنْسَانٌ الدَّابَّةَ» وَقَالَ شُرَيْحٌ: «لاَ تُضْمَنُ مَا عَاقَبَتْ، أَنْ يَضْرِبَهَا فَتَضْرِبَ بِرِجْلِهَا» وَقَالَ الحَكَمُ، وَحَمَّادٌ: «إِذَا سَاقَ المُكَارِي حِمَارًا عَلَيْهِ امْرَأَةٌ فَتَخِرُّ، لاَ شَيْءَ عَلَيْهِ» وَقَالَ الشَّعْبِيُّ: «إِذَا سَاقَ دَابَّةً فَأَتْعَبَهَا، فَهُوَ ضَامِنٌ لِمَا أَصَابَتْ، وَإِنْ كَانَ خَلْفَهَا مُتَرَسِّلًا لَمْ يَضْمَنْ»

حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«العَجْمَاءُ عَقْلُهَا جُبَارٌ، وَالبِئْرُ جُبَارٌ، وَالمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.