உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகளின் படையை எதிர்) கொள்ளலாமா? அல்லது (பகைவர்களின் படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாமா?” என்று ஆலோசனை கேட்க அவர்கள், “(ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாம்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அணிந்துகொண்டு (ஊருக்கு வெளியே செல்ல) உறுதிகொண்டு புறப்பட்ட போது, தோழர்கள் “ஊரிலேயே தங்கி விடுங்கள்” என்று (மாற்று யோசனை) சொன்னார்கள். ஆனால், உறுதி கொண்டு விட்ட பின்னால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள், “(போருக்குப் புறப்படத் தயாராகி) தமது கவச ஆடையை அணிந்து கொண்ட எந்த ஒரு இறைத்தூதருக்கும் அல்லாஹ் தீர்மானிக்கும் வரை அதைக் கீழே வைப்பது முறையாகாது” என்று சொன் னார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 14787)حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، وَعَفَّانُ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ عَفَّانُ فِي حَدِيثِهِ: أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ، وَقَالَ عَبْدُ الصَّمَدِ فِي حَدِيثِهِ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«رَأَيْتُ كَأَنِّي فِي دِرْعٍ حَصِينَةٍ، وَرَأَيْتُ بَقَرًا مُنَحَّرَةً، فَأَوَّلْتُ أَنَّ الدِّرْعَ الْحَصِينَةَ الْمَدِينَةُ، وَأَنَّ الْبَقَرَ نَفَرٌ، وَاللَّهِ خَيْرٌ» ، قَالَ: فَقَالَ لِأَصْحَابِهِ: «لَوْ أَنَّا أَقَمْنَا بِالْمَدِينَةِ فَإِنْ دَخَلُوا عَلَيْنَا فِيهَا قَاتَلْنَاهُمْ» ، فَقَالَوا: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا دُخِلَ عَلَيْنَا فِيهَا فِي الْجَاهِلِيَّةِ، فَكَيْفَ يُدْخَلُ عَلَيْنَا فِيهَا فِي الْإِسْلَامِ؟ – قَالَ عَفَّانُ فِي حَدِيثِهِ: فَقَالَ: «شَأْنَكُمْ إِذًا» – قَالَ: فَلَبِسَ لَأْمَتَهُ، قَالَ: فَقَالَتِ الْأَنْصَارُ: رَدَدْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْيَهُ، فَجَاءُوا، فَقَالَوا: يَا نَبِيَّ اللَّهِ، شَأْنَكَ إِذًا، فَقَالَ: «إِنَّهُ لَيْسَ لِنَبِيٍّ إِذَا لَبِسَ لَأْمَتَهُ أَنْ يَضَعَهَا حَتَّى يُقَاتِلَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-14260.
Musnad-Ahmad-Shamila-14787.
Musnad-Ahmad-Alamiah-14260.
Musnad-Ahmad-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்