தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23854

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“விபச்சாரக் குற்றம் தொடர்பாக நீங்கள் என்ன (கருத்தைக்) கூறுகிறீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அதைத் தடைசெய்துள்ளனர். அது கியாமத் நாள்வரை தடைசெய்யப்பட்டதாகும்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் “ஒரு மனிதன் பத்துப் பெண்களுடன் விபச்சாரம். செய்வ(தினால் ஏற்படும் பாவச்சுமையாகிறது, அவன் தனது அண்டை வீட்டானின் மனைவியுடன் விபச்சாரம் செய்வ(தினால் ஏற்படும் பெரும்பாவத்)தை விட அவனுக்கு இலேசானதாகும்” என்று கூறினார்கள்.

பின்னர் “திருட்டுக் குற்றம் தொடர்பாக நீங்கள் என்ன (கருத்தைக்) கூறுகிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வும், அவனது தூதரும் அதைத் தடைசெய்துள்ளனர். எனவே அது (கியாமத் நாள்வரை) தடுக்கப்பட்டதாகும்” என்று நபித்தோழர்கள் கூறினர்.

”ஒரு மனிதன் பத்து வீடுகளில் திருடுவ(தினால் ஏற்படும் பாவச் சுமையாகிறறது, அவன் தனது அண்டை வீட்டானிடம் திருடுவ(தினால் ஏற்படும் பெரும்பாவத்)தை விட அவனுக்கு இலேசானதாகும்” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 23854)

بَقِيَّةُ حَدِيثِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعْدٍ الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا ظَبْيَةَ الْكَلَاعِيَّ، يَقُولُ: سَمِعْتُ الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ، يَقُولُ:

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «مَا تَقُولُونَ فِي الزِّنَا؟» قَالُوا: حَرَّمَهُ اللَّهُ وَرَسُولُهُ، فَهُوَ حَرَامٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «لَأَنْ يَزْنِيَ الرَّجُلُ بِعَشْرَةِ نِسْوَةٍ، أَيْسَرُ عَلَيْهِ مِنْ أَنْ يَزْنِيَ بِامْرَأَةِ جَارِهِ» ، قَالَ: فَقَالَ: «مَا تَقُولُونَ فِي السَّرِقَةِ؟» قَالُوا: حَرَّمَهَا اللَّهُ وَرَسُولُهُ فَهِيَ حَرَامٌ، قَالَ: «لَأَنْ يَسْرِقَ الرَّجُلُ مِنْ عَشْرَةِ أَبْيَاتٍ، أَيْسَرُ عَلَيْهِ مِنْ أَنْ يَسْرِقَ مِنْ جَارِهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-22734.
Musnad-Ahmad-Shamila-23854.
Musnad-Ahmad-Alamiah-22734.
Musnad-Ahmad-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.