தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-45008-மஃமர் பின் ராஷித்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

மஃமர் பின் ராஷித் பிறப்பு ஹிஜ்ரி 95
இறப்பு ஹிஜ்ரி 153
வயது: 58
معمر بن راشد

இறப்பு: ஹி-154

தரம்: மிகப் பலமானவர், என்றாலும் இவர் சிலரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளை சரியாக மனனமிடவில்லை.


இயற்பெயர்: மஃமர்

தந்தை பெயர்: ராஷித்

புனைப்பெயர்: அபூஉர்வா

ஊர் பெயர்: யமன், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி-96.

இறப்பு: ஹிஜ்ரி-154.

கால கட்டம்: 7.


இவர் ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களில் ஒருவர். ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களான மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் மஃமர் என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறு ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களை முதல் தரத்திலிருந்து கடைசி தரம் வரை வகைப்படுத்துவதில் சில அறிஞர்களிடம் மாற்றுக் கருத்தும் உள்ளது.

ஈராக்வாசிகளிடமிருந்து மஃமர் அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. ஆனால் ஈராக்வாசிகளான ஸுஹ்ரீ, அப்துல்லாஹ் தாவூஸ் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிப்பவை சரியானது என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
கூறியுள்ளார். புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்கள் இந்த வகை அறிவிப்பாளர்தொடரை பதிவு செய்துள்ளனர்.

ஸுஹ்ரீ, அப்துல்லாஹ் தாவூஸ், ஹம்மாம் பின் முனப்பிஹ் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிப்பவை சரியானவை.


முஸ்லிமில் இடம்பெறும் இரு செய்திகளைத் தவிர மஃமர் அவர்கள் ஸாபித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்…


ஸாபித், ஹிஷாம் பின் உர்வா,பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
ஆஸிம் பின் அபுன்னுஜூத் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை…


அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் மாணவர் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் அத்தபரீ என்பவரின் அறிவிப்புக் குறித்து:

ஆய்வுக்காக: மஃமர் – ஸாபித் குறித்து அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களின் தகவல்
.


இஸ்ஹாக் அத்தபரீ என்பவரின் நூல்: ஹதீஸு இஸ்ஹாக் தபரீ.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.