தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-984

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

984. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தன் மனைவியை ஒரு அடிமைப் பெண்ணை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறாரே! (அவ்வாறு செய்ய வேண்டாம்).

உங்களில் சிறந்தவர் யாரெனில், அவர் தன் குடும்பத்தாரிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே ஆவார்.

அறிவிப்பவர்: (ரலி)


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் முதல் பகுதியான “உங்களில் சிறந்தவர் உங்கள் குடும்பத்தாரிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே” எனும் செய்தியை ஹிஷாம் பின் உர்வா —> உர்வா என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக’ பலரும் அறிவித்துள்ளனர்.

ஹிஷாம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் சில மாணவர்கள் ‘முத்தஸிலாக’ அறிவித்துள்ளனர். (பார்க்க: திர்மிதீ-3895)


“பெண்களை அடிப்பது தொடர்பான” இரண்டாவது பகுதியை ஹிஷாம் பின் உர்வா —> அவரின் தந்தை உர்வா —> அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அதிகமானோர் அறிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியை ளஹ்ஹாக் பின் உஸ்மான் அவர்கள் ஹிஷாம் பின் உர்வா —> அவரின் தந்தை உர்வா —> ஆயிஷா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.


மேற்கண்ட ஹிஷாம் பின் உர்வா —> அவரின் தந்தை உர்வா —> ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தியை முஃகீரா பின் முஸ்லிமைத் தவிர வேறு யாரும் அறிவித்ததாக நாம் அறியவில்லை. மேலும், இதை ஸகரிய்யா பின் யஹ்யா —> ஷபாபா —> முஃகீரா பின் முஸ்லிம் என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் நாம் செவியுற்றுள்ளோம்.


 

ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)

ஸுபைர் பின் அவ்வாம்-அல்மதனீ (ரலி) – Zubayr ibn al-Awwam

இறப்பு: ஹிஜ்ரி 36, பஸரா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸுபைர் பின் அவ்வாம் பின் குவைலித் பின் அஸத் பின் அப்துல் உஸ்ஸா பின் குஸய்யி பின் கிலாப் பின் முர்ரா

தந்தை பெயர்: அவ்வாம் பின் குவைலித்

வம்சம்: குரைஷீ, அஸதீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், ஹவாரிய்யுன் நபி (நபி (ஸல்) அவர்களின் சீடர்)

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 28, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 36, பஸரா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஸுபைர் பின் அவ்வாம் ரலி அவர்கள் நபித்தோழர் ஆவார். இவர் நபி (ஸல்) அவர்களின் அத்தை ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகன். சுவர்க்கம் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்களில் இவரும் ஒருவர்.

அல்லாஹ்வின் பாதையில் முதன்முதலில் வாளை உருவியவர் இவரே. பத்ர் உட்பட நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துப் போர்களிலும் கலந்துகொண்டார். ஹிஜ்ரி 36 ஆம் ஆண்டு பஸரா அருகே ஷஹீதாக்கப்பட்டார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், உர்வா பின் அஸ்ஸுபைர், அஹ்னஃப் பின் கைஸ், கைஸ் பின் அபூஹாஸிம், மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான், மைமூன் பின் மெஹ்ரான், நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம், ஹஸன் அல் பஸரீ, முஸ்லிம் பின் ஜுன்துப் அல்ஹுதலீ, அபூ ஜர்வ் அல்மாஸினீ, அபூ ஹகீம், உம்மு அதா

வேறு பெயர்கள்: அபூ அப்துல்லாஹ், அஸ்ஸுபைர்


ஆதாரம்: muslimscholars.info (7) · Should verify


حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الضَّرِيرُ، قَالَ: نا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، قَالَ: نا مُغِيرَةُ بْنُ مُسْلِمٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّبَيْرِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَلَا عَسَى أَحَدُكُمْ أَنْ يَضْرِبَ امْرَأَتَهُ ضَرْبَ الْأَمَةِ أَلَا خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ»

وَهَذَا الْحَدِيثُ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ فِي قِصَّةِ: خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ مُرْسَلًا وَأَسْنَدَهُ بَعْضُ أَصْحَابِ هِشَامٍ وَأَمَّا قِصَّةُ ضَرْبِ النِّسَاءِ فَرَوَاهُ هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ هَكَذَا رَوَاهُ جَمَاعَةٌ وَرَوَاهُ الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ وَلَا نَعْلَمُ أَحَدًا رَوَاهُ عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّبَيْرِ، إِلَّا مُغِيرَةُ بْنُ مُسْلِمٍ وَلَمْ نَسْمَعْهُ إِلَّا مِنْ زَكَرِيَّا بْنِ يَحْيَى عَنْ شَبَابَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ مُسْلِمٍ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-984.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


3 . இந்தக் கருத்தில் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-984,


மேலும் பார்க்க: முஸ்லிம்-5484.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.