தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-43581-இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

இப்னு மாஜா இமாம்.

 

 


இமாம் இப்னுமாஜா

முழுப்பெயர்: முஹம்மது இப்னு யஸீது  அர்ரபீஃ அல்கஸ்வீனி (சுனன் இப்னுமாஜா ஹதீஸ் நூலைத் தொகுதத்தவர்)

புனைப்பெயர்: அபு அப்துல்லாஹ் இப்னுமாஜா அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: யஸீது

பிறந்த ஊர்: கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 209ம் ஆண்டு.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: இராக்கில் உள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் மக்கா, ஷாம், எகிப்து, ஹிஜாஸ், ரயீ, பஸரா மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர்போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்துள்ளார்.

இவர் தொகுத்த நூல்கள்:

சுனன் இப்னுமாஜா

தஃப்ஸீருல் குர்ஆன் (குர்ஆன் விரிவுரை)

தாரீகுல் கஸ்வீன்

போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:

இப்னு அபீஷைபா, இப்னு தக்வானில் காரியீ, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு ஸாபிதில் ஜஹ்தரீ, அலீ இப்னு முஹம்மதித் தனாஃபுஸீ, முஸ்அப் இப்னு அப்தில்லாஹ் ஸபீரீ, இப்ராஹீம் இப்னு முன்திரில் ஹஸாமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

இவரது மாணவர்கள்:

ஜஃபர் இப்னு இத்ரீஸ், முஹம்மது இப்னு ஈஸஸ் ஸஃபாரீ, இஸ்ஹாக் இப்னு முஹம்மதுல் கஸ்வீனீ, சுலைமான் இப்னு யஸீது, அபூஅம்ர் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு  முஹம்மது இப்னு குஹைமில் மதீனீ, இப்ராஹீம் இப்னு தீனாரில் கவ்ஷபீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 273ம் ஆண்டு ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 64. (தகவல்: பயான் சைட்)


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.