தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-33081-ஈஸா பின் மைமூன் பின் தலீதான்

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஈஸா பின் மைமூன் பின் தலீதான்-عيسى بن ميمون بن تليدان

இறப்பு: ஹி-.

தரம்:


இயற்பெயர்:

தந்தை பெயர்:

வமிசம்:

புனைப்பெயர், பட்டப்பெயர்:

ஊர் பெயர்:

பயணம் செய்த ஊர்கள்:

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-.

கால கட்டம்: .



 

 

 


…ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் உள்ளனர். இவ்விருவரின் பெயரும் ஈஸா, இவ்விருவரின் தந்தை பெயரும் மைமூன் என்று அமைந்தது போல் இவ்விருவரும் யாரிடம் கேட்டு திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவிக்கிறார்களோ அவர் பெயர் காஸிம் ஆகும். காஸிம் என்பவரின் தந்தை முஹம்மத் ஆகும்.

ஆனால் இரண்டு காஸிம்களும் வெவ்வேறு நபர்களாவர்.

  • திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் கஅப் என்பவரின் பேரனும் முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.
  • குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் அபூபக்கர் (இஸ்லாத்தின் முதல் கலீஃபா) அவர்களின் பேரனும் முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.

இவ்விருவர் பெயரும் ஈஸா பின் மைமூன் என்று இருப்பதாலும், இவ்விருவரின் ஆசிரியர்கள் பெயர் காஸிம் பின் முஹம்மத் என்று இருப்பதாலும் சில அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு தவறான முடிவுக்கு வந்துள்ளனர்.

இவ்விருவர் பெயரும், இவ்விருவரின் ஆசிரியர் பெயரும், இவ்விருவரின் தந்தை பெயரும் ஒன்று பட்டதால் குழப்பம் ஏற்பட்டாலும் வேறு சான்றுகள் மூலம் இவ்விருவரையும் வேறுபடுத்தி அறிய முடியும்.

1 . குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன், (மூஸா) இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாபாவின் வழித்தோன்றல் ஆவார். இவர் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் போது இப்னு ஸக்பரா என்று இவரைக் கூறுவார். வகீவு, அபூநயீம் ஆகியோர் யார் வழியாக அறிவிக்கிறார்களோ அந்த ஈஸா தான் இவர். இவரிடம் குறைபாடு இல்லை.

2 . திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்’ என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஃபு என்பவர் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான மற்றொரு ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத, பலவீனமானவர் ஆவார்.

(நூல்: தாரீகு அஸ்மாயிஸ் ஸிகாத்-1062)

3 . முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் வேறொரு ஈஸா ஆவார்” என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார். ஆயிஷா,பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதவர்’ என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக அப்பாஸ் அத்தவ்ரீ கூறிவிட்டு மற்றொரு இடத்தில் “இந்த ஈஸா என்பவர் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான ஈஸா தான் இவர். இவர் தான் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதவர்’ என்று தெளிவுபடுத்துகிறார்.

(நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 23, பக்: 48)

மேற்கண்ட செய்தியின் மூலம் ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்ததையும் அதில் ஒருவர் தான் பலவீனமானவர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

மேலும் பலவீனமானவர் யார் என்பதற்கு மூன்று அடையாளங்களையும் கூறுகிறார்கள்.

1. திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர்.

2. முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர்.

3. குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர் அல்ல.

இந்த மூன்று அம்சம் உள்ள ஈஸா தான் பலவீனமானவர்.

மற்றொரு ஈஸா பலவீனமானவர் அல்லர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். இதற்கும் மூன்று அடையாளங்களைக் கூறுகிறார்கள்.

1. குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர்

2. இவருடைய மாணவர் ஹம்மாத் பின் ஸலமா

3. வகீவு, அபூநயீம் ஆகியோர் இவர் வழியாக அறிவித்திருப்பார்கள்.

  • மேலும் இவர் பெயர் முஸ்னத் அஹ்மதில் இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்றும்,
  • முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹியில் மூஸா பின் பக்ர் என்றும்,
  • முஸ்னத் தயாலிஸியில் மூஸா பின் தலீதான் என்றும் வருவதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்றோர் இவர்கள் அறியப்படாதவர்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் இம்மூவரும் உண்மையில் மூன்று நபர்கள் அல்லர். நம்பகமானவரான ஈஸா பின் மைமூன் தான்…

 


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.