528. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”வெள்ளிக்கிழமையன்று குளிப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். மேலும், உங்களில் ஒருவர் தம் குடும்பத்தாரின் நறுமணத்தைப் பூசிக் கொள்ளட்டும்; அவ்வாறு நறுமணம் கிடைக்கவில்லை எனில், தண்ணீரே அவருக்கு நறுமணமாகும் (அதாவது, நறுமணம் கிடைக்காத பட்சத்தில், தண்ணீரால் உடலைத் தூய்மையாக்குவதே அவருக்கு நறுமணம் பூசியதற்கு நிகராகும்).”
அறிவிப்பாளர்:பராஃ பின் ஆசிப் (ரலி)
بَابٌ فِي السِّوَاكِ وَالطِّيبِ يَوْمَ الجُمُعَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الحَسَنِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو يَحْيَى إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«حَقٌّ عَلَى المُسْلِمِينَ أَنْ يَغْتَسِلُوا يَوْمَ الجُمُعَةِ، وَلْيَمَسَّ أَحَدُهُمْ مِنْ طِيبِ أَهْلِهِ، فَإِنْ لَمْ يَجِدْ فَالمَاءُ لَهُ طِيبٌ»
وَفِي البَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَشَيْخٍ مِنَ الأَنْصَارِ،
சமீப விமர்சனங்கள்