தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-651

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

651.

 


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

ஷுஃபாவின் தோழரான அப்துல்லாஹ் பின் உஸ்மான் அவருக்கு (ஸுஃப்யானிடம்), ஹகீமை தவிர வேறு யாராவது இதை அறிவித்திருந்தால் (ஏற்றுக்கொள்ளலாம்) என்று கூறினார். அதற்கு ஸுஃப்யான் அவரிடம், ஹகீமிற்கு என்ன ஆயிற்று, அவரிடமிருந்து ஷுஃபா அறிவிக்க மாட்டாரா என்ன என்று கேட்டார். அவர் ஆம் என்றார். ஸுஃப்யான் கூறினார்: இதை ஸுபைத் அவர்கள் முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் அவர்களிடமிருந்து அறிவிப்பதை நான் கேட்டுள்ளேன்.

இதன் அடிப்படையில் தான் எங்களுடைய தோழர்களில் சிலரிடம் நடைமுறை உள்ளது, இதையே ஸவ்ரி, அப்துல்லாஹ் பின் முபாரக், அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோர் கூறுகின்றனர்: ஒரு மனிதரிடம் ஐம்பது திர்ஹம்கள் இருந்தால் அவருக்கு ஸதகா ஆகுமானதல்ல என்று கூறினர்.

சில கல்வியாளர்கள் ஹகீம் பின் ஜுபைரின் ஹதீஸை நோக்கி செல்லவில்லை, இதில் விரிவான கருத்தை கொடுத்துள்ளனர். அவரிடம் ஐம்பது திர்ஹம்கள் அல்லது அதற்கு மேல் இருந்தாலும் அவர் தேவையுடையவராக இருந்தால் அவர் ஸகாத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினர். இது தான் ஷாஃபிஈ மற்றும் ஃபிக்ஹ் கலை மற்றும் கல்வியில் உள்ள மற்ற அறிஞர்களின் கூற்றாகும்.


حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ

بِهَذَا الحَدِيثِ

فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ صَاحِبُ شُعْبَةَ: لَوْ غَيْرُ حَكِيمٍ حَدَّثَ بِهَذَا، فَقَالَ لَهُ سُفْيَانُ: وَمَا لِحَكِيمٍ لَا يُحَدِّثُ عَنْهُ شُعْبَةُ؟ قَالَ: نَعَمْ، قَالَ سُفْيَانُ: سَمِعْتُ زُبَيْدًا يُحَدِّثُ بِهَذَا، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، ” وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَصْحَابِنَا، وَبِهِ يَقُولُ الثَّوْرِيُّ، وَعَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ قَالُوا: إِذَا كَانَ عِنْدَ الرَّجُلِ خَمْسُونَ دِرْهَمًا لَمْ تَحِلَّ لَهُ الصَّدَقَةُ «،» وَلَمْ يَذْهَبْ بَعْضُ أَهْلِ العِلْمِ إِلَى حَدِيثِ حَكِيمِ بْنِ جُبَيْرٍ، وَوَسَّعُوا فِي هَذَا، وَقَالُوا: إِذَا كَانَ عِنْدَهُ خَمْسُونَ دِرْهَمًا، أَوْ أَكْثَرُ وَهُوَ مُحْتَاجٌ، فَلَهُ أَنْ يَأْخُذَ مِنَ الزَّكَاةِ، وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ، وَغَيْرِهِ مِنْ أَهْلِ الفِقْهِ وَالعِلْمِ ”





 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.