ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) ‘தல்பியா’ சொன்னோம். துல்ஹஜ் மாதம் நான்காம் நாள் நாங்கள் மக்கா வந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இறையில்லம் கஅபாவையும் ஸஃபா – மர்வாவையும் சுற்றி (தவாஃபும் சஃயும் செய்து)விட்டு, தம்முடன் குர்பானிப் பிராணி கொண்டு வந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அந்த ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி, இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களையும் தல்ஹா(ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரிடமும் குர்பானிப் பிராணி இருக்கவில்லை. அலீ(ரலி) அவர்கள் குர்பானிப் பிராணியுடன் யமன் நாட்டிலிருந்து வந்தார்கள். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜ் -உம்ரா ஆகிய இரண்டில்) எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக நானும் இஹ்ராம் கட்டினேன்’ என அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் (சிலர்), ‘தாம்பத்திய உறவு கொண்ட கையோடு நாங்கள் ‘மினா’விற்குச் செல்ல வேண்டுமா?’ என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(ஹஜ் பருவத்தில் உம்ரா செய்யலாம் என) நான் இப்போது அறிந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் (பலியிட) குர்பானிப் பிராணி கொண்டு வந்திருக்கமாட்டேன்; நான் என்னுடன் குர்பானிப் பிராணியை கொண்டு வந்திருக்காவிடில் இஹ்ராமிலிருந்து நான் விடுபட்டிருப்பேன்’ என்று கூறினார்கள்.
(இதையடுத்து) ஜம்ரத்துல் அகபாவில் நபி(ஸல்) அவர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கையில் அவர்களை சுராக்கா இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சந்தித்து, ‘இறைத்தூதர் அவர்களே! இ(வ்வாறு ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்வ)து, எங்களுக்கு மட்டும் உரியதா? (எல்லாத் தலைமுறையினருக்கும் பொதுவானதா)’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை! எல்லாக் காலத்து (மக்களு)க்கும் உரியது’ என்று பதிலளித்தார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்கள் மாதவிடாயோடு மக்காவிற்கு நபி(ஸல்) அவர்களுடன் வந்திருந்தார்கள். ‘ஹஜ்ஜுக் கிரியைகள் அனைத்தையும் செய்யலாம்; ஆனால் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரை இறையில்லத்தைச் சுற்றிவரக் கூடாது; தொழக் கூடாது’ என்று ஆயிஷாவுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நபியவர்களும் மக்களும் ‘பத்ஹா’ எனும் இடத்தில் தங்கியபோது ஆயிஷா(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் (எல்லோரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிச் செல்ல நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிச் செல்வதா?’ என்று (மனக் குறையுடன்) கேட்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அவர்களை(த் தம் சகோதரி) ஆயிஷா(ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அப்போது ஆயிஷா(ரலி) அவர்கள் (அங்கு சென்று உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொண்டு) துல்ஹஜ மாதத்தில் ஹஜ் நாள்கள் கழிந்த பின் ஓர் உம்ராவை நிறைவேற்றினார்கள்.5
Book :94
(புகாரி: 7230)حَدَّثَنَا الحَسَنُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ
كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَبَّيْنَا بِالحَجِّ، وَقَدِمْنَا مَكَّةَ لِأَرْبَعٍ خَلَوْنَ مِنْ ذِي الحِجَّةِ، فَأَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَطُوفَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالمَرْوَةِ، وَأَنْ نَجْعَلَهَا عُمْرَةً وَنَحِلَّ، إِلَّا مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ، قَالَ: وَلَمْ يَكُنْ مَعَ أَحَدٍ مِنَّا هَدْيٌ غَيْرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَطَلْحَةَ، وَجَاءَ عَلِيٌّ مِنَ اليَمَنِ مَعَهُ الهَدْيُ، فَقَالَ: أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: نَنْطَلِقُ إِلَى مِنًى، وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الهَدْيَ لَحَلَلْتُ»، قَالَ: وَلَقِيَهُ سُرَاقَةُ وَهُوَ يَرْمِي جَمْرَةَ العَقَبَةِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَلَنَا هَذِهِ خَاصَّةً؟ قَالَ: «لاَ، بَلْ لِأَبَدٍ»، قَالَ: وَكَانَتْ عَائِشَةُ قَدِمَتْ مَعَهُ مَكَّةَ وَهِيَ حَائِضٌ، فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَنْسُكَ المَنَاسِكَ كُلَّهَا، غَيْرَ أَنَّهَا لاَ تَطُوفُ، وَلاَ تُصَلِّي، حَتَّى تَطْهُرَ، فَلَمَّا نَزَلُوا البَطْحَاءَ، قَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ، أَتَنْطَلِقُونَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ، وَأَنْطَلِقُ بِحَجَّةٍ؟ قَالَ: ثُمَّ أَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنْ يَنْطَلِقَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ عُمْرَةً فِي ذِي الحَجَّةِ بَعْدَ أَيَّامِ الحَجِّ
சமீப விமர்சனங்கள்