தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7442

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுகை தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும் நீயே வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகியாவாய். உனக்கே புகழ் அனைத்தும் நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும் நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் ஒளியும் ஆவாய். நீயே உண்மை. உன் சொல் உண்மை. உன் வாக்கு உண்மை. உன் சந்திப்பு உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே என் வழக்குகளைக் கொண்டு வந்தேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களையும், என்னைவிட எதை நீ நன்கு அறிந்துள்ளாயோ அதையும் மன்னித்தருள்வாயாக. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை.82

(மேற்கண்ட ஹதீஸில் ‘நிர்வாம்’ என்பதைக் குறிக்க ‘கய்யிம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) வேறு சில அறிவிப்புகளில் ‘கய்யாகி’ மற்றும் ‘கய்யூம்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘அனைத்தையும் கண்காணிப்பவன்’ என்று பொருள்.

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் (திருக்குர்ஆன் 02:255 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அல்கய்யாகி’ என ஓதியுள்ளார்கள். இரண்டுமே புகழைக் குறிக்கும் (மிகைச்) சொற்கள் தாம்.

Book :97

(புகாரி: 7442)

حَدَّثَنِي ثَابِتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَهَجَّدَ مِنَ اللَّيْلِ قَالَ: «اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَلَكَ الحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الحَقُّ، وَقَوْلُكَ الحَقُّ، وَوَعْدُكَ الحَقُّ، وَلِقَاؤُكَ الحَقُّ، وَالجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ خَاصَمْتُ، وَبِكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، لاَ إِلَهَ إِلَّا أَنْتَ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ قَيْسُ بْنُ سَعْدٍ، وَأَبُو الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، «قَيَّامُ»، وَقَالَ مُجَاهِدٌ: «القَيُّومُ القَائِمُ عَلَى كُلِّ شَيْءٍ»، وَقَرَأَ عُمَرُ، القَيَّامُ، «وَكِلاَهُمَا مَدْحٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.