பாடம்:
நபி (ஸல்) அவர்கள், இரவுத் தொழுகையைத் துவக்கும்போது தக்பீர் கட்டிய பிறகுதான் இந்த (திக்ர் தஹ்மீத்) புகழ் வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்; இந்த பிரார்த்தனையை ஓதினார்கள்; தக்பீர் கட்டுவதற்கு முன்னர் அல்ல என்பதற்குரிய ஆதாரம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக நின்றால், தக்பீர் கட்டிய பிறகு (கீழ்க்கண்டவாறு) கூறுவார்கள்:
அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த நூருஸ் ஸமாவாத்தி வல் அர்ள். வலகல் ஹம்து, அன்த கியாமுஸ் ஸமாவாத்தி வல் அர்ள். வலகல் ஹம்து, அன்த ரப்புஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, வ மன் ஃபீஹின். அன்தல் ஹக்கு. வ கவ்லுக ஹக்குன். வ வஃதுக ஹக்குன். வ லிக்காஉக ஹக்குன். வல்ஜன்னது ஹக்குன். வன்நாரு ஹக்குன். வஸ்ஸாஅது ஹக்குன்.
அல்லாஹும்ம லக அஸ்லம்து. வ பிக ஆமன்து. வ அலைக்க தவக்கல்து. வ இலைக்க அனப்து. வ இலைக்க ஹாகம்து. வ இலைக்க காஸம்து. வ இலைகல் மஸீர். அல்லாஹும் மஃக்ஃபிர்லீ மா கத்தம்து வமா அஃக்கர்து. வமா அஸ்ரர்து, வமா அஃலன்து. அன்த இலாஹீ, லா இலாஹ இல்லா அன்த.
(பொருள்: இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசம். புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள் மற்றும் பூமியை நிர்வகிப்பவன். புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்தின் இறைவன். நீயே உண்மையானவன்! உனது சொல்லும் உண்மை! உனது வாக்கும் உண்மை! உன்னைக் கண்டடைவதும் உண்மை! சொர்க்கம் உண்மை! நரகம் உண்மை! மறுமைநாள் உண்மை!
இறைவா! உனக்கே நான் கட்டுப்பட்டேன். உன்னையே நான் நம்பினேன். உன்னையே நான் சார்ந்தேன். உன்னிடமே நான் திரும்பினேன். உன்னிடமே நான் தீர்ப்புக் கோரினேன். உனக்காகவே நான் வாதிட்டேன். உன்னிடமே நான் திரும்புவேன்.
இறைவா! நான் முந்திச் செய்த பாவங்களையும், பிந்திச் செய்த பாவங்களையும், இரகசியமாகச் செய்த பாவங்களையும், பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் எனக்கு மன்னிப்பாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.)
(ibn-khuzaymah-1152: 1152)بَابُ ذِكْرِ الدَّلِيلِ عَلَى أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا كَانَ يَحْمَدُ بِهَذَا التَّحْمِيدِ وَيَدْعُو بِهَذَا الدُّعَاءِ لِافْتِتَاحِ صَلَاةِ اللَّيْلِ بَعْدَ التَّكْبِيرِ لَا قَبْلُ
ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، نا بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ، ثنا عِمْرَانُ وَهُوَ ابْنُ مُسْلِمٍ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ قَالَ بَعْدَمَا يُكَبِّرُ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قِيَامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الْحَقُّ، وَقَوْلُكَ حَقٌّ، وَوَعْدُكَ حَقٌّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، وَإِلَيْكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ»
Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-1152.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-1093.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு குஸைமா-முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் குஸைமா
2 . முஹம்மத் பின் அப்துல்அஃலா
3 . பிஷ்ர் பின் முஃபள்ளல்
4 . இம்ரான் பின் முஸ்லிம்
5 . கைஸ் பின் ஸஃத்
6 . தாவூஸ் பின் கைஸான்
7 . இப்னு அப்பாஸ் (ரலி)
ஆய்வின் சுருக்கம்:
மேற்கண்ட ஹதீஸில் வந்துள்ள துஆ தஹஜ்ஜுத் தொழுகையில் “தக்பீர் தஹ்ரீமாவான ஆரம்ப தக்பீருக்கு” பிறகு ஓதவேண்டியவையாகும்.
சில ஹதீஸ்களில் “தஹஜ்ஜுத் தொழுகையில் நின்றால்” என்ற வாசகம் வந்துள்ளது. சிலர் இதை தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழும்போது என்று புரிந்துள்ளார்கள்.
சிலரின் அறிவிப்பில் இந்த பிரார்த்தனை “ஆரம்ப தக்பீருக்கு பின்” என்று வாசகம் வந்துள்ளதால் இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற பலரும் இது தொழுகையில் தக்பீர் தஹ்ரீமாவுக்கு பின் கூறவேண்டிய ஆரம்ப துஆ-ஸனா என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம், இப்னு ஜுரைஜ் ஆகியோர் வழியாக வரும் செய்திகள் பெரும்பாலும் ஒன்றுபோல் உள்ளது. ஆனால் இப்னு உயைனா அவர்கள் வழியாக வரும் செய்திகளில் கூடுதல் குறைவு உள்ளது என்று முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் குறிப்பிட்டுள்ளார். இம்ரான் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
வழியாக வரும் (மேற்கண்ட) செய்தியில் வரும் பிரார்த்தனை வாசகங்கள் ஏறக்குறைய மற்றவர்களின் செய்திக்கு நெருக்கமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பார்க்க: முஸ்லிம்-1417.
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இம்ரான் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
—> கைஸ் பின் ஸஃத் —> தாவூஸ் பின் கைஸான் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸ்லிம்-1417, அபூதாவூத்-772, குப்ரா நஸாயீ-11300, இப்னு குஸைமா-1152, முஸ்தக்ரஜ் அபூஅவானா-2232, இப்னு ஹிப்பான்-2599 , …
- முஸ்தக்ரஜ் அபூஅவானா-2232.
مستخرج أبي عوانة (2/ 38)
2232 – حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا مَنْصُورُ بْنُ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، عَنْ شَيْبَانَ الْأُبُلِّيِّ، عَنْ مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ قَالَ: ثنا عِمْرَانُ الْقَصِيرُ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ كَبَّرَ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ قِيَامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَأَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا فِيهِنَّ، لَكَ الْحَمْدُ رَبَّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَأَنْتَ حَقٌّ، وَوَعْدُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، أَنْتَ رَبُّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ، رَبِّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ»
…
மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் அவர்களின் அறிவிப்புகள்:
- மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அபுஸ்ஸுபைர் —> தாவூஸ் பின் கைஸான் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: மாலிக்- 574, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 29335, அஹ்மத்- 2710, 2812, அல்அதபுல் முஃப்ரத்- 697, முஸ்லிம்-1417, அபூதாவூத்- 771, திர்மிதீ- 3418, குப்ரா நஸாயீ- 7657, 10638, முஸ்தக்ரஜ் அபூஅவானா-2231, இப்னு ஹிப்பான்- 2598, …
இப்னு ஜுரைஜ் அவர்களின் அறிவிப்புகள்:
- இப்னு ஜுரைஜ் —> ஸுலைமான் பின் அபூமுஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(அல்அஹ்வல்) —> தாவூஸ் பின் கைஸான் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்- 2564, அஹ்மத்- 3468, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-621, புகாரி-7385, 7442, 7499, முஸ்லிம்-1417, குப்ரா நஸாயீ- 7656, முஸ்தக்ரஜ் அபூஅவானா-2229, 2230, …
ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா அவர்களின் அறிவிப்புகள்:
- இப்னு உயைனா —> ஸுலைமான் பின் அபூமுஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(அல்அஹ்வல்) —> தாவூஸ் பின் கைஸான் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்- 2565, அஹ்மத்- 3368, 3468, தாரிமீ- 1527, புகாரி-1120, 6317, முஸ்லிம்-1417, இப்னு மாஜா- 1355, குப்ரா நஸாயீ- 1321, 7658, நஸாயீ- 1619, முஸ்னத் அபீ யஃலா- 2404, இப்னு குஸைமா- 1151, முஸ்தக்ரஜ் அபூஅவானா-2227, இப்னு ஹிப்பான்- 2597, …
சமீப விமர்சனங்கள்