தஹஜ்ஜுத்
பாடம்: 1
இரவில் தஹஜ்ஜுத் தொழுதல்.
அல்லாஹ் கூறுகின்றான்: (முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! (அல்குர்ஆன்: 17:79)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்:
அல்லாஹும்ம! லகல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி, வல் அர்ளி, வமன் ஃபீ ஹின்ன. வலகல் ஹம்து. லக முல்க்குஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின். வலகல் ஹம்து. அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வ மன் ஃபீஹின். வலகல் ஹம்து. அன்த்த மலிக்குஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வலகல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஃதுகல் ஹக்கு. வ லிகாஉக ஹக்குன். வ கவ்லு(க்)க ஹக்குன். வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வந்நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் (ஸல்) ஹக்குன். வஸ்ஸாஅது ஹக்குன்.
அல்லாஹும்ம! லக அஸ்லம்த்து, வ பிக ஆமன்த்து, வ அலைக தவக்கல்த்து, வ இலைக அனப்த்து, வ பிக காஸம்த்து, வ இலைக ஹாகம்த்து. ஃபஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. லா இலாஹ இல்லா அன்த்த; அல்லது லா இலாஹ ஃகைருக்க.
(பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தின் ஆட்சி யும் உனக்கே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் மற்றும் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது சந்திப்பு உண்மை. உனது கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மை. முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை. மறுமை உண்மை.
இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடு வேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூஉமய்யா அப்துல் கரீம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘வ லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை புரியும் ஆற்றலோ இல்லை) என்று கூறுவார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம்: 19
(புகாரி: 1120)19 – كتاب التهجد
بَابُ التَّهَجُّدِ بِاللَّيْلِ وَقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ} [الإسراء: 79]
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَبِي مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَتَهَجَّدُ قَالَ: ” اللَّهُمَّ لَكَ الحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الحَمْدُ لَكَ مُلْكُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَلَكَ الحَمْدُ أَنْتَ الحَقُّ وَوَعْدُكَ الحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَالجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ المُقَدِّمُ، وَأَنْتَ المُؤَخِّرُ، لاَ إِلَهَ إِلَّا أَنْتَ – أَوْ: لاَ إِلَهَ غَيْرُكَ
قَالَ سُفْيَانُ: وَزَادَ عَبْدُ الكَرِيمِ أَبُو أُمَيَّةَ: «وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ»
قَالَ سُفْيَانُ: قَالَ سُلَيْمَانُ بْنُ أَبِي مُسْلِمٍ: سَمِعَهُ مِنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Bukhari-Tamil-1120.
Bukhari-TamilMisc-1120.
Bukhari-Shamila-1120.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
ஹதீஸ் எண் 1120-இல் உள்ள இந்த துஆ தஹஜ்ஜுத் தொழுகைக்கு முன்பாகவா அல்லது தக்பீர் கூறிய பிறகா கூறப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துங்கள். நான் அபூ உவானா நூலில் இந்த துஆவை நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறிய பிறகு கூறியதாகப் பார்த்தேன். இது சஹீஹ் ஆதாரமா என்பதைத் தயவுசெய்து கூறுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த துஆ தஹஜ்ஜுத் தொழுகையில் ஆரம்ப தக்பீருக்கு பிறகு ஓதவேண்டியவையாகும்.
சில ஹதீஸ்களில் தஹஜ்ஜுத் தொழுகையில் நின்றால் என்ற வாசகம் வந்துள்ளது. அபூஅவானா-2232 போன்ற வேறு சிலரின் அறிவிப்பில் ஆரம்ப தக்பீருக்கு பின் என்ற கருத்தில் வந்துள்ளது.
பலவகை அறிவிப்பாளர்தொடர்களை பார்க்கும் போது இது தக்பீருக்கு பின் என்றே தெரிகிறது. இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், இப்னு ஹஜர் போன்ற பலரும் இந்தக் கருத்தையே கூறியுள்ளனர்.
விரிவாக பார்க்க: இப்னு குஸைமா-1152.