பாடம்: 10
பயணத்தின் போது வெப்பம் தணிந்த பின் லுஹ்ரைத் தொழுவது.
அபூதர் (ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது, ‘கொஞ்சம் பொறு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மீண்டும் பாங்கு சொல்ல அவர் முனைந்தபோது ‘கொஞ்சம் பொறு’ என்றனர்.
மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை (இவ்வாறு கூறி) தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள், “கடுமையான வெப்பம், நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள்! என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தத்தஃபய்யஉ-நிழல் படிதல் என்றால், “தத்தமய்யலு-நிழல் சாய்தல் என்ற பொருளாகும் என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 9
(புகாரி: 539)بَابُ الإِبْرَادِ بِالظُّهْرِ فِي السَّفَرِ
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا مُهَاجِرٌ أَبُو الحَسَنِ مَوْلَى لِبَنِي تَيْمِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ الغِفَارِيِّ، قَالَ
كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَرَادَ المُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ لِلظُّهْرِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْرِدْ» ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ، فَقَالَ لَهُ: «أَبْرِدْ» حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ شِدَّةَ الحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ»
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «(تَتَفَيَّأُ) تَتَمَيَّلُ»
Bukhari-Tamil-539.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-539.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
- இந்த செய்தியை ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் கீழ்கண்ட எட்டு அறிவிப்பாளர்கள் (சிலர் பலமானவர்கள், சிலர் மிகப் பலமானவர்கள்) “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். முஅத்தின் (பிலால்-ரலி) லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது” என்ற கருத்தில் அறிவித்துள்ளனர். அவர்கள்:
1 . ஷபாபா பின் ஸவ்வார்.
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3282 ,
2 . அஃப்பான்.
பார்க்க: அஹ்மத்-21376 ,
3 . ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத்.
பார்க்க: அஹ்மத்-21441 ,
4 . அபுல்வலீத் தயாலிஸீ.
பார்க்க: புகாரி-3258 , அபூதாவூத்-401 , இப்னு ஹிப்பான்-1509 , குப்ரா பைஹகீ-2060 ,
5 . ஆதம் பின் அபூஇயாஸ்.
பார்க்க: புகாரி-539 ,
6 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம்.
பார்க்க: புகாரி-629 ,
7 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ.
பார்க்க: இப்னு குஸைமா-394 ,
8 . வஹ்ப் பின் ஜரீர்.
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-1113 ,
…..
1 . ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் ஜஃபர் (குன்துர்) அவர்கள், முஅத்தின் பாங்கு கூறினார்; அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கொஞ்சம் பொறு! என்று கூறினார்கள் என்று அறிவித்துள்ளார்.
பார்க்க: அஹ்மத்-21533 , முஸ்லிம்-1086 , …
இவரின் அறிவிப்பின் மூலம் முஅத்தின் பாங்கு கூறிவிட்டார் என்ற கருத்தும் உள்ளது. பாங்கு கூற நாடினார் என்ற கருத்தும் உள்ளது. குன்துர் பலமானவர் என்றாலும் இவரிடம் சில கவனக்குறைவு உள்ளது என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியுள்ளார். (தக்ரீபுத் தஹ்தீப்-1/833)
2 . ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தயாலிஸீ-ஸுலைமான் பின் தாவூத் அவர்கள், “(பிலால்-ரலி) லுஹருக்கு இகாமத் சொல்ல முனைந்தபோது” என்று அறிவித்துள்ளார்.
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-446 , திர்மிதீ-158 ,
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், (ஷுஃபாவிடமிருந்து அறிவிப்பவர்களில் ஒருவரான) அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
பற்றி இவர் முஹத்திஸ், நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர். எனவே இவரை விட அபுல்வலீத், அஃப்பான் போன்றோரே எனக்கு மிக விருப்பமானவர்கள் என்று கூறியதாக இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-491, 4/113)
- எனவே மேற்கண்ட தகவல்களிலிருந்து முஅத்தின் (பிலால்-ரலி) லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது என்ற கருத்தே சரியானது என்று முடிவு செய்யலாம்.
(இந்த செய்தியில் பயணத்தில் இருக்கும் போது வெயில் காரணமாக தொழுகையை பிற்படுத்துவது பற்றி கூறப்பட்டிருந்தாலும் உள்ளூரில் இருப்போருக்கும் இந்த சட்டம் பொருந்தும்)
- பாங்கு நேரம் வந்த பிறகு சொல்லவேண்டுமா? அல்லது தொழும் போது கூறவேண்டுமா? என்ற கருத்துவேறுபாடு பிரபலமானது என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறிவிட்டு மேற்கண்ட செய்தி தொழும்போதே கூறவேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு ஆதாரமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். (சுருக்கம்)
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-2/20)
- இப்னு ரஜப் அவர்களும் மேற்கண்ட ஹதீஸின் விளக்கத்தைப் பற்றி கூறும் போது புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் இந்த செய்தியின் மூலம் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதாக இருந்தால் பாங்கையும் ஆரம்ப நேரத்தில் கூறவேண்டும்; (சில காரணங்களால்) தொழுகையை பிற்படுத்தி தொழுவதாக இருந்தால் பாங்கையும் பிற்படுத்தி கூறவேண்டும் என்று தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். (சுருக்கம்)
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-4/250)
(சில ஆய்வாளர்கள், பாங்கை நேரத்திற்கு கூறிவிட்டு ஜமாஅத் தொழுகையை மிகவும் தாமதமாக வைப்பதால் அதில் மக்களுக்கு கவனமில்லாமல் போய்விடுகிறது. நேரத்திற்கு பாங்கு கூறிவிட்டால் ஜமாஅத் தொழுகையையும் குறைந்த நேரத்தில் வைத்துவிட வேண்டும். மக்களின் சூழ்நிலைக்கேற்ப தொழுகையை பிற்படுத்துவதாக இருந்தால் பாங்கையும் அதற்கேற்றவாறு கூறவேண்டும் என்றும் கூறியுள்ளனர்)
இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-446 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3282 , அஹ்மத்-21376 , 21441 , 21533 , புகாரி-535 , 539 , 629 , 3258 , முஸ்லிம்-1086 , அபூதாவூத்-401 , திர்மிதீ-158 , முஸ்னத் பஸ்ஸார்-3982 , இப்னு குஸைமா-328 , 394 , இப்னு ஹிப்பான்-1509 , குப்ரா பைஹகீ-2060 , 2061 , 2062 ,
அஸ்ஸலாமு அலைக்கும்
பாங்கு நேரத்திற்கு சொல்ல வேண்டுமா இல்லை தொழுகைக்கு சொல்ல வேண்டுமா இந்த ஹதீஸ் ஷரீபுக்கு என்னங்க ஜீ விளக்கம்
வ அலைக்கும் ஸலாம்.
இதைப் பற்றி விளக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.