தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-882

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்: 50

தொழுபவருக்கு முன்னால் தடுப்பு எந்த அளவு இருக்க வேண்டும்?

 அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தானைப் போன்றதாகும் என்று கூறினார்கள் என்றார்கள்.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அத்தியாயம்: 4

(முஸ்லிம்: 882)

50 – بَابُ قَدَرِ مَا يَسْتُرُ الْمُصَلِّي

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، ح قَالَ: وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ يُونُسَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِذَا قَامَ أَحَدُكُمْ يُصَلِّي، فَإِنَّهُ يَسْتُرُهُ إِذَا كَانَ بَيْنَ يَدَيْهِ مِثْلُ آخِرَةِ الرَّحْلِ، فَإِذَا لَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مِثْلُ آخِرَةِ الرَّحْلِ، فَإِنَّهُ يَقْطَعُ صَلَاتَهُ الْحِمَارُ، وَالْمَرْأَةُ، وَالْكَلْبُ الْأَسْوَدُ» قُلْتُ: يَا أَبَا ذَرٍّ، مَا بَالُ الْكَلْبِ الْأَسْوَدِ مِنَ الْكَلْبِ الْأَحْمَرِ مِنَ الْكَلْبِ الْأَصْفَرِ؟ قَالَ: يَا ابْنَ أَخِي، سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي فَقَالَ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ»

-حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، ح قَالَ: وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، ح قَالَ: وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، ح قَالَ: وَحَدَّثَنَا إِسْحَاقُ، أَيْضًا أَخْبَرَنَا، الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ سَلْمَ بْنَ أَبِي الذَّيَّالِ، ح قَالَ: وَحَدَّثَنِي يُوسُفُ بْنُ حَمَّادٍ، الْمَعْنِيُّ حَدَّثَنَا زِيَادٌ الْبَكَّائِيُّ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ كُلُّ هَؤُلَاءِ عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، بِإِسْنَادِ يُونُسَ كَنَحْوِ حَدِيثِهِ


Muslim-Tamil-882.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-510.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-794.




ஆய்வுக்காக: حديث مرور المراة والكلب والحمار بين يدي المصلي.


ஆய்வின் சுருக்கம்:

மேற்கண்ட செய்தியில் “தொழும்போது முன்னால் சுத்ரா எனும் ஏதேனும் தடுப்பை வைத்துக்கொள்ளவேண்டும். அந்த தடுப்பு இல்லாதபோது கழுதை, பெண், கறுப்புநாய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று குறுக்கே கடந்து சென்றால் அது தொழுகையை முறித்துவிடும்” என்று வந்துள்ளது.

இந்தக் கருத்து அபூதர் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி), அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வழியாக சரியான அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக வந்துள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) போன்ற வேறு சில நபித்தோழர்களின் சொல்லாகவும், சில தாபிஈன்களின் சொல்லாகவும் வந்துள்ளது.

இந்தச் சட்டம் பற்றி ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர்கள் இதை மறுக்கிறார்கள். (பார்க்க: புகாரி-514)

சரியான ஹதீஸ்களின்படி பார்க்கும் போது இந்தக் கருத்துவேறுபாடு நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ளது என்றே தெரிகிறது. இந்தச் செய்தி வெளிப்படையில் பார்க்கும்போது நபியின் சொல்லும், நபியின் செயலும் முரண்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழும்போது நான் குறுக்கே படுத்து இருப்பேன் என்று குறிப்பிட்டுவிட்டு இதே போன்று ஒருவர் தொழும்போது குறுக்கே கடந்து செல்வது தொழுகையை முறிக்காது என்று கூறுகிறார்கள்.

இந்த இரண்டு வகையான ஹதீஸ்களின் காரணமாக அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

1 . முதல் கருத்து:

இந்த சட்டம் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு மாற்றப்பட்டுவிட்டது என்று சிலர் கூறுகின்றனர்.

2 . இரண்டாவது கருத்து:

வேறு சிலர் இந்த இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து விளக்கம் கூறுகின்றனர். அதாவது தொழுகையை முறிக்கும் என்பதன் பொருள் என்னவென்றால் தொழுகையில் இருக்கும்போது இது கவனத்தை திருப்பி ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தியோ அல்லது இறையச்சத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியோ தொழுகையை முறித்துவிட வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.

3 . மூன்றாவது கருத்து:

தொழும் இடத்திற்கு முன்னால் தடுப்பு வைக்க வேண்டும். தடுப்பு வைக்காமல் இருந்து மூன்று பேரில் யார் கடந்து சென்றாலும் அது தொழுகையை முறித்து விடும். தடுப்பு வைத்துவிட்டு கடந்து சென்றால் அது தொழுகையை முறிக்காது. இதில் அறிவிக்கு வேலை இல்லை என்றும் கூறுகின்றனர்.

மேலும் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் கூறியிருப்பது அவர்களின் தனிப்பட்ட ஆய்வுக் கருத்து தான். அவர்கள் தொழும்போது குறுக்கே கடந்துச் செல்வதைக் குறித்து பேசவில்லை என்பதால் குறுக்கே படுத்து இருப்பது வேறு; குறுக்கே கடந்து செல்வது வேறு என்று இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
போன்றவர்கள் வித்தியாசம் கூறுகின்றனர். … (பார்க்க: இப்னு குஸைமா-831)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 


1 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-883.


3 . அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-16797.


4 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-7461.


5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
, இப்னு அப்பாஸ் …


6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24546.


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-514,


அபூதாவூத்-702, முஸ்னத் பஸ்ஸார்-7461, இப்னு குஸைமா-831, … / புகாரி-493, 511, 514, தாரகுத்னீ-1380, 1381, 1382, 1383, 1384, 1385, 1386, 1387, 1388, …


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.