தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1925

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் மற்றும் அதாஉ பின் யசார் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

நாங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று “ஹரூரிய்யா”க்கள் (காரிஜிய்யாக்கள்) குறித்துக் கேட்டோம். “அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?” என்று வினவினோம். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஹரூரிய்யா”க்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், (பின்வருமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்:

இந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் புறப்படுவர். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இந்தச் சமுதாயத்தைவிட்டும்” என்று கூறாததைக் கவனத்தில் கொள்க.) அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையை நீங்கள் அற்பமாகக் கருதுவீர்கள். அவர்கள் (அதிகமாகக்) குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அம்பெய்தவர் (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனையையும், (அம்பில்) அதன் முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும் நாணையும் பார்ப்பார். (அவற்றில் அடையாளம் எதையும் காணமாட்டார்.) அம்பின் முனையில் நாணைப் பொருத்தும் இடத்தில் இரத்தம் படிந்துள்ளதா என்றுகூட அவர் சந்தேகப்படுவார்.

Book : 12

(முஸ்லிம்: 1925)

وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، وَعَطَاءِ بْنِ يَسَارٍ

أَنَّهُمَا أَتَيَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، فَسَأَلَاهُ عَنِ الْحَرُورِيَّةِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُهَا قَالَ: لَا أَدْرِي مَنِ الْحَرُورِيَّةُ، وَلَكِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” يَخْرُجُ فِي هَذِهِ الْأُمَّةِ – وَلَمْ يَقُلْ: مِنْهَا – قَوْمٌ تَحْقِرُونَ صَلَاتَكُمْ مَعَ صَلَاتِهِمْ، فَيَقْرَءُونَ الْقُرْآنَ، لَا يُجَاوِزُ حُلُوقَهُمْ – أَوْ حَنَاجِرَهُمْ – يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، فَيَنْظُرُ الرَّامِي إِلَى سَهْمِهِ إِلَى نَصْلِهِ إِلَى رِصَافِهِ، فَيَتَمَارَى فِي الْفُوقَةِ، هَلْ عَلِقَ بِهَا مِنَ الدَّمِ شَيْءٌ


Tamil-1925
Shamila-1064
JawamiulKalim-1771




3 comments on Muslim-1925

  1. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
    ஓர் அடியாரின் உயிர் அவருடைய தொண்டைக்குழிக்கு வந்து அவருக்கு மரண நிலை ஏற்படாதிருக்கும் காலமெல்லாம் அவருடைய தவ்பாவை – பாவமன்னிப்புக் கோரலை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். இதனை இப்னு உமர் -அவர்கள் அறிவிக்கிறார்கள் .
    திர்மிதீ 3450 ,இப்னுமாஜா 4253,முஸ்னத் அஹ்மத் 6160,6408

    இந்த செய்தியின் தரத்தை உங்கள் தளத்தில் தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்? நம்பர் அந்த வார்த்தை போட்டு தேடி பார்த்தேன் வரவில்லை. இன்ஷா அல்லாஹ் எப்படி என்று சொல்லவும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      பார்க்க : திர்மிதீ-3537 .
      மக்தபதுஷ் ஷாமிலா வில் உள்ள ஹதீஸ் நூல்களில் கூறப்படும் எண்களையே நாங்கள் பயன்படுத்துகிறோம். ஒரு நூல் ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புகளில் உள்ளது. ஹதீஸ்களை கணக்கிடும் முறைகள் பலவாறு இருப்பதால் ஹதீஸ் எண் மாறுபடும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.