தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-603

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 10

பாங்கு

பாடம்: 1

பாங்கின் துவக்கம்.

அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்; இதற்குக் காரணம் அவர்கள் அறிவில்லா மக்களாக இருப்பதேயாம். (அல்குர்ஆன்: 5:58)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க(ப் பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள். (அல்குர்ஆன்: 62:9)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருப்பை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது.

(பிறகு பாங்கு கனவில் காட்டப்பட்டு அமலுக்கு வந்தபோது) பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும், இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால் (ரலி) அவர்கள் ஏவப்பட்டார்கள்.

அத்தியாயம்: 10

(புகாரி: 603)

10 – كِتَابُ الأَذَانِ

بَابُ بَدْءِ الأَذَانِ

وَقَوْلُهُ عَزَّ وَجَلَّ: (وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلاَةِ اتَّخَذُوهَا هُزُؤًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لاَ يَعْقِلُونَ)، وَقَوْلُهُ {إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الجُمُعَةِ} [الجمعة: 9]

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ

ذَكَرُوا النَّارَ وَالنَّاقُوسَ، فَذَكَرُوا اليَهُودَ وَالنَّصَارَى «فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ»


Bukhari-Tamil-603.
Bukhari-TamilMisc-603.
Bukhari-Shamila-603.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


சிலர் இந்தச் செய்தியின் இரண்டு பகுதியை அறிவித்துள்ளனர். வேறு சிலர் இரண்டாவது பகுதியை மட்டும் அறிவித்துள்ளனர்.


3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூகிலாபா —> அனஸ் (ரலி)

பார்க்க: …அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-6036056066073457 , முஸ்லிம்-619620621622 , இப்னு மாஜா-729 , 730 , அபூதாவூத்-508 , திர்மிதீ-193 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-627 , …


மேலும் பார்க்க: புகாரி-604 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.