தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2359

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“தமத்துஉ” முறை ஹஜ் பற்றிய வசனம் (2:196) இறைவேதத்தில் அருளப்பெற்றது. அவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். “தமத்துஉ” முறை ஹஜ் பற்றிய அந்த வசனத்தைக் காலாவதியாக்கக்கூடிய வேறெந்த வசனமும் பின்னர் அருளப்பெறவு மில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் இறக்கும்வரை அதற்குத் தடை விதிக்கவுமில்லை. பின்னர் ஒரு மனிதர் (மட்டும்) தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.

Book : 15

(முஸ்லிம்: 2359)

حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، وَمُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَا: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُسْلِمٍ، عَنْ أَبِي رَجَاءٍ، قَالَ: قَالَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ

«نَزَلَتْ آيَةُ الْمُتْعَةِ، فِي كِتَابِ اللهِ – يَعْنِي مُتْعَةَ الْحَجِّ – وَأَمَرَنَا بِهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لَمْ تَنْزِلْ آيَةٌ تَنْسَخُ آيَةَ مُتْعَةِ الْحَجِّ، وَلَمْ يَنْهَ عَنْهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى مَاتَ» قَالَ رَجُلٌ بِرَأْيِهِ: بَعْدُ، مَا شَاءَ


Tamil-2359
Shamila-1226
JawamiulKalim-2166




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.