தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-687

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51 மக்கள் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவே இமாம் நியமிக்கப்படுகிறார்.

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோய்விட்டார்களோ அந்த நோயின் போது உட்கார்ந்தவாறே மக்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இமாம் (குனிவு, சிரவணக்கம் போன்றவற்றிலிருந்து) தலையை உயர்த்துவதற்கு முன் (பின்பற்றித் தொழும்) ஒருவர் (தமது தலையை) உயர்த்திவிட்டால், தாம் (தலையை) உயர்த்திய அளவு நேரம் (மீண்டு சென்று பொறுத்து இருந்துவிட்டு பிறகு இமாமைப் பின்தொடர வேண்டும்.

இமாமுடன் இரண்டு ரக்அத்கள் தொழும் ஒருவர் (நெரிசல் முதலிய காரணங்களால்) (முதல் ரக்அத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய முடியாமற் போய்விடுகிறது. இவரைப் பற்றிக் கூறுகையில் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், அவர் இரண்டாவது ரக்அத்திற்குரிய இரு சஜ்தாக்களை செய்வார். பிறகு முதல் ரக்அத்தையும் அதன் சஜ்தாவையும் (எழுந்து) மீண்டும் நிறைவேற்றுவார் என்று சொன்னார்கள். ஒரு சஜ்தா செய்யாமல் மறந்து எழுந்துவிட்டால் உடனே சஜ்தாவுக்கு சென்று விட வேண்டும் என்றும் கூறினார்கள். 

 உபைதுல்லாஹ் கூறினார்:

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று ‘நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்! நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம்.
அப்போது ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம். அப்போது ‘பாத்திரததில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வையுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள்.

பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை; இறைத்தூதர் அவர்களே! அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றோம். அப்போது மக்கள் பள்ளிவாசலில் இஷாத் தொழுகைக்காக நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ஒருவரை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அம்மனிதர் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களுக்குக் கட்டளையிட்டார்கள்’ என்றார்கள்.

அபூ பக்ர்(ரலி) இளகிய உள்ளமுடையவர்களாக இருந்தார்கள். எனவே உமர்(ரலி) அவர்களிடம், ‘உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்றார்கள். அதற்கு, நீங்கள் தாம் தகுதியனாவர்கள்’ என்று உமர்(ரலி) கூறிவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் நோயுற்ற அந்த நாள்களிலே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குக் கொஞ்சம் சுகம் கிடைத்தபோது, அப்பாஸ்(ரலி) மற்றும் ஒருவரின் உதவியோடு லுஹர் தொழுகைக்காக வெளியே வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வருவதைக் கண்ட அபூ பக்ர்(ரலி) தம் இடத்திலிருந்து பின் வாங்கினார்கள். அப்போது ‘பின் வாங்க வேண்டாம்’ என அவர்களுக்கு சைகை செய்தார்கள். தம்மை அழைத்து வந்த இருவரிடமும், ‘என்னை அபூ பக்ரின் அருகில் அமர்த்துங்கள்’ எனக் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் உட்காரவும் வைத்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து அபூ பக்ர்(ரலி) தொழுதார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து மக்கள் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள்.

நான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்ததைப் பற்றி ஆயிஷா(ரலி) எனக்கு அறிவித்ததை நான் உங்களுக்குக் கூறவா? என்று கேட்டேன். ‘அதற்கு சொல்லுங்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது ஆயிஷா(ரலி) சொன்னதை அறிவித்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை என்றாலும், ‘அப்பாஸ்(ரலி) உடன் நபி(ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற இன்னொரு மனிதரின் பெயரை ஆயிஷா(ரலி) சொன்னார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை என்றேன். ‘அவர் தாம் அலீ(ரலி)’ எனக் கூறினார்கள்.
Book : 10

(புகாரி: 687)

بٌ: إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ

وَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ بِالنَّاسِ وَهُوَ جَالِسٌ

وَقَالَ ابْنُ مَسْعُودٍ: «إِذَا رَفَعَ قَبْلَ الإِمَامِ يَعُودُ، فَيَمْكُثُ بِقَدْرِ مَا رَفَعَ، ثُمَّ يَتْبَعُ الإِمَامَ»

وَقَالَ الحَسَنُ: ” فِيمَنْ يَرْكَعُ مَعَ الإِمَامِ رَكْعَتَيْنِ وَلاَ يَقْدِرُ عَلَى السُّجُودِ، يَسْجُدُ لِلرَّكْعَةِ الآخِرَةِ سَجْدَتَيْنِ، ثُمَّ يَقْضِي الرَّكْعَةَ الأُولَى بِسُجُودِهَا، وَفِيمَنْ نَسِيَ سَجْدَةً حَتَّى قَامَ: يَسْجُدُ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ

دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ: أَلاَ تُحَدِّثِينِي عَنْ مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: بَلَى، ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَصَلَّى النَّاسُ؟» قُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ، قَالَ: «ضَعُوا لِي مَاءً فِي المِخْضَبِ». قَالَتْ: فَفَعَلْنَا، فَاغْتَسَلَ، فَذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَّى النَّاسُ؟» قُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «ضَعُوا لِي مَاءً فِي المِخْضَبِ» قَالَتْ: فَقَعَدَ فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ: «أَصَلَّى النَّاسُ؟» قُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «ضَعُوا لِي مَاءً فِي المِخْضَبِ»، فَقَعَدَ، فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ فَقَالَ: «أَصَلَّى النَّاسُ؟» فَقُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، وَالنَّاسُ عُكُوفٌ فِي المَسْجِدِ، يَنْتَظِرُونَ النَّبِيَّ عَلَيْهِ السَّلاَمُ لِصَلاَةِ العِشَاءِ الآخِرَةِ، فَأَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَبِي بَكْرٍ بِأَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، فَأَتَاهُ الرَّسُولُ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكَ أَنْ تُصَلِّيَ بِالنَّاسِ، فَقَالَ أَبُو بَكْرٍ – وَكَانَ رَجُلًا رَقِيقًا -: يَا عُمَرُ صَلِّ بِالنَّاسِ، فَقَالَ لَهُ عُمَرُ: أَنْتَ أَحَقُّ بِذَلِكَ، فَصَلَّى أَبُو بَكْرٍ تِلْكَ الأَيَّامَ، ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ مِنْ نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ أَحَدُهُمَا العَبَّاسُ لِصَلاَةِ الظُّهْرِ وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ لِيَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنْ لاَ يَتَأَخَّرَ، قَالَ: أَجْلِسَانِي إِلَى جَنْبِهِ، فَأَجْلَسَاهُ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ، قَالَ: فَجَعَلَ أَبُو بَكْرٍ يُصَلِّي وَهُوَ يَأْتَمُّ بِصَلاَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ بِصَلاَةِ أَبِي بَكْرٍ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ،

قَالَ عُبَيْدُ اللَّهِ: فَدَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ فَقُلْتُ لَهُ: أَلاَ أَعْرِضُ عَلَيْكَ مَا حَدَّثَتْنِي عَائِشَةُ عَنْ مَرَضِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: هَاتِ، فَعَرَضْتُ عَلَيْهِ حَدِيثَهَا، فَمَا أَنْكَرَ مِنْهُ شَيْئًا غَيْرَ أَنَّهُ قَالَ: أَسَمَّتْ لَكَ الرَّجُلَ الَّذِي كَانَ مَعَ العَبَّاسِ قُلْتُ: لاَ، قَالَ: هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.