ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றபோது, தங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து தொழுதார்கள். அவர்களின் பின்னால் சிலர் நின்றவாறே தொழுதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அமரும் படி சைகை செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்த பின்னர், “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்” எனக் கூறினார்கள்.
அத்தியாயம்: 10
(புகாரி: 688)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ
صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهِ وَهُوَ شَاكٍ، فَصَلَّى جَالِسًا وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ، فَارْكَعُوا وَإِذَا رَفَعَ، فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا»
Bukhari-Tamil-688.
Bukhari-TamilMisc-688.
Bukhari-Shamila-688.
Bukhari-Alamiah-647.
Bukhari-JawamiulKalim-650.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல் (2. மிகப் பலமானவர்).
2 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப்-அல்கலாயீ (2. மிகப் பலமானவர்).
4 . ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
பின் ஸுபைர்-அல்அஸதீ (3. பலமானவர்).
5 . உர்வா பின் ஸுபைர்-அல்அஸதீ (3. பலமானவர்).
சமீப விமர்சனங்கள்