தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-694

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 55

தலைமைத் தாங்கித் தொழுவித்துக் கொண்டிருப்பவர் (தொழுகையை) முழுமைப் படுத்தாவிட்டாலும் அவருக்கு பின்னால் இருப்பவர்கள் (அதை) முழுமைப்படுத்த வேண்டும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘(இமாமாக நியமிக்கப் படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள்; அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும்; அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 10

(புகாரி: 694)

بَابُ إِذَا لَمْ يُتِمَّ الإِمَامُ وَأَتَمَّ مَنْ خَلْفَهُ

حَدَّثَنَا الفَضْلُ بْنُ سَهْلٍ، قَالَ: حَدَّثَنَا الحَسَنُ بْنُ مُوسَى الأَشْيَبُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ»


Bukhari-Tamil-694.
Bukhari-TamilMisc-694.
Bukhari-Shamila-694.
Bukhari-Alamiah-653.
Bukhari-JawamiulKalim-656.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . ஃபள்ல் பின் ஸஹ்ல்

3 . ஹஸன் பின் மூஸா

4 . அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார்

5 . ஸைத் பின் அஸ்லம்

6 . அதாஉ பின் யஸார்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21934-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

இவரைப் பற்றி விரிவாக ஆய்வு செய்த சிலர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்…

(நூல்: அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார் பைனத் தவ்ஸீகி வத்தள்ஈஃப்)


இந்தக் கருத்தை இவர் மட்டும் தனித்து அறிவிக்கவில்லை. வேறு சிலரும் அறிவித்துள்ளனர் என்பதால் தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இதை பதிவு செய்துள்ளார்.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-, புகாரி-694, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா பைஹகீ-,


  • ஸஃப்வான் பின் ஸுலைம் —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க:


ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-580,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.